01.04.2023 – துறும்சோ தமிழர்கள் (தமிழ் சங்கம், துறும்சோ)
நோர்வே தேசிய நூலகத்தில் உள்ள Lokalhistoriewiki.no இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டத்திற்கான பணிக்குழுவிலிருந்து ஒரு பிரதிநிதி சனிக்கிழமை 01. ஏப்ரல் 2023 அன்று துறும்சோ வாழ் தமிழர்களைச் சந்தித்தார். கூட்டத்தில், தமிழ் செயல்திட்டம் பற்றிய தகவல்கள் (https://lokalhistoriewiki.no/wiki/Forside) :Tamilsk_historie_og_kultur) மற்றும் DiasporA Tamil Archives (DTA) இன் பங்கு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ் செயல்திட்டமானது, Lokalhistoriewiki.no என்ற இணையதளத்தில் களஞ்சியக் கட்டுரைகள் மற்றும் நினைவுப் பதிவுகள் எழுதுவதாகும். நோர்வேயில் தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் புலம்பெயர் தமிழ் வரலாற்றை ஒரு நோர்வேயிய தேசியத் தளத்தில் பதிவு செய்து பரவலாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
DTA எனும் தன்னார்வ அமைப்பானது இந்த செயல்திட்டத்தின் பணிக்குழுவுடன் இணைந்து, இத்திட்டம் பற்றிய பல்வேறு இயற்பியல் மற்றும் எண்ணிம தகவல் தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தளங்கள் மூலம் இத்தகவல் தயாரிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த செயல்திட்டத்திற்கான ஒரு பக்கம் DTA இணையதளத்திலும் (https://diasporatamil.no/snofnuggpalmen-lokalhistoriewiki-no/) நிறுவப்பட்டுள்ளது. அங்கு இந்தத் தமிழ் செயல்திட்டத்தின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டு பரவலாக்கப்படுகின்றது. மேலும், DTA ஆனது Lokalhistoriewiki.no இல் ஒரு எழுத்தாளராகவும் செயல்படுகின்றது. அங்கு 1956ம் ஆண்டு ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டு நோர்வேயில் கால் பதித்த முதல் தமிழரான அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய நினைவுப் பதிவுகள், அதோடு ஏனைய நினைவுப் பதிவுகளும் களஞ்சியக் கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது.
துறும்சோ வாழ் தமிழர்களுடன் வீக்கி தகவல் சந்திப்பு (01.04.2023)
துறும்சோவில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மற்றும் தகவல் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்களின் ஒத்துழைப்புடன், தமிழ்ச் சங்கம் தங்களது அமைப்பைப் பற்றி ஒரு களஞ்சியக் கட்டுரை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், UiT – நோர்வேயின் வட துருவ பல்கலைக்கழகத்தில் (UiT – The Arctic University of Norway) உள்ள தமிழ் மாணவர் சங்கத்துடன் தொடர்பு உள்ளவராக இருந்தார். அந்த மாணவர் சங்கம் தமது செயல்பாட்டைப் பற்றிய ஒரு களஞ்சியக் கட்டுரை எழுத ஊக்குவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு வருகை தந்த ஒரு இளைய பங்கேற்பாளர் நோர்வேயில் தனது தந்தையின் புலம்பெயர் வரலாற்றைப் பற்றி நினைவுப் பதிவாக எழுத ஒப்புக்கொண்டார். மற்றொரு பங்கேற்பாளர், வட நோர்வேயில் வசிக்கும் அவரது மாமாவின் புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக அவரது தொடர்பை ஏற்படுத்தித் தந்தார்.
துறும்சோ வாழ் தமிழர்களுடன் ஒரு தகவல் சந்திப்பை ஏற்பாடு செய்ய உதவிய யூட்சன் ஜோசப் மற்றும் வே. புவனேந்திரன் ஆகியோருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நோர்வேயைச் சுற்றியுள்ள பிற தமிழ் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நோர்வேயில் உங்கள் புவியியல் இடத்தில் வாழும் தமிழர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய எங்களுடன் தொடர்பு கொள்ள நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

15.04.2023 – வீக்கன் மாவட்டத் தமிழர்கள்
லோரென்ஸ்கூக்
ஏப்ரல் 15, 2023 அன்று சனிக்கிழமை காலை, Lokalhistoriewiki இல் நடைபெறும் தமிழ்த் செயல்திட்டத்திற்கான பணிக்குழுவிலிருந்து மூன்று பிரதிநிதிகள் லோரென்ஸ்கூக்கில் உள்ள அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் மூன்று வீக்கி தகவல் சந்திப்பை நடாத்தினர். தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் நிர்வாகக்குழு 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர், பாலர் வகுப்புத் தொடக்கம் 9ம் ஆண்டு வரைக்குமான தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தனிப்பட்ட உரையாடலை உருவாக்க மூன்று தனித்தனி சந்திப்புகளை ஏற்பாடு செய்து தந்தனர்.
நோர்வேயிய நூலகங்கள், சுவடிகள் காப்பகங்கள் மற்றும் பிற நினைவக நிறுவனங்களில் புலம்பெயர் தமிழர் பற்றி விரிவான தகவல் ஆதாரம் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், அவை இன்னும் நினைவுகளாகவும் அனுபவங்களாகவும் மக்கள் மத்தியில் வாழ்கிறன. ஆனால் அவை விரையில் தொலைந்து போகும் அபாயத்தில் உள்ளன.

தமிழ்க் கல்வியில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை ஊக்குவித்து இணைப்பதற்குத் தமிழ் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததாகக் கண்டறியப்பட்டது. Lokalhistoriewiki இணையதளத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் தமிழ்க் கல்வி வகுப்புகளில் தயாரிக்கப்படும் தமிழ்க் கட்டுரைகளை நோர்வேயிய மொழிக்கு மொழிபெயர்க்கலாம் என்று பணிக்குழு பரிந்துரைத்தது. ஆவணப்படுத்தும் செயற்பாடு தமிழ் இளைஞர்களுக்கு ஒரு அடைவை எட்டிய உணர்வைத் தரலாம். ஒரு நோர்வேயிய தேசியத் தளத்தில் பரவலாக்கம் செய்வதன் மூலம் கட்டுரைகளை எழுதுவதில் பயன்படுத்தப்படும் நேரத்தையும் வளங்களையும் மேலும் சிறப்பாக்கலாம்.

மூன்றாம் தலைமுறை தமிழ்க் குழந்தைகளுக்குப் பெற்றோராக இருந்த இரண்டாம் தலைமுறைத் தமிழர்களைச் சந்திப்பது பணிக்குழுவிற்குப் புதிய அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பல் பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டத் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்தும் கண்ணோட்டம் இந்த பெற்றோர் மத்தியில் எழுப்பப்பட்டபோது சுவாரஸ்யமானதாகவும் முக்கியமானதாகவும் அமைந்தது. எனவே, நோர்வேயில் புலம்பெயர் தமிழர்களின் வரலாறு அவர்களின் வேர்களின் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தமிழர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அஸ்கர் மற்றும் பாரும்
ஏப்ரல் 15, 2023 அன்று சனிக்கிழமை மதியம், அன்னை பூபதி தமிழ் கலைக்கூடம் – அஸ்கர் மற்றும் பாரும் வளாகத்தின் 18வது ஆண்டு விழாவில், பணிக்குழுவின் பிரதிநிதிகள் ஒரு தகவல் உரையை வழங்கினர். அங்கு தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Lokalhistoriewiki.no இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டம் மற்றும் DiasporA Tamil Archives ஆகியவற்றைப் பற்றிய தகவல் துண்டுப் பிரசுரங்கள் இரு தமிழ்ப் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும் கொடுக்கப்பட்டது. அவை நகல் எடுத்து தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் விநியோகிக்க வழங்கப்பட்டன.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகக்குழுவினருடன் தகவல் சந்திப்புகளை ஏற்பாடு செய்த அன்னை பூபதி தமிழ்ப்க் கலைக்கூடத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். லோரென்ஸ்கூக், அஸ்கர் மற்றும் பாரும் ஆகிய இரு வளாக நிர்வாகக்குழுவும் தொடர்ந்து எம்முடன் தொடர்பில் இருந்து ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலதிகத் தகவல்
செயல்திட்டத்தின் வரலாறு:
https://lokalhistoriewiki.no/wiki/Et_mangfold_av_historier_-_norsk-tamilenes_historie
Lokalhistoriewiki இல் நடைபெறும் தமிழ் செயல்திட்டத்தின் முகப்புப்பக்கம்:
“Et mangfold av historier: norsk-tamilenes historier” (A diversity of stories: Norwegian-Tamil history) at Lokalhistoriewiki.no: https://lokalhistoriewiki.no/wiki/Forside:Tamilsk_historie_og_kultur
செயல்திட்டத்தின் செயல்பாட்டுகள்:
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தில் இச்செயல்திட்டம் பற்றியும், அதன் செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு பற்றிய கட்டுரைகள்:
புதுப்பிப்பு│Update: