நிறைகுடம் என்றால் நிறைவான பானை என்று பொருள்படும். இது தமிழ் பண்பாட்டில் மங்களகரமான வரவேற்புப் பொருட்களில் ஒன்றாகும், இது எதிர்கால வெற்றியைப் பிரதிபலிக்க பயன்படுத்தப்படும் ஒரு அடையாளக் குறியீடு ஆகும்.
நிறைகுடம் என்பது தண்ணீர் நிரம்பிய ஒரு பானை ஆகும். குடத்தின் வாயில் மாவிலைகள் வைத்து, அதன்மேல் முடி சீவிய தேங்காய் ஒன்று வைக்கப்படும். இது நோர்வே உட்பட உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களில் வரவேற்பு மேசையாகப் பயன்படுத்தப்படுகிறது. வரவேற்பு மேசையில் குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற ஏனைய மங்களகரமான பொருட்களால் நிறைகுடம் சூழப்பட்டிருக்கும்.

நிறைகுடம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அது ஒரு நபரின் பண்பை விவரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
“நிறைகுடம் தழும்பாது”
niṟaikuṭam taḻumpātu
தன்னைப் பற்றி ஒரு உள் புரிதல் உள்ளவர் தடுமாற்றமின்றி நிறைவான நிலையைப் பெறுவார் என்று அர்த்தம். “Empty vessels make most sound» அல்லது “Still waters run deep” போன்ற ஆங்கிலப் பழமொழிகள் இதே பொருளைக் கொண்டுள்ளன.
பின் இணைப்பு:
https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/niraikudam-thalumbathu

Read the article in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 08th September 2022.
புதுப்பிப்பு│Update: 08.09.2022