நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்

ஆங்கில ஆக்கம்: பிரணயா செல்வா (13), தனுரா பிரேமகுமார் (13), டினுயா சிவலிங்கம், யனுசியா செந்தில்குமார்

சர்வதேச மகளீர் தின நல்வாழ்த்துக்கள்

உலகப் பெண்கள் தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும். ஆனால் ஈழத் தமிழ் பெண்கள் போர் அதிர்ச்சியிலிருந்து ஏற்பட்ட காயங்களுடன் ஒரு வாழ்வை வாழ்கின்றனர். புலம்பெயர்வின் விளைவாக அவர்கள் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று, அவர்கள் தமது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் இடையில் சந்திக்கும் போராட்ட வாழ்க்கை ஆகும். அவர்கள் தினசரி தமது பிள்ளைகளுக்காகவும் தமக்காகவுமான ஒரு சிறந்த வாழ்க்கைக்காக கடின உழைப்பை மெற்கொண்டு வருகின்றனர்.

புலம்பெயர் ஈழத் தமிழரின் முதல் தலைமுறை தமிழ் பெண்கள் சிறு வயதிலிருந்தே போர் அனுபவங்களைக் கண்டு வளர்ந்தனர். அவர்கள் இன்றும், பல வருடங்கள் கழிந்த நிலையிலும், போரினால் தமக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி உணர்வுகளுடன் போராடி வருகின்றனர். தங்கள் குடும்பத்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க தங்கள் அன்பான தாய் மேற்கொண்ட போராட்டத்தைப் பார்த்தும்; அவர்களுடைய தந்தையார் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மேற்கொண்ட போராட்டத்தைப் பார்த்தும் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். மறுபுறம், பல வீரமான மற்றும் தைரியமான தமிழ்ப் பெண்கள் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். அவர்கள் எமது பாரம்பரியத் தமிழர் தாயகத்திற்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

1956ம் ஆண்டு மீன் பிடித் துறைக் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக நோர்வேக்கு முதல் ஈழத் தமிழர் குடியேறினார். தமிழ்ப் பாரம்பரியம் காரணமாக பெரும்பாலான பெண்கள் வேறு நாடுகளுக்கு தனியே புலம்பெயர முடியவில்லை. அதனால் பெரும்பாலான தமிழ் பெண்கள் 1970கள் முதல் குடும்ப மீள் இணைவு காரணமாக நோர்வேக்கு வந்தனர். தமிழ் பெண்கள் தமது பிள்ளைகளுடன் நோர்வேக்கு புலம்பெயர்ந்தனர். அக்காலத்தில், ஒரு சில தமிழ் பெண்கள் மட்டுமே நோர்வேயில் தங்களது பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். விரைவில், தமிழ் வம்சாவளியைக் கொண்ட அதிகமான பிள்ளைகள் நோர்வே மண்ணில் பிறந்தனர். தமிழ்ச் சமூகம் வளர்ந்தது. இதனால் பல தமிழ் கடைகள், கோயில்கள், தமிழ் ஆடை ஆபரணக் கடைகள் அமைக்கப்பட்டன, மேலும் பல செயல்பாடுகள் நிகழ்ந்தன. தமிழ் வாழ்க்கை முறையும் பண்பாடும் நோர்வேயில் வெளிப்பட ஆரம்பித்தது. தமிழ் பெண்கள் நோர்வேக்கு வந்து ஒரு புதிய மொழியைக் கற்க வேண்டியிருந்தது, அது நோர்வேயியம். அவர்களில் பெரும்பாலானோர் உயர் கல்வியைப் பெற முயன்றனர். பல பெண்கள் தமது குடும்ப வாழ்க்கைக்காக தங்களது கல்வி வாழ்க்கையை தியாகம் செய்தனர். ஏனையவர்கள் கல்வியைத் தொடர்ந்து சிறந்த உயர் கல்வியைப் பெற்றனர்.

நோர்வேக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முதல் தலைமுறை தமிழ் பெண்கள் பல சவால்கள் கொண்ட போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்திலிருந்து நோர்வேக்கு புலம்பெயர்ந்து, இங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொண்டார்கள், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டனர். இரண்டு பண்பாடுகளிற்கு இடையில் ஒரு வாழ்வை வாழ்ந்தார்கள். தமது குடும்பத்தை மேம்படுத்தினார்கள். அவர்கள் அனைத்தையும் கையாளும் திறனைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் வீரமானவர்கள், தைரியமானவர்கள் மற்றும் உதவி மனப்பான்மை கொண்டவர்கள். அதனால்தான் அவர்களது இருப்பைக் கண்டு அங்கீகரித்து, அவர்களது குரலை செவிமடுத்து, அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும்.

நோர்வேயில் உருவாகிய ஆவணப் பொருட்களில் புலம்பெயர் தமிழ் பெண்களின் தடங்கள்

சக்தி │ Shakti. (Feb. 1991).
புலம்பெயர் தமிழ் மகளீர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். Quarterly magazine produced by migrated Tamil women editorial.

பனிமுகிழ் │ Panimukizh. (Feb. 2008).
பேர்கன் தமிழ் சிறுவர் பாடசாலையின் 20 வது ஆண்டு விழா மலர். 20th anniversary booklet of Bergen Tamil Children’s School (1987-2019).

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட (1992-இன்று) இரண்டாவது ஆண்டு விழா சிறப்பிதழ் (27.03.1994)│ 2nd Anniversary Booklet (27.03.1994) of Annai Poopathi Tamil Cultural Centre (1992-now).


மேற்கோள்கள்

UNWOMEN. (n.a). «International Women’s Day 2021». Retrieved from https://www.unwomen.org/en/news/in-focus/international-womens-day
Vivekananthan, Majoran. (08.11.2004). «…da tamilske kvinner kom til Norge». Retrieved from https://www.utrop.no/plenum/i-fokus/7840/


புதுப்பிப்பு│Update: 09.03.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: