முகப்பு

வணக்கம் │Vaṇakkam │Welcome │Velkommen

ஒரு வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமையைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

எமது செயல்பாடுகள்

சுவடிகள் காப்பு விழிப்புணர்வு

சுவடிகள் காப்பு

பரப்புதல்

சுவடிகள்

வரலாற்றைப் பங்களியுங்கள்
Contribute history

ஈடுபடுங்கள்

ஒரு நூல் திட்டத்தின் மூலம் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை பதிவு செய்து பரவலாக்கம் செய்வதற்கான முயற்சி 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த முயற்சி படிப்படியாக புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களாக (DiasporA Tamil Archives) 2020ம் ஆண்டு உருவானது. சமூகச் சுவடிகளும் பங்கேற்புச் சுவடிகளும் (Community Archives and Participatory Archives) சமூக மட்டத்தில் உருவாகும் ஒரு கூட்டுச் செயல்பாடு ஆகும்.

பங்கேற்பு சுவடிகள்

நினைவகப் பதிவுகள்

சுனாமி 2004 இன் 20வது ஆண்டு நினைவாக

சுவடிகள்

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு அன்ரனி இராஜேந்திரம்

அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டு நினைவாக
(20.06.1932 – 12.09.1990)

பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு வெளியீடு: 20. யூன் 2022

பரப்புதல்

2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகள்

முள்ளிவாய்க்கால்: ஒரு சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்”(கண்காட்சியும் நினைவுகூரலும்)

சுவடிகள்

பெயர்ப் பட்டியல்: உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகக்குழுச் சுவடிகள் காப்பகங்கள்

சுவடிகள்

புலம்பெயர் தமிழர் நாட்காட்டி
Diaspora Tamil Calendar

ஒரு வரலாற்றுப் பண்பாட்டு மரபுரிமையைப் பேணிப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்

வழிமுறைகள்

1. சுவடிகள் காப்பகப்படுத்தல் விழிப்புணர்வு

பதிவுகள் வைத்திருத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரப்ப உதவலாம்.

அல்லது

உங்கள் நிறுவனம்/ அமைப்பு ஆவணப்படுத்தல் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ள ஒரு ஆவணக்காப்புப் பட்டறையை ஒழுங்கு செய்யலாம்.

2. நிறுவனத்தில்/ அமைப்பில் ஒரு ஆவணக்களரி உருவாக்குதல்

ஒரு பதிவேட்டு மேலாளரை உருவாக்கி நியமியுங்கள்

இன்று முதல் உங்கள் செயல்பாடுகளின் பதிவுகளை ஆவணப்படுத்திப் பேணிப் பாதுகாக்கும் முறையை ஆரம்பிக்க உங்கள் நிறுவனத்தில்/ அமைப்பில் ஒரு ஆவணக்களரி உருவாக்குதல். இன்றைய நடவடிக்கைகளின் பதிவுகள் ஒரு இனத்தின் மற்றும் ஒரு தேசியத்தின் எதிர்கால சுவடிகள் ஆகும்.

அதோடு

நிர்வாக மாற்றங்கள் வந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் அமைப்பின் ஆவணக்களரி சீராக செயல்பட உங்கள் அமைப்பின் யாப்பில் பதிவேடு, ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தலை அமுல்படுத்தலாம். அதனுடன் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் திட்டம், நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறை விதிகள் கொண்ட வழிகாட்டி உருவாக்கலாம்.

3. சுவடிகள் சேகரிப்பு

ஒரு அமைப்பின் சுவடிகளை சேகரிப்பது அவ்வமைப்பின் இன்நாள் நிர்வாகக்குழுவின் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்நாள் மற்றும் இன்நாள் உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஏனெனில் அந்த சுவடிகள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சுவடிகள் ஆகும்.

அல்லது

ஒரு தனிநபர் ஒரு அமைப்பு சார்ந்த ஆவணங்களை தனது சேகரிப்பாக வைத்திருப்திலும் ஒரு வரலாறு உள்ளது. அந்தச் சுவடிகள் ஒரு தனிநபர் சேகரிப்பாக ஏன், எவ்வாறு வந்தது என்பதும் அந்த ஆவணங்களின் வரலாற்றுச் சூழலில் ஒரு பகுதி ஆகும். அதைச் சிதறடிப்பதைவிட சேகரிப்பாளரின் காலத்திற்குப் பின்னர் அந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டம் அல்லது ஒப்பந்தத்தை இன்நாள் நிர்வாகம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். அச்சேகரிப்பு அந்த நபரின் பேயரிலேயே பேணிப்பாதுகாப்பது ஆவணச் சேகரிப்பின் தோற்றம், சூழல் மற்றும் நொக்கத்தைப் பேணிப்பாதுகாக்க உதவும்.

இடுகைகளை முதல் நபராகப் படிக்க

சமீபத்திய பதிவுகள்

அழைப்பு: “முள்ளிவாய்க்கால்: ஒரு சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்”(கண்காட்சியும் நினைவுகூரலும்)

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DTA) மற்றும் தமிழ் இன்சைட் (TI) இணைந்து, “முள்ளிவாய்க்கால்: ஒரு சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்” என்ற  தலைப்பில் ஒழுங்குசெய்யப்படும் கண்காட்சிக்கு உங்களை அழைக்கிறோம். மறைக்கப்பட்ட இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் 2009 நினைவையும், நோர்வே வாழ்  பல்லினப் பண்பாட்டுச் சமூகத்திற்கு தமிழர்களின் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையின் வரலாற்றை உணர்த்தவும் இக்கண்காட்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. 

Keep reading

Invitasjon til utstilling og arrangement:«Mullivaykkal: En nasjon undertrykt som minoritet»

Vi i DiasporA Tamil Archives (DTA) og Tamil Insight (TI), i samarbeid, ønsker å invitere dere til vår utstilling med temaet “Mullivaykkal: En nasjon undertrykt som minoritet”, som setter fokus på minnet om det glemte folkemordet på Mullivaykkal i 2009, samt formidle tamilenes historie om undertrykkelse og folkemord for det flerkulturelle samfunnet i Norge.

Keep reading