
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு இணையவழி வள மையம் மற்றும் சமூகக்குழுக் காப்பகமாகச் (Community Archives) செயல்படுகின்றோம். மேலும் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றை பதிவு செய்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் கடத்துதல் ஆகிய பணிகளையும் செய்கின்றோம்.
இந்த ஆண்டு 23 ஏப்ரல் அன்று DTA தனது 3 வது ஆண்டை பூர்த்தி செய்கிறது. இச்சந்தர்ப்பத்தில், “சிறுவர் மற்றும் சிறுவர் கதைகள்” என்ற கருப்பொருளின் கீழ் எமது நாள் 2023 (Our Day 2023 – Vår Dag 2023) ஐக் கொண்டாட விரும்புகிறோம். நோர்வேயில் உள்ள நோர்வேயியத் தமிழ் சிறுவர்கள் சொல்லும் தமிழ் பாரம்பரியக் கதைகளை அறிந்து கொள்ள வாருங்கள். இக்கண்காட்சியில் பேர்கன், ட்ரொன்ட்ஹெய்ம், ஸ்டாவங்கர் மற்றும் ஆஸ்கர் ஆகிய இடங்களில் வாழும் தமிழ்-நோர்வேயிய சிறுவர்கள் சொல்லும் கதைகளைப் படிக்கவும் கேட்கவும் வாருங்கள்.
ஒஸ்லோவில் ஒசுலோ நகரச் சுவடிகள் காப்பகத்தில் கண்காட்சி: 26.04.2023 – 31.05.2023
Oslo City Archives (இணையதளம்)
Maridalsveien 3, 0178 Oslo
பொதுமக்களுக்கு திறக்கும் நேரம்
செவ்வாய் மற்றும் புதன்: 09:00 – 15:00 மற்றும் வியாழன்: 12:00 – 18:00
பேர்கனில் ஓசென் அங்காடிகள் கூடத்தில் கண்காட்சி: 29.04.2023 – 13.05.2023
Oasen Senter (இணையதளம்)
Folke Bernadottes vei 52, 5147 Fyllingsdalen
பொதுமக்களுக்கு திறக்கும் நேரம்
திங்கள் – வெள்ளி: 10:00 – 21:00 மற்றும் சனிக்கிழமை: 10:00 – 18:00
பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அனைவரையும் கண்காட்சிக்கு வரவேற்கிறோம்!
அன்புடன்
ஜென்னி மற்றும் மதுஷியா
எமது நாள் 2023 கண்காட்சிக்கான செயல்திட்ட மேலாளர்கள்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம்
புதுப்பிப்பு│Update: