வாய்மொழி வரலாறு என்றால் என்ன?
வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழி பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். வாய்மொழி பாரம்பரியம், “orality” என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித தொடர்பாடல்களில் பயன்பட்டு வரும் முதன்மைமான ஊடகம். இந்த ஊடகம் இன்றும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. “இது வெறுமனவே பேசுதலை விட, வாய்மொழி பாரம்பரியம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவு, கலை மற்றும் சிந்தனையை கட்த்தி உருவாக்குவதற்கான ஊடகம் ஆகும். இது அறிவு, கலை மற்றும் சிந்தனையை, சேமிப்பதற்கும், கடத்துவதற்கான ஒரு மாற்றத்துக்குள்ளாகும் (dynamic) மற்றும் மிகவும் மாறுபட்ட (diverse) வாய்மொழி ஊடகம் ஆகும்.
“வாய்மொழி வரலாறு பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுகளையும் தனிப்பட்ட வர்ணனைகளையும் சேகரிக்கிறது. ஒரு வாய்மொழி வரலாற்று நேர்காணல் பொதுவாக நன்கு தயார்படுத்திய நேர்காணல் காண்பவர் ஒரு நேர்காணப்படும் நபரிடம் கேள்வி கேட்பது மற்றும் அவர்களின் பரிமாற்றத்தை ஒலி அல்லது ஒளி வடிவத்தில் பதிவு செய்வது ஆகும். நேர்காணலின் பதிவுகள் எழுத்துருவாக படியெடுக்கப்பட்டு (transcribed), விவரணக் குறிப்பு இணைக்கப்பட்டு (summarized) அல்லது குறியிடப்பட்டு (indexed) பின்னர் ஒரு நூலகம் அல்லது ஆவணகத்தில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நேர்காணல்கள் ஒரு வெளியீடு, வானொலி அல்லது காணொளி ஆவணப்படம், அருங்காட்சியக கண்காட்சி, நாடகமாக்கல் அல்லது பிற பொது விளக்கக்காட்சிகளில் ஆராய்ச்சி செய்யப்படலாம் அல்லது பயன்படுத்தப்படலாம். பதிவுகளின் எழுத்துரு படியேடுகள் (transcribtion), பட்டியல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணப் பொருட்களையும் இணையத்தில் வெளியிடலாம். ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் (President Richard Nixon) தனது வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரைகள் போன்ற பதிவுகள் வாய்மொழி வரலாறு அல்ல. அதோடு பதிவுசெய்யப்பட்ட உரைகள், வயர்டேப்பிங் (wiretapping), ஒலி நாடாவில் பதியப்பட்ட தனிப்பட்ட நாட்குறிப்புகள் அல்லது நேர்காணல் செய்பவருக்கும் நேர்காணப்படும் நபருக்கும் இடையிலான உரையாடல் இல்லாத பிற ஒலி பதிவுகளை இது குறிக்கவில்லை. ”
Donald Ritchie (டொனால்ட் ரிச்சி)
சங்க காலத்தில் தமிழர்களிடம் நிர்வாகப் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் முறைமை இருந்திருப்பதற்கான சான்றுகளுக்கு அவர்களது கடல் வணிகம் ஒரு உதாரணமாக அமைகின்றது. இணையாக, நாட்டுப்புறவியல் மற்றும் பிற வாய்மொழி பாரம்பரியங்களும் இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது, நிர்வாக பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் கூட வாய்மொழிப் பாரம்பரியமாக உருமாரி வருகின்றன. இந்த நிலை புலம்பெயர் நாடுகளில் பரவலாக உள்ளது.