வீக்கி தகவல் சந்திப்பு – 05 டிசம்பர் 2022
Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ்த் செயல்திட்டச் செயற்பாட்டாளர்கள் இருவர் நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழுவிற்கு PowerPoint விளக்கக்காட்சியை வழங்கினர். அக்கூட்டத்தின் முடிவில், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு 2023 சனவரியில் ஏற்பாடு செய்யவிருக்கும் பொங்கல் விழாவில் இத்தகவலை வழங்குமாறு பரிந்துரைத்தது. Lokalhistoriewiki.no இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டம் பற்றிய தகவல் காணொளி ஒன்றை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டது.
வீக்கி தகவல் சந்திப்பு – 09 டிசம்பர் 2022
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) நிர்வாகக் குழுவிற்கு PowerPoint விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. TCC இன் கோரிக்கையின் அடிப்படையில், Lokalhistoriewiki இல் உள்ள தமிழ் செயல்திட்டத்திற்கும் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தின் (DiasporA Tamil Archives) இணையதளத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிவிக்கப்பட்டது.
வீக்கிப் பட்டறை – 14 டிசம்பர் 2022
14 டிசம்பர் 2022 அன்று நிகழ்ந்த வீக்கிப் பட்டறையில் தமிழர் வள ஆலோசனை மையத்தில் செயல்படும் முதியோர் முற்றத்தில் சமூக உரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

Lokalhistoriewiki இல் தமிழ் செயல்திட்டத்திற்கான தகவல் காணொளி உருவாக்கம் – 06 சனவரி 2023
தமிழ் இளைஞர்களும் நோர்வேயின் தேசிய நூலகம் மற்றும் ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தைச் சேர்ந்த வல்லுநர்களும் இணைந்த குழு ஒன்று தமிழ் வீக்கிச் செயல்திட்டம் குறித்த தகவல் காணொளியை உருவாக்கினர். அதில் சமரன் வேதானந்தன், நிறோஜா மதிவதனன் மற்றும் விலாசினி வாமதேவன் ஆகிய தமிழ் இளைஞர்கள் வீக்கிப் பட்டறையில் கலந்து கொண்டு களஞ்சிய கட்டுரைகளை எழுதினர். Ola Alsvik (நோர்வே தேசிய நூலகத்தில் ஆராய்ச்சி நூலகர்), Marianne Wiig (Lokalhistoriewiki இன் ஒருங்கிணைப்பாளர், நோர்வே தேசிய நூலகத்தின் மூத்த ஆலோசகர்) மற்றும் Johanne Bergkvist (ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தில் வரலாற்றாசிரியர்) ஆகியோர் இளைஞர்களுடன் இணைந்து பங்கேற்றனர். Flash Digital Norway ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஒத்துழைப்பை செய்தது.
தகவல் காணொளியானது பல்வேறு தமிழ் விழாக்களில் காண்பிக்கத் திட்டமிடப்பட்டது. அதோடு சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் பரப்பவும் திட்டமிடப்பட்டது.


வீக்கித் தகவல் சந்திப்பு – 09 சனவரி 2023
வீக்கிப் பணிக்குழுவின் செயல்பாட்டாளர் ஒருவர் “Aktive Kvinner i Bjerke” எனும் புலம்பெயர்ந்த பெண்களுக்கான விளையாட்டு மற்றும் நல்வாழ்வு அமைப்பை Linderud இல் (ஒசுலோ) அமைந்துள்ள Start blokka இல் சந்தித்தார். அவர் தகவல் சந்திப்பின் மூலம் “Aktive Kvinner i Bjerke” இல் உள்ள பெண்களிடம் ஒரு அன்பு வேண்டுகோளை முன்வைத்தார்:
- உங்கள் நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்களுடன் வீக்கி செயற்திட்டம் பற்றிய தகவல் கூட்டம் ஒழுங்கு செய்தல்.
- சமூக ஒன்றுகூடலுடனான வீக்கிப் பட்டறை ஒழுங்கு செய்தல். அங்கு கட்டுரைகளை எழுதக் கூடிய எழுத்தாளர்களை சேர்த்தல். நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய இளைஞர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருக்கலாம்.
- உங்கள் நிறுவனம்/முன்முயற்சி பற்றிய கட்டுரை(களை) எழுதுதல் அல்லது புதுப்பித்தல் பொறுப்பை ஏற்றல்
“Aktive Kvinner i Bjerke” இல் உள்ள பெண்கள், அவர்களின் அமைப்பு/செயல்பாடு/முயற்சி குறித்து ஒரு களஞ்சியக் கட்டுரையை எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.


வீக்கி தகவல் சந்திப்பு – 10 சனவரி 2023
தமிழர் வள ஆலோசனை மையத்தில் உள்ள பெண்கள் குழு/ அரோபிக் பயிற்சிக் குழுவிலும் இதே போன்ற தகவல் சந்திப்பு நடாத்தப்பட்டது.
இந்தக் குழுவில் உள்ள பெண்கள், Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழர் வள ஆலோசனை மையம் பற்றிய கட்டுரையில் தங்கள் செயல்பாடு/முயற்சியைப் பற்றி தகவலை எழுதி, அக்கட்டுரையை புதுப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ்த் செயல் திட்டத்தின் பணிக்குழு, ஒசுலோ மற்றும் நோர்வேயைச் சுற்றியுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தங்களது அமைப்பு/செயல்பாடு/முயற்சியின் வரலாற்றை ஆவணப்படுத்த ஒத்துழைக்க ஊக்குவிக்கிறது.
மேலதிகத் தகவல்
“Et mangfold av historier: norsk-tamilenes historier” (A diversity of stories: Norwegian-Tamil history) at Lokalhistoriewiki.no: https://lokalhistoriewiki.no/wiki/Forside:Tamilsk_historie_og_kultur
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தில் இச்செயல்திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியத் தகவல்:
புதுப்பிப்பு│Update: