விக்கி தகவல் காணொளி மற்றும் ஊடக உரையாடல்

14.01.2023 – உரை மற்றும் வீக்கி காட்ச்சிக்கூடம்

ஓசுலோவில் உள்ள நோர்வேயிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அன்னை/தமிழர் வள ஆலோசலை மையம் இணைந்து நடாத்திய பொங்கல் விழாவில் ஓலா அல்ஸ்விக் மற்றும் மரியன்னே விக் ஆகியோர் Lokalhistoriewiki.no இல் நடைபெறும் தமிழ்ச் செயற்திட்டம் குறித்து உரை நிகழ்த்தினர். விழாவில் வீக்கி காட்ச்சிக்கூடமும் அமைக்கப்பட்டது. 06 சனவரி 2023 அன்று தமிழ் திட்டம் பற்றி நோர்வே தேசிய நூலகத்தில் படமாக்கப்பட்ட தகவல் காணொளி காட்ச்சிக்கூடத்தில் காண்பிக்கப்பட்டது.

29.01.2023 – Screening of Wiki info video

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 44வது பொங்கல் விழாவில் Lokalhistoriewiki இன் தமிழ் செயல்திட்டம் பற்றிய தகவல் காணொளி திரையிடப்பட்டது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு –  Flash Digital Norway.
திரையில்: ஓலா அல்ஸ்விக், நோர்வே தேசிய நூலகத்தில் ஆராய்ச்சி நூலகர். மரியன்னே வீக், நோர்வேயின் தேசிய நூலகத்தில் இயங்கும் Lokalhistoriewiki இன் ஒருங்கிணைப்பாளர். ஜோஹன்னே பெர்க்விஸ்ட், ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தில் வரலாற்றாசிரியர். அத்துடன் விலாசினி வாமதேவன், நிறோஜா மதிவதனன் மற்றும் சமரன் வேதானந்தன் ஆகியோர் விக்கிப் பட்டறையில் கலந்து கொண்டு Lokalhistoriewiki.no இல் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

டிசம்பர் 05, 2022 அன்று நடந்த தகவல் கூட்டத்தில், இந்தத் திட்டத்தின் பணிக்குழுவினர் ஒரு தகவல் காணொளி உருவாக்கி, அதனை 29. சனவரி 2023 அன்று பொங்கல் நிகழ்வில் திரையிடுவதற்கான வாய்ப்பை நோர்வே தமிழ்ச் சங்கம் உருவாக்கியது. Lokalhistoriewiki இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டத்திற்கான தகவல் காணொளி உருவாக்கம் 06 சனவரி 2023 அன்று நோர்வே தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

06.02.2023 – வசீகரன் கிரியேஷன் வலையொளித் தளத்தில் உரையாடல்

Ola Alsvik மற்றும் விக்கி பட்டறைகளில் பங்கேற்ற விலாசினி வாமேதேவன் மற்றும் மதுஷியா பிரபாகரன் ஆகியோர் Vaseeharan Creation எனும் வலையொளித் தளத்தில் சமூக உரையாடல் இன்றில் பங்கேற்றனர். இத்திட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நோர்வேயியம் மற்றும் தமிழ் மொழியில் பேசப்பட்டது.


மேலதிகத் தகவல்

About the project and its activities and development at Diaspora Tamil Archives:


புதுப்பிப்பு│Update: 04.03.2023

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: