16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.
“தமிழ் 1” என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்த
நூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு “தமிழ் 2” Kulturbro பதிப்பகத்தால் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் வெளியிடப்பட்டது.
https://kulturbro.no/boker/index.htm#morsmalslareboker_for_minoritetsspraklige_barn
“தமிழ் 1” நூல் விபரம்:
நூல் ஆசிரியர்: பிலோமினம்மா ஜோர்ஜ்
தமிழ் ஆலோசகர்கள்: நாகரடணம் ரத்னசிங்கம் மற்றும் தயாளன் வேலாயுதப்பிள்ளை
நோர்வேய ஆலோசகர்கள்: Hilde Traavik og Anne-Lis Øvrebotten
ஓவியர்: Freda Magnussen
வெளியீடு: Kulturbro Forlag AS
வெளியீட்டு இடம்: ஓசுலோ
ஆண்டு: 1995
“தமிழ் 1” நூல் விபரம்:
நூல் ஆசிரியர்: பிலோமினம்மா ஜோர்ஜ்
தமிழ் ஆலோசகர்: தயாளன் வேலாயுதப்பிள்ளை
நோர்வேயிய ஆலோசகர்: Anne-Lis Øvrebotten
ஓவியர்: Freda Magnussen
வெளியீடு: Kulturbro Forlag AS
வெளியீட்டு இடம்: ஓசுலோ
ஆண்டு: 1997
“தமிழ் 1” மற்றும் “தமிழ் 2” இப்பொழுது மீள்பதிப்பு செய்யப்படுவது இல்லை என்பதால் இன்நூல் அச்சுப் பிரதியாக (photocopied pages) கிடைக்கப்பெற்றது. பிலோமினம்மா ஜோர்ஜின் மகள் கரோலின் தேவநாதன் மூல நூலினை தனது தனிப்பட்ட ஆவணங்களாக வைத்திருக்கின்றார்.
இந்த நூல் நோர்வே நூலகங்களில் உள்ளது. ஆனால் இன்நூல் ஒரு நோர்வேயிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சிக்கின்றேன். ஏனெனில் ஒரு வெளியீடு ஒரு நூலகத்தில் இருப்பதும் ஒரு ஆவணக்காப்பகத்தில் இருப்பது இரு வேறு விடயங்கள்.
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
புதுப்பிப்பு│Update: 18.10.2020