அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டை முன்னிட்டு காணொளி/ புகைப்படம்/ எழுத்துரு நினைவுப் பதிவுச் சேகரிப்பு
அன்புள்ள அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் நண்பர்கள்/ உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்
அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் எம்முடன் இன்று வாழ்ந்திருந்தால், இவ்வருடம் அவர் 90வது வயதை எட்டியிருப்பார். நோர்வேயில் தமிழ் சமூக உருவாக்க வரலாற்றில் காலடி பதித்த முதல் தமிழரின் நினைவாக, அவரை நல்ல முறையில் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டு நினைவுத் தொகுப்புச் சேகரிப்பை ஆரம்பிக்க விரும்புகிறோம்.
20. யூன் 2022 அன்று, அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு பெயர்ப்பட்டியல் வலைப்பதிவுப் பக்கம் (catablog) வெளியிடவுள்ளோம். அதில் அவரைப் பற்றி வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தயாரிப்புகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்யப்படும்.
ஒரு பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு (catablog) என்பது ஒரு வலைப்பதிவு (weblogg) ஆகும். இது காப்பக சேகரிப்புகளின் தகவல் பட்டியல் அணுக்கத்தை வழங்கும்.

இதனுடன் இராஜேந்திரம் அவர்களின் 90வது பிறந்த ஆண்டை முன்னிட்டு காணொளிப் பதிவுகளை சேகரிக்க விரும்புகிறோம். 30 வினாடிகள் தொடக்கம் 01 நிமிடம் வரை கொண்ட ஒரு சிறிய காணொளிப் பதிவை சமர்ப்பிக்க, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களான உங்களை வரவேற்கின்றோம். உங்களுக்கும் அன்ரனி இராஜேந்திரத்துக்கும் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி (ஒரு நினைவு) சுருக்கமாகப் பதிவு செய்யலாம். இந்த நினைவுப் பதிவு, இராஜேந்திரம் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதையும், அவருக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு அவர் என்ன முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள உதவும். உங்கள் காணொளிப் பதிவுகள் இந்த வருட இறுதிக்குள் புலம்பெயர் சுவடிகள் காப்பகங்களின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.
நீங்கள் காணொளிப் பதிவை உருவாக்க விரும்பவில்லை என்றால், அல்லது அது தொழில்நுட்ப சவலாக இருக்கும் என்றால், நாம் எழுத்துரு வடிவில் உங்கள் நினைவுப் பதிவை வரவேற்கின்றோம். எழுத்துரு நினைவுப் பதிவு 100 சொற்கள் (+/- 25 சொற்கள்) நீளத்தைக் கொண்டிருக்கலாம். நீங்கள் 100 சொற்களுக்கு மேல் எழுத விரும்பினால் தயங்காமல் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
இந்தத் தொகுப்பில் இணைக்ககூடிய புகைப்படங்களை உங்களால் அனுப்ப முடிந்தால் அதை நாம் ஊக்குவித்து வரவேற்கின்றோம்.
காணொளிப் பதிவு/ புகைப்படம்/ எழுத்துரு நினைவுப் பதிவு சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 10.07.2022.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்மை தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
அபிநயா பிலிப்
முதன்மை தொகுப்பாளர்
அன்ரெனி இராஜேந்திரம் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு


வெளியீடு: பெயர்ப்பட்டியல் வலைப்பதிவு அன்ரனி இராஜேந்திரம்
அன்ரனி இராஜேந்திரம் அவர்களுக்கு இனிய 90வது பிறந்த ஆண்டு வாழ்த்துக்கள்
(20.06.1932 – 12.09.1990)
புதுப்பிப்பு│Update: 20.06.2022