உங்களின் ஒத்துழைப்போடு நோர்வேயில் தமிழரின் புலம்பெயர் வரலாற்றின் ஒரு சிறு பகுதியை ஆவணப்படுத்தியுள்ளோம்! உங்கள் பங்களிப்பே சுய ஆவணப்படுத்தல் முயற்சிக்கான ஆதாரமாகவும் அடித்தளமாகவும் உள்ளது. எமது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத்தருணத்தில் தெரிவிக்கின்றோம்!

2022ம் ஆண்டு அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டாகும். நோர்வேயின் தேசிய நூலகத்தின் கீழ் இயங்கும் Lokalhistoriewiki.no இல் உள்ள மூலக் காப்பகத்தில் (kjeldearkiv) இராஜேந்திரம் நினைவுத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை, இராஜேந்திரம் நினைவுத் தொகுப்பு பின்வரும் நினைவுப் பதிவுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இன்னும் மேலதிக நினைவுப் பதிவுகள் இணையவிருக்கின்றன.
- Anton Gabriels minne om Antony Rajendram
- Yamuna Vallipurams minne om Antony Rajendram
- Emil Gabriels minne om Antony Rajendram
- Kjetil Are Bakke og Karin Irene Bakkes minne om Antony Rajendram
- En hilsen fra Antony Rajendrams familie
- Atle Bergs minne om Antony Rajendram
- Ekteparet Santhiapillais minne om Antony Rajendram
மேலும் Lokalhistoriewiki.no இல் இயங்கும் “Et mangfold av historier: norsk-tamilenes historie” என்ற தமிழ் செயல்திட்டத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட “Sherrene Santhiapillai» என்ற மூல ஆவணக் கட்டுரை இராஜேந்திரம் நினைவுத் தொகுப்பை வளப்படுத்துகிறது.
இராஜேந்திரம் நினைவுத் தொகுப்புடன், புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களிற்கு பங்களிக்கப்பட்ட பின்வரும் பங்களிப்புகள் Lokalhistoriewiki.no இல் சேர்க்கப்பட்டுள்ளன:
- Rice.no ஆதாரக் காப்பகக் கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது
- Niraikutam களஞ்சியக் கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது
- Appam களஞ்சியக் கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது
- Delicious Food P&D வழங்கிய “அப்பம்” புகைப்படங்களின் தொகுப்பு
- ஓவியர் மகாவின் போராட்ட ஓவியங்களின் தொகுப்பு
- SKV Creation வழங்கிய “நிறைகுடம்” புகைப்படம்



இதுவரை பெறப்பட்டு வெளியிடப்பட்ட அனைத்து பங்களிப்புகளுக்கும், இன்னும் வெளியிடவிருக்கும் ஏனைய பங்களிப்புகளுக்கும் நாங்கள் பணிவான நன்றிகளைத் தேரிவிக்கின்றோம்.
தமிழ் – நோர்வே பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தவும், பேணிப் பாதுகாக்கவும் மற்றும் வளப்படுத்தவும் உரையாடல், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க தமிழ் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அன்புடன் அழைக்கிறோம். ஏனெனில், இது புலம்பெயர் தமிழர்களின் வரலாறு மட்டுமல்ல, நோர்வேயின் நவீன வரலாற்றின் ஒரு பகுதி ஆகும்.
“Et mangfold av historier: norsk-tamilenes historie” (Snøfnuggpalmen; Snowflakeplam)


புதுப்பிப்பு│Update: