இது சமூகச் சந்திப்புடன் கூடிய அடுத்த வீக்கிப் பட்டறைக்கான நேரம்
தேசிய நூலகத்தில் உள்ள Lokalhistoriewiki.no இல் நடைபெறும் “Et mangfold av historier – norsk-tamilenes historie” (ஒரு பன்முகம் மிக்க கதைகள் – நோர்வேயிய தமிழர்களின் வரலாறு) என்ற செயல்திட்டத்திற்கான பணிக்குழு, ஒஸ்லோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ் அமைப்புகளை அழைக்கின்றது. அதனூடாக தங்கள் உறுப்பினர்களை இந்த சமூக முயற்சியில் ஈடுபடவும் ஊக்குவிக்கவும் அழைக்கிறது. நோர்வேயில் உள்ள நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழ் சமூகம் மற்றும் பெரும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் மதிப்புமிக்க மற்றும் பலனளிக்கும் பண்பாட்டுப் பாரம்பரியமாக மாறக்கூடியவற்றை ஆவணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பங்களியுங்கள்.
பின்வரும் விடயங்கள் பற்றி களஞ்சியக் கட்டுரைகளை எழுதுதிப் பங்களிக்கலாம்:
- நபர்கள்
- அமைப்புகள்
- நோர்வேயில் தமிழர் குடியேற்றமும் பண்பாடும்
- தமிழ் மொழி, கலை, பண்பாடு, வரலாறு
மூலக் காப்பகத்திற்கானக் கட்டுரைகளை எழுதுதிப் பங்களிக்கலாம்:
தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடாத்தப்படும் மூத்தோர் முற்றத்துடன் இணைந்து, நோர்வேயில் தமிழ் புலம்பெயர் வரலாற்றின் நினைவுகளையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்த பங்களிக்கக்கூடிய பங்கேற்பாளர்களையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
திகதி: 12. ஒக்டோபர் 2022
Tid: 18:00-20:30
இடம்: தமிழர் வள ஆலோசனை மையம், Nedre Rommen 3, 0988 Oslo
தேவையான பொருள்: மடிக்கணினி (அ) எழுதுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பேறு கருவிகள்
புதுப்பிப்பு│Update: