ஒரு வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமையைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

வழிமுறைகள்

1. சுவடிகள் காப்பகப்படுத்தல் விழிப்புணர்வு

பதிவுகள் வைத்திருத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரப்ப உதவலாம்.

அல்லது

உங்கள் நிறுவனம்/ அமைப்பு ஆவணப்படுத்தல் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ள ஒரு ஆவணக்காப்புப் பட்டறையை ஒழுங்கு செய்யலாம்.

2. நிறுவனத்தில்/ அமைப்பில் ஒரு ஆவணக்களரி உருவாக்குதல்

ஒரு பதிவேட்டு மேலாளரை உருவாக்கி நியமியுங்கள்

இன்று முதல் உங்கள் செயல்பாடுகளின் பதிவுகளை ஆவணப்படுத்திப் பேணிப் பாதுகாக்கும் முறையை ஆரம்பிக்க உங்கள் நிறுவனத்தில்/ அமைப்பில் ஒரு ஆவணக்களரி உருவாக்குதல். இன்றைய நடவடிக்கைகளின் பதிவுகள் ஒரு இனத்தின் மற்றும் ஒரு தேசியத்தின் எதிர்கால சுவடிகள் ஆகும்.

அதோடு

நிர்வாக மாற்றங்கள் வந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் அமைப்பின் ஆவணக்களரி சீராக செயல்பட உங்கள் அமைப்பின் யாப்பில் பதிவேடு, ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தலை அமுல்படுத்தலாம். அதனுடன் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் திட்டம், நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறை விதிகள் கொண்ட வழிகாட்டி உருவாக்கலாம்.

3. சுவடிகள் சேகரிப்பு

ஒரு அமைப்பின் சுவடிகளை சேகரிப்பது அவ்வமைப்பின் இன்நாள் நிர்வாகக்குழுவின் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்நாள் மற்றும் இன்நாள் உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஏனெனில் அந்த சுவடிகள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சுவடிகள் ஆகும்.

அல்லது

ஒரு தனிநபர் ஒரு அமைப்பு சார்ந்த ஆவணங்களை தனது சேகரிப்பாக வைத்திருப்திலும் ஒரு வரலாறு உள்ளது. அந்தச் சுவடிகள் ஒரு தனிநபர் சேகரிப்பாக ஏன், எவ்வாறு வந்தது என்பதும் அந்த ஆவணங்களின் வரலாற்றுச் சூழலில் ஒரு பகுதி ஆகும். அதைச் சிதறடிப்பதைவிட சேகரிப்பாளரின் காலத்திற்குப் பின்னர் அந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டம் அல்லது ஒப்பந்தத்தை இன்நாள் நிர்வாகம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். அச்சேகரிப்பு அந்த நபரின் பேயரிலேயே பேணிப்பாதுகாப்பது ஆவணச் சேகரிப்பின் தோற்றம், சூழல் மற்றும் நொக்கத்தைப் பேணிப்பாதுகாக்க உதவும்.

உருவாக்கம்│Creation: 24.09.2020
புதுப்பிப்பு│Update: 03.07.2021