வாய்மொழி வரலாறு: பேணிப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு
ஒலி மற்றும் ஒளி பங்களிப்புகளைப் பேணிப் பாதுகாக்க தற்போது minner.no ஐப் பயன்படுத்தும் பல பயனாளர்களில் Memoar ஒன்றாகும். இருப்பினும், ஒலி மற்றும் ஒளி வடிவிலான ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பது குறித்து தொடர்ந்த விவாதம் உள்ளன. Memoar கூற்றுப்படி, தற்பேதைய சூழலில் இவ்வகையான தனியார் ஆவணங்கள் (private archive) நிரந்தரமாக சேமித்துப் பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவொரு களஞ்சியமும் பெற்றுக் கொள்வதில்லை. நோர்வேயிய தேசிய நூலகம் இச்செயற்பாட்டில் உள்ளது, ஆனால் அவை தனியார் ஆவணங்களை (private archive) பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தயாராகுவதற்கு இன்னும் சில படி முறைகள் மீதமுள்ளது. அவர்கள் அதற்குத் தயாரானதும் தனியார் ஆவணங்களும் (private archive) அவர்களின் சேகரிப்பில் ஒரு பகுதியாக அமையலாம்.
மேலதிக விபரம்: www.abmdig.no
இடைப்பட்ட காலத்தில், Memoar ஒரு தற்காலிக தனியார் உள்ளக ஆவணகத்தை உருவாக்குகிறது.
மேலதிக விபரம்: www.memoar.no/infrastruktur
தவிர, அவர்கள் தமது ஒலி மற்றும் ஒளிப் பதிவுகளை தங்கள் செயற்திட்டமான “Muntlig historie for alle” (“அனைவரின் வாய்மொழி வரலாறு”/ “Oral history for everyone”) மூலம் minner.no க்கு வழங்குகிறார்கள். அங்கிருந்து அது “Norsk Folkeminnesamling” (நோர்வேயிய நாட்டுப்புற நினைவக சேகரிப்பு/ Norwegian Folk Memory Collection) இற்க்குச் செல்லும். எனினும் இது நிரந்தர தீர்வு அல்ல.
இதுவரை, Memoar தாமாகவே வாய்மொழிப் பதிவுக் கொப்புகளை உருவாக்கி, சேகரித்து வருகின்றது. அதோடு உள்ளூர் வரலாற்றுக் கழகங்கள் (historielagene) மற்றும் பிற செயற்திட்டக் குழுக்களிடமிருந்தும் அதனை சேகரிக்கின்றது.
ஆவணப்படுத்தலிற்கான நிரந்தரக் களஞ்சியம் உருவாகும் வரை இவ்வமைப்பு தமது சேகரிப்பை தங்களது Dropbox இல் சேமிக்கின்றனர். Memoar தனது வலைத்தளத்திலும் வெளியிடுகின்றது.
நூலாக நிறுவனம் தனது வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை Creative Commons licence (கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்) இன் கீழ் aavanaham.org இல் அணுக்கத்திற்கு கிடைக்கச் செய்கின்றது.