Minner.no முறைமை
Minner.no ஐ DsporA Tamil Archive தொடர்பு கொண்டபோது, அவர்களும் இதே போன்ற செயல்முறையை கடப்பிடித்ததை கண்டறிந்தோம். ஆனால் அவை வாய்மொழி வரலாற்றுக் கோப்புகளை ஆராய்ச்சிப் பொருட்களாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். எனவே அவை ஆராய்ச்சி நோக்கங்களுக்கான விரிவான ஒப்புதல் படிவத்தைக் கொண்டுள்ளன. அவை ஒன்றில் பரவலான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத் திட்டத்துடன் கோப்புகளை இணையதளத்தில் கிடைக்கச் செய்கின்றன. ஒப்புதல் படிவம் ஒரு தற்காலிகமான இடைத்தரகர் பணியைச் செய்கின்றது. இது நேர்காணப்படும் நபர் கோப்பை தாமே நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் வரை அந்த ஒப்புதல் படிவம் தனது பணியைச் செய்யும். அதாவது, நேர்காணப்படும் நபர் எந்த நேரத்திலும் தனது நேர்காணல் கோப்பை இணையவழி அணுக்கத்திலிருந்து திரும்பப் பெறலாம் அல்லது எதிர்காலத்திற்காக அக்கோப்பை minner.no இல் விடலாம்.
Memoar.no முறைமை
வாய்மொழி வரலாற்றிற்கான “Memoar முறை” ஒரு கையேடாக அவர்களின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நேர்காணல் திட்டம் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அதனால் ஒரு வழிகாட்டி அனைத்து கருப்பொருள்கள் அல்லது தலைப்புகளிற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் நேர்காணல்களுக்கான வழிகாட்டி அல்லது வார்ப்புரு (Template) அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றனர். இப்பயிற்சி வகுப்புகள் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கருப்பொருள்களை பதிவு செய்ய விரும்பும் குழுக்கள் / அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது. பொதுவாக, உள்ளூர் வரலாற்றுக் குழுக்கள், அருங்காட்சியகங்கள் அல்லது பள்ளிகள் தங்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடப் போவதாக இருப்பார்கள் அல்லது இதுபோன்ற பேறு தருணங்களையொட்டி இப்பயிற்சி பகுப்புகளில் பங்கேற்கின்றனர். Memoar இணைய வழியில் இப்பயிற்சி பகுப்புகளை வழங்குகின்றது அவர்கள் ஆங்கிலத்திலும் பயிற்சி பகுப்புகளை நடாத்துவார்கள். ஆனால் பங்கேற்பாளர்கள் அல்லது வாய்மொழி வரலாறுத் தலைப்புகள் நோர்வேயுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும்.