முகப்பு

வணக்கம் │Vaṇakkam │Welcome │Velkommen

ஒரு வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமையைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

எமது செயல்பாடுகள்

சுவடிகள் காப்பு விழிப்புணர்வு

சுவடிகள் காப்பு

பரப்புதல்

வெளியீடு: பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு அன்ரனி இராஜேந்திரம்

அன்ரனி இராஜேந்திரம் அவர்களுக்கு இனிய 90வது பிறந்த ஆண்டு வாழ்த்துக்கள்
(20.06.1932 – 12.09.1990)

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு வெளியீடு: 20. யூன் 2022

ஆதரவும் ஒத்துழைப்பும்

ஒரு நூல் திட்டத்தின் மூலம் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதற்கான முயற்சி 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த முயற்சி படிப்படியாக புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களாக (DiasporA Tamil Archives) உருவானது.

2018ம் ஆண்டு முதல் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் நோர்வேயில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் ஆலோசனை, வழிகாட்டல், ஆதரவு, ஒத்துழைப்புடன் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றையும், புலம்பெயர் தமிழர் வரலாறு மற்றும் பாரம்பரியத்தையும் கைப்பற்றவும், பாதுகாக்கவும், பேணிப் பாதுகாக்கவும், பரவலாக்கவும் பணி செய்து வருகின்றது.

சமூகப் பங்கேற்புக் காப்பகங்கள் (community and participatory archives) சமூக மட்டத்தில் உருவாகும் ஒரு கூட்டுச் செயல்பாடு ஆகும். இச்செயல்பாட்டை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. இதை மேலும் பலப்படுத்த தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பணிபுரிய நாம் ஆர்வமாக உள்ளோம்.

இணைக
எமது உறுப்பினராக வாருங்கள்! வருடத்திற்கு 100 நோர்வேயிய குரோனர்கள்

எம்மைப் பற்றி

இடுகைகளை முதல் நபராகப் படிக்க

சமீபத்திய பதிவுகள்