காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்

Graphic: DTA, 2021

Graphic: DTA, 2021

உங்கள் காகித/ அனலாக் (paper/ analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்தி பட்டியலிட இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். ஒரு ஆவணச் சேகரிப்பாளர் அல்லது ஆவண உருவாக்குனர் தமது ஆவணங்களைப் பட்டியலிடும் பொழுது பின் வரும் விடயத்தை கவனத்தில் கொள்க: ஒரு ஆவணத் தொடரின் மூல ஒழுங்கை (original order) மாற்றியமைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஆவணத் தொடரின் மூல ஒழுங்கமைப்பையும், அதன் தர்க்கத்தையும் (logic) பாதுகாப்பது ஆவணக் காப்பின் மேன்மையான கொள்கையாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணக்காப்பின் பயன்பாடுகள்:

  • ஆவணங்களைப் பராமரிக்க உதவும்
  • ஒரு நிறுவனத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உதவும்
  • பதிவுகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தேவைப்படும் பொழுது மீள கண்டுபிக்க உதவும்
  • மீள கண்டுபிக்கப்படும் ஆவணங்களே பயன்படும்
  • பயன்படும் ஆவணங்களே மொழி, பண்பாடு, கலை, அடையாளம், வரலாறு, உரிமைகளை தர்க்கரீயாகப் பாதுகாத்துக் கடத்த உதவும்
<object class="wp-block-file__embed" data="https://dspora.files.wordpress.com/2021/02/035_21_03-01-archive_list_2021-06-29-default.pdf&quot; type="application/pdf" style="width:100%;height:600px" aria-label="Embed of <strong>Archives list short 2021-06-29 (PDF)Archives list short 2021-06-29 (PDF)Download

ஆவணக்காப்பகப்படுத்தலை எங்கு மற்றும் எவ்வாறு ஆரம்பிப்பது? என்று நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்நாள் செயல்பாட்டாளர் ஒருவரின் கேள்வியின் விளைவே இந்த வள உதவி.


புதுப்பிப்பு│Update: 03.12.2021

Leave a comment