பூம்பனிப்பனை @ Lokalhistoriewiki.no

இந்த குளிர்கால விடுமுறையில், தமிழ்-நோர்வேயியர்களின் கதைகளை இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக எழுதுதல் என்பதை ஒரு கருவியாகவும் முறையாகவும் நோர்வே வாழ் தமிழ் இளைஞர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் தமது சமூக மற்றும் கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்வதுடன், தாம் எழுதும் பதிவுகள் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் மீட்டெடுக்கும் தளத்தில் பதிவு செய்கின்றனர்.

Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ்ப் பக்கம் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது 2020 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. அப்பக்கத்திற்கு “Snøfnuggpalmen-பூம்பனிப்பனை” (The snowflake palm) என்று 20.09.2021 அன்று பெயர் சூட்டப்பட்டது. அதோடு ஒரு இலச்சினையும் கொடுக்கப்பட்டது. வட துருவ காலநிலையால் சூழப்பட்ட நோர்வே வாழ் தமிழர்களை சித்தரிப்பதற்காக இந்த இலச்சினை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெயரும் தெரிவு செய்யப்பட்டது.

22.02.2022 அன்று நடைபெற்ற பட்டறை தமிழர் வள ஆலோசனை மையம் அறக்கட்டளையின் (TRVS) கட்டடத்தில் நடைபெறும் இரண்டாவது விக்கிப் பட்டறையாகும். இப்பட்டறை 13.02.2022 அன்று நடைபெற்ற தகவல் சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்துடன் (APTKS) இணைந்து TRVS இல் அத்தகவல் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. APTKS இல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் பயிலும் மாணவர்கள் அன்றைய தினம் கலந்து கொண்டனர். விக்கித் திட்டம், சொற்களஞ்சியக் கட்டுரைகள் எழுதுவது எப்படி மற்றும் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தகவல்களை “பூம்பனிப்பனை” திட்டத்தின் செயல் குழுவினர் தெரிவித்தனர்.

13.02.2022 அன்று விக்கி தகவல் சந்திப்பு

அன்றைய பட்டறை Lokalhistoriewiki.no இல் எழுதும் செயல்முறை பற்றி எட்டு இளைஞர்களுக்கு உதவியது. இளைஞர்கள் Lokalhistoriewiki.no இல் பயனர் கணக்குகளை உருவாக்கினர், மூளைச்சலவை (brainstorming), குழுப்பணி, அறிவுப் பகிர்வு, வழிகாட்டுதல் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகியவற்றைக் செயல்படுத்தினர். இந்த நாள் எட்டு சொற்களஞ்சியக் கட்டுரைகளை உருவாக்கி பயனுள்ளதாக அமைந்தது. அவை நோர்வே வாழ் தமிழர்களின் மட்டைப்பந்து விளையாட்டு, TRVS இல் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட coding பாடம் மற்றும் TRVS இல் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தானியக்கிப் பாடம் பற்றி இருந்தது. இக்கட்டுரைகள் குறிப்பாக தமிழ்-நோர்வேயியர்களுடன் தொடர்புடையவை. மறுபுறம், முறுக்கு, வடை, பிட்டு மற்றும் சாம்மாறு பற்றிய கட்டுரைகள் தமிழரின் உணவுப் பண்பாட்டைக் கூறுகின்றன. பொட்டு/ சிரட்டைப் பொட்டு தமிழர்களின் ஒப்பனைப் பாரம்பரியத்தின் கீழ் அடங்கும். இறுதியாக, பூசை பற்றிய கட்டுரை சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள மத வழிபாட்டின் வேறுபாட்டைப் பார்க்கிறது. இந்த நாள் குளிர்கால விடுமுறை நாட்களில் சமூக உரையாடல், உணவு, பானம், Kahoot மற்றும் புன்னகை ஆகியவற்றுடன் இளைஞர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இருசாராருக்கும் ஒரு சந்திக்கும் இடமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.

Vaseeharan Creation தமிழ் (27.02.2022)

“Snøfnuggpalmen-பூம்பனிப்பனை” திட்டமானது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பங்காளர்கள் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (Norsk Lokalhistorisk Institutt) இணைந்து ஒரு பொது நோக்கத்திற்காக பங்களிக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும். தமிழ் சமூக மட்டத்தில், நோர்வேயில் உள்ள பல்வேறு தமிழ் ஊடகங்களின் ஊடக ஆதரவு (Tamil Murasam (10.10.2021), Norway Radio Tamil (26.10.2021), Ilangkatru (நோர்வே வாழ் தமிழ் இளைஞர்களால் நடாத்தும் தமிழ் வானொலி), Norway News Tamil (23.02.2022), Norway News Tamil (24.02.2022), Vaseeharan Creation Tamil (27.02.2022) மற்றும் Bergen Tamil e-Newspaper (February 2022)), தமிழ் அமைப்புகளுக்குள்ளும் அவர்களின் சமூக ஊடகங்களிலும் தகவல்களை விநியோகித்தல், விக்கி பயிலரங்கை நடத்துவதற்கு நிகழ்வு அறைகளை வழங்குதல், இளைஞர்களுடன் தொடர்பு மற்றும் உறவுகளை ஏற்படுத்தி மேம்படுத்துதல், பெற்றோர் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பும் ஆதரவும். அதோடு தமிழ்-நோர்வேயியர்களின் வரலாறு, தகவல், மற்றும் அறிவை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.


குளிர்கால விடுமுறை 2022 இல் விக்கி பட்டறையின் 2வது நாள்

Lokalhistoriewiki.no இல் உள்ள “பூம்பனிப்பனை”யின் செயல் குழு, விக்கிப் பட்டறையின் இரண்டாவது நாளை 24.02.2022 அன்று வியாழக்கிழமை 16:30 முதல் 19:30 வரை ஒசுலோவில் உள்ள TRVS கட்டடத்தில் நடாத்தியது.

இந்த நாளில் ஐந்து இளைஞர்கள் பங்குபற்றினர். செவ்வாய்க்கிழமை தாம் ஆரம்பித்த கட்டுரைகளை இன்று தொடர்ந்தனர். மற்றவர்கள் புதிய கட்டுரைகளை ஆரம்பித்தனர். அவை Stover Tamil Sports Club, Nord og Rødtvet Sports Club (Noreel), வரதட்சணை மற்றும் பரதநாட்டியம் ஆகும்.

எதிர்கால விக்கிப் பட்டறைகளில், நோர்வே வாழ் தமிழர்களைப் பற்றி நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய அனைவரையும் இத்திட்டத்தின் செயல் குழு வரவேற்கிறது. அது வயது, தலைமுறை என்ற வேறுபாடின்றி அனைவரையும் வரவேற்கிறது. Lokalhistoriewiki.no இல் எங்கள் இருப்பின் கதைகளைச் சொல்லுங்கள். நோர்வே வாழ் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றை நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் எவரும் எந்த நேரத்திலும் மீட்டெடுக்கக் கூடிய விதத்தில் பாதுகாக்கவும், பரப்பவும் பங்களியுங்கள்.


புதுப்பிப்பு│Update: 12.04.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: