1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் படிப்படியாக வளர்ந்தது. எனினும், 1933ம் ஆண்டு பிரித்தானியர்கள் மூன்று இராச்சியங்களை ஒரே நாடாக நிறுவிய போதே இப்போராட்டம் அறியாமலேயே எதிர்பார்க்கப்பட்டது. இதுவே தமிழர்களை அவர்களது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மை எனும் ஓர் கட்டமைப்பிற்குள் தள்ளியது.

1948ம் ஆண்டு முதல் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு பல்வேறு கால கட்டங்களைக் கொண்டது. ஆயுதப் போராட்டத்தின் கால கட்டம் (1970 களின் இறுதி முதல் – மே 2009 வரை) பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களின்[ii] தோல்வியுற்ற அகிம்சை மற்றும் அரசியல் போராட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெடித்தது.
1976ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் அன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி (Tamil United Liberation Front) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழம் என்பதை கோரியது. இதுவரை அறியப்பட்டதின் அடிப்படையில், இதுவே தமிழீழம் என்ற சொல் அரசியல் எழுத்து வடிவில் எழுதப்பட்ட முதல் சான்றாகும். தமிழீழம் எனும் சொல் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தைக் குறிக்கிறது. 1970களின் இறுதியில் தோன்றிய பல்வேறு தமிழ் போராட்டக் குழுக்கள்[iii] தமிழீழம் என்பதை தமது இலக்காகினர்.
சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்; தன்மானம் இழந்து தலை குனிந்து வாழ வேண்டும்; பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்; படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
Reflections of Hon VELUPILLAI PRABAKARAN
Cutantirattai veṉṟeṭukkātu pōṉāl nām aṭimaikaḷāka vāḻa vēṇṭum; taṉmāṉam iḻantu talai kuṉintu vāḻa vēṇṭum; payantu payantu pataṟṟattuṭaṉ vāḻa vēṇṭum; paṭippaṭiyāka aḻintupōka vēṇṭum. Ākavē cutantirattiṟkākap pōrāṭuvatait tavira emakku vēṟu vaḻi etuvumillai.
If we do not achieve independence, we must live as slaves, loose self-respect and live with bowed head, live in permanent fear and tension, and gradually die out. Therefore there is no other way for us than fight for independence.
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
26. நவம்பர் 1954ம் ஆண்டு பிறந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1972ம் ஆண்டு புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers – TNT) என்ற போராட்டக் குழுவை உருவாக்கினார். ஒரு கெரில்லா அமைப்பை (guerrilla organization) உருவாக்க விரும்பிய அவர் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam – LTTE) எனும் அமைப்பை 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் உருவாக்கினார். இது தமிழீழத்தில் தமிழர்களுக்கான ஒரு அரசியல்-இராணுவ நிலைத்தன்மையாக (politico-military sustainablity) உருவெடுத்தது. அதோடு அது 1990 களில் இருந்து மே 2009 வரை தமிழீழ (வட-கிழக்கு இலங்கை) நடைமுறை அரசை (de-facto state Tamil Eelam) ஆட்சி செய்தது. உலகத் தமிழர்களால் தமிழீழத் தேசியத் தலைவர் அல்லது தமிழ்த் தேசியத் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது தலைமை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான நியாயமான போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009ம் ஆண்டு மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது.
இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, தாங்கொணாத் துண்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம்
Reflections of Hon VELUPILLAI PRABAKARAN
Irattam cinti, viyarvai cinti, kaṇṇīr cinti, tāṅkoṇāt tuṇpattiṉ paricākap peṟuvatutāṉ cutantiram
By spilling blood, perspiring profusely, spilling tears and by experiencing of unbearable suffering you get independence indeed as reward.
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்
Ilaṭciyattil oṉṟupaṭṭu uṟutipūṇṭa makkaḷē varalāṟṟaip paṭaippārkaḷ
A people who are united and determined about its aim create history.
Reflections of Hon Velupillai Prabakaran
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழில் மேதகு என்ற தலைப்புடன் குறிப்பிடப்படுகிறார். மேதகு என்பது மரியாதைக்குரியவர் அல்லது மேன்மையானவர் என்று பொருள். மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தில் முப்படைகளை உருவாக்கினார். அவை தமிழீழத்தின் வான் படை, தரைப்படை மற்றும் கடற்படை ஆகும். தமிழர் வரலாற்றில் முப்படைகளை உருவாக்கிய முதல் தமிழன் என்ற பெருமையை அவரது சாதனை படைத்துள்ளது. அவரது தலைமையில் தமிழீழத்தில் அவர் உருவாக்கிய முப்படைகளிலும் பெண் போராளிகளின் தடம் பதிந்து பெண் விடுதலைக்கான பாதையை வகுத்தார். அவர் தனது காலத்திலேயே தமிழீழத்தில் பெண்களின் வலிமை, சுதந்திரம், மரியாதை மற்றும் சம உரிமைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.
Reflections of Hon VELUPILLAI PRABAKARAN
(Peṇ viṭutalai eṉṟa ilaṭciyap pōrāṭṭamāṉatu, ematu viṭutalai iyakkattiṉ maṭiyil piṟanta akkiṉik kuḻantai.
The struggle for the aim of the liberation of women is the child of fire born on the lap of our liberation movement.
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மன உலகில் பெண்மை பற்றிய அவர்களது கருத்துலகில் – ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
Poruḷulakattai ententa vaṭivaṅkaḷil cīramaittālum āṇkaḷiṉ maṉa ulakil peṇmai paṟṟiya avarkaḷatu karuttulakil – āḻamāṉa māṟṟaṅkaḷ nikaḻāmal peṇ camattuvam cāttiyamākap pōvatillai.
Whatever reforms are carried out in the economy, without deep going changes in men’s mentality – in their opinion about femininity – women’s equality may not be possible.
Reflections of Hon Velupillai Prabakaran
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
ஒரு போராட்டக் குழுவாக ஆரம்பித்து, கெரில்லா அமைப்பாக உருவெடுத்து, தமிழீழ நடைமுறை அரசாக பரிணாம வளர்ச்சி பெற்ற பதையில், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழி நடத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை தமிழீழத்தில் உருவாக்கினார்கள்[iv]. சர்வதேசச் செயலகம், தமிழீழ நிதித் துறை, மருத்துவப் பிரிவுகள், தொண்டு நிறுவனங்கள்/ அரசு சாரா நிறுவனங்கள் (NGO), ஊடகத்துறை, படைத்துறைப் பிரிவுகள், வணிகம் மற்றும் வர்த்தகம், கல்லூரிகள், சமூக நலன்புரி நிலையங்கள், அரசியற்துறை, தமிழீழக் காவல்துறை மற்றும் தமிழீழ நீதித்துறை ஆகியன தமிழீழ நடைமுறை அரச கட்டமைப்புகளாக இருந்தன. தமிழீழத்தில் உள்ள சிவில் சமூகம் மற்றும் படைத்துறைப் பிரிவுகள் இரண்டிலும் நீதி மீறல்களைக் கண்காணிப்பதற்கு தமிழீழத்தின் காவல்துறை மற்றும் நீதித்துறை சுயாட்சியுடன் செயற்பட்டது. இது பொதுநலம், சட்ட ஒழுங்குடன் கூடிய தமிழீழ நடைமுறை அரசின் பரிணாம வளர்ச்சியாகும்.
சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம், பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும்; அத்தகைய இனத்தால்தான் சுதந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.
Reflections of Hon VELUPILLAI PRABAKARAN
Cutantiram vēṇṭik kiḷarnteḻum ōr iṉam, poruḷātāra vāḻvil taṉ contak kālkaḷil niṟka vēṇṭum; attakaiya iṉattāltāṉ cutantirattai aṉupavikka iyalumeṉpatu niyatiyākum.
An ethnic community that rebels for independence must stand on its own feet in economic life. It is a truism that only such an ethnic community can enjoy independence.
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
கட்டி எழுப்பப்படவுள்ள தமிழீழத்தின் வளர்ச்சிக்கு ஆயுதத்தை மட்டும் நம்பியிராமல், அனைத்துத் துறைகளிலுமே வளர வேண்டும் என்பதில் நான் அக்கறையாக உள்ளேன்.
Kaṭṭi eḻuppappaṭavuḷḷa tamiḻīḻattiṉ vaḷarccikku āyutattai maṭṭum nampiyirāmal, aṉaittut tuṟaikaḷilumē vaḷara vēṇṭum eṉpatil nāṉ akkaṟaiyāka uḷḷēṉ
For the development of yet to be established Tamillam, I do not have trust in arms alone; I am very keen that there should be development in all fields.
Reflections of Hon Velupillai Prabakaran
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)
நான் பெரிது, நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால், நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. ஏனெனில், நாட்டின் வாழ்வு எமது நிலையற்ற வாழ்விலும் பெரியது.
Nāṉ peritu, nī peritu eṉṟu vāḻāmal nāṭu peritu eṉṟu vāḻuṅkaḷ. Nāṭu namakkup peritāṉāl, nām ellōrum ataṟkuc ciṟiyavarkaḷē ēṉeṉil, nāṭṭiṉ vāḻvu ematu
May you live thinking ‘the country is great’ and not ‘I am great or you are great’. If we accept that the country is great, all of us are smaller than that. The life of the country is greater than our impermanent lives.
Reflections of Hon VELUPILLAI PRABAKARAN
(TRANSLATION BY PETER SCHALK & ALVAPPILLAI VELUPPILLAI)[v]
Endnotes and references
[i] Selvendra, S. (2019). The Subjugated Tamil People in Sri Lanka: A historical background & an appeal to Great Britain. Tholthamizh: 39
[ii] ஈழம் (īḻam; ஈழம்) என்பது முழுத் தீவின் பூர்வீக/பழங்காலப் பெயராகும். இன்று இலங்கை/ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஆகும்.
[iii] «Examples from the early political identities: Liberation Tigers of Tamileelam (LTTE: Thamizheezha Viduthalaip Pulika’l), Peoples Liberation Front of Tamil Eelam (PLOTE: Thamizheezha Makka’l Viduthalaik Kazhakam), Tamil Eelam Liberation Organisation (TELO: Thamizheezha Viduthalai Iyakkam), Eelam Revolutionary Organization (EROS: Eezhap Puradchi Amaippu) and Eelam People Revolutionary Liberation Front (EPRLF: Eezhamakka’l Puradchikara Viduthalai Munna’ni )»
TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012
[iv] Gemini, S. (2019). Structures of Tamil Eelam: A Handbook. Puradsi Media.
telibrary.com. (n.a.). Tamil Eelam de facto state. Retreived from https://telibrary.com/en/category/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81/. (Visited 26.11.2022)
[v] பீட்டர் ஷால்க் (Peter Schalk), பேராசிரியர் அல்வாப்பிள்ளை வேலுப்பிள்ளையுடன் இணைந்து ஒரு ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இது 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட “தலைவரின் சிந்தனைகள்” எனும் மூலத் தமிழ் வெளியீட்டை மொழிபெயர்க்கும் பணியாகும். இந்த படைப்பில் மூலத் தமிழ் எழுத்துரு, அதோடு யெர்மன், ஆங்கிலம், ஸ்வீடிஷ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.
Schalk, P. (2007a). talaivarin cintanaikai. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT04.pdf
Schalk, P. (2007b). Tamil Source in English Translation: Reflections of the Leader. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT06.pdf
Schalk, P. (2007c). Uppsala University Publications. Retrieved from http://uu.diva-portal.org/smash/record.jsf?amp;dswid=contents&pid=diva2%3A173420&dswid=5816
Prabakaran, V. (1995). தலைவரின் சிந்தனைகள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவு: தமிமீழம். Retreived form https://noolaham.net/project/726/72532/72532.pdf. (Visited 26.11.2022)
புதுப்பிப்பு│Update: