புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களின் (DiasporA Tamil Archives DTA) இரண்டு வருடப் பயணம் அதை ஒரு இணையவழி வள மையமாகவும் சமூகக்குழுச் சுவடிகள் (community archives) தளமாகவும் மாற்றியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலைதளிர் காலத்தில் இருந்து, ஒசுலோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (Oslo Metropolitan University) நோர்வேயில் ஒரு சமூகக்குழுச் சுவடிகளின் (community archives) உதாரணமாக இந்த இணையவழித் தளம் கற்பிக்கப்படுகிறது.

இன்று DTA ஆனது Oslomet பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் (visiting lecturer) பங்கேற்று DTAவின் பயணத்தையும் அதன் நோக்கம் மற்றும் செயற்திட்டங்களையும் கூறியது. பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிக் கோப்பு மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது.
இந்த அங்கீகாரத்திற்கு OsloMet பல்கலைக்கழகத்திற்கும் Leiv Bjelland (பல்கலைக்கழக விரிவுரையாளர்) அவர்களிற்கும் எமது நன்றிகள். DTA என்பது வெறுமனவே ஒரு இணையவழித் தளம் அல்ல. இது நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றின் கொண்டாட்டம் ஆகும். எனவே, நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை அங்கீகரித்தமைக்கு நன்றி.
புதுப்பிப்பு│Update: