
நோர்வேயில் தமிழ் ஆவணங்கள் மற்றும் வரலாறு பற்றிய நேர்காணலை மேற்கொண்ட மிசேல் டிட்ஸலுக்கும் (Michelle Tidsel) ஊத்ரூப்- நோர்வேயின் முதல் பல்லின பண்பாட்டுச் செய்தித்தாளுக்கும் (Utrop – Norges første flerkultruelle avis / Utrop – Norway’s first multicultural newspaper) நன்றிகள்.
Thanks to Michelle Tidsel and Utrop – Norges første flerkultruelle avis (Utrop – Norway’s first multicultural newspaper) for an interview about Tamil archive sources and history in Norway.

தமிழ் முரசம் வானொலியின் செய்தித் தளத்தில் வெளியான “நோர்வேயில் தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்” பற்றிய தகவல் கட்டுரை. எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் முன்முயற்சியை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Information article about “Tamil-Norwegian initiatives” in Norway at the news website of Tamil Murasam Radio (see page 12-13). Let us know your initiative by filling out the form on our website.

நோர்வேயிய சுவடிகள் காப்பகச் சபையின் 60வது ஆண்டிற்கு வாழ்த்துக்கள். பக்கம் 26 பார்க்கவும்.
Congratulations on the 60th anniversary of the Norwegian Archives Council. See page 26.
DsporA Tamil Archive இன் முதலாவது நேர்காணல்.
நன்றி அண்டம் மீடியா, ஒசுலோ (நோர்வே)
“தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வர வேண்டும்”
(16 செப்டம்பர் 2020).
First interview of DsporA Tamil Archive.
Thank you Andam Media, Oslo (Norway).
“தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வர வேண்டும்” (Tamils need to come forward to document themselves)
(16th September 2020).

02.02.2021 அன்று நடைபெற்ற ஆவணக்காப்பு சார்ந்த இணையவழி சந்திப்புப் பற்றிய பதிவை மீள்ப் பதிப்பு செய்த «Bergen tamilsk avis» (பேர்கன் தமிழ் இ-செய்தித்தாள்) க்கு நன்றி (பக்கம் 10 ஐப் பார்க்கவும்).
இந்தப் பதிப்பு இச் செய்தித்தாளின் முதலாவது பதிப்பாகும். இது சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு 21.02.2021 அன்று வெளியிடப்பட்டது. முதல் தலைமுறை மற்றும் இளம் தலைமுறை தமிழர்களின் கூடிய இந்த செய்தித் தாள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
Thank you to «Bergen tamilsk avis» (Bergen Tamil e-newspaper) for republishing the post on the online meeting about archive, which was held on 02.02.2021 (see page 10).
This is their first issue of te e-newspaper that was published on 21.02.2021; the International Mother tongue Day. Congratulations to the diverse team of first and young generation Tamils.

பெர்கன் தமிழ் மின் செய்தித்தாளில் வெளியான “நோர்வேயில் தமிழ்-நோர்வேயிய முன்முயற்சிகள்” பற்றிய தகவல் கட்டுரை (பக்கம் 12-13 பார்க்கவும்). எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் முன்முயற்சியை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Information article about “Tamil-Norwegian initiatives” in Norway at Bergen Tamil e-newspaper (see page 12-13). Let us know your initiative by filling out the form on our website.

ஈழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் காப்பகப்படுத்தல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசுவதற்கு 17.01.2022 அன்று Ilangkatru- இளங்காற்று வானொலிக்கு புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives) அழைக்கப்பட்டது.
ஈழம், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினரிடையே காப்பகப்படுத்தலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் Ilangkatru- இளங்காற்று வானொலி குழுவினருக்கு நன்றி.
உள்ளடக்கம்:
- தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் பண்பாடு
- ஈழத்தில், தமிழகத்தில் மற்றும் புலம்பெயர் மண்ணில் காப்பகப்படுத்தல்
- புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives)
On 17th January 2022 DiasporA Tamil Archives was invited to Ilangkatru- இளங்காற்று radio to talk about archiving and its importance in Eelam, Tamilakam and Tamil diaspora.
Thank you to the team of Ilangkatru- இளங்காற்று radio for the opportunity and cooperation to raise the awareness of archiving among the Tamil community in Eelam, Tamilakam and Tamil diaspora.
Content:
- Documentation and archiving culture of Tamils
- Archiving in Eelam, Tamil Nadu and Tamil Diaspora
- DiasporA Tamil Archives
உருவாக்கம்│Creation: 22.09.2020
புதுப்பிப்பு│Update: 24.01.2022