வெளியிடப்பட்டத் தயாரிப்புகள்: பதிப்புரிமை – திறந்த அணுக்க உரிமங்கள்– பொதுக் களம்

பாகம் 1:

அறிமுகம்

காப்பகச் சுவடிகள் (காப்பக ஆவணங்கள்) 1) செயல்முறை பதிவுகள் (process records) அல்லது 2) வெளியிடப்பட்ட தயாரிப்புகளாக (published materials) இருக்கலாம். இந்த இரண்டு வகையான காப்பகப் பொருட்களும் ஒரு மக்கள் குழுவின் பண்பாட்டு வரலாறு, தகவல், சான்றுகள் மற்றும் நினைவகத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பங்கைக் கொண்டுள்ளன. நிறுவனச் செயல்முறைகள் (organizational processes) அல்லது வணிகச் செயல்முறைகள் (business processes), மற்றும் சமூக செயல்முறைகளின் (social processes) பதிவுகளிலிருந்து வெளியிடப்பட்ட தயாரிப்புகள் வேறுபட்டவை ஆகும். வெளியிடப்பட்ட தயாரிப்புகள் பொதுவெழியில் கிடைக்கும். எனவே, அவை ஒரு உரிமத்தைத் தாங்கி இருக்கும். அந்த உரிமம் வெளியிடப்பட்ட தயாரிப்பின் பயன்பாடு (use) மற்றும் மீள்ப்பயன்பாட்டில் (reuse) உள்ள உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பொதுமக்களுக்குத் தகவலைத் தெரிவிக்கும். உரிமங்களின் வகைகள் பதிப்புரிமை முதல் திறந்த அணுக்க உரிமங்கள் வரை இருக்கலாம். இருப்பினும், திறந்த அணுக்க உரிமம் (open-access licence) என்பது பொதுக் களம் (public domain) போன்றது அல்ல.

செயல்முறை பதிவுகள் மற்றும் வெளியிடப்பட்ட தயாரிப்புகள்

ஒரு நிறுவனத்தின் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் ஒரு செயற்திட்டத்தின் இறுதித் தயாரிப்பாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நூல், கையேடு, இதழ், மலர், நிகழ்வின் காணொளிப் பதிவு, ஒலித்தட்டு, இணையதளம், புகைப்படம் அல்லது பிற ஆக்கபூர்வமான படைப்புகள் அல்லது ஊடகத் தயாரிப்புகளாக இருக்கலாம். அவை இலக்கிய, கலைப் படைப்புகள் (literary and artistic works) என்றும் அழைக்கப்படுகின்றன.

செயல்முறை பதிவுகள் (process records) ஒரு நிறுவனத்தில் நிகழும் செயல்பாடுகளைப் பதிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கலை நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயல்பாட்டில் உருவாக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் ஆவணங்களாக இருக்கலாம். செயல்முறை பதிவுகள் என்பது திட்டமிடல் ஆவணங்கள், கூட்ட அறிக்கைகள், படிவங்கள் மற்றும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயல்பாட்டில் எடுக்கப்படும் தீர்மானக் கடிதங்களாக இருக்கலாம்.

மறுபுறம், ஒரு ஆண்டுவிழா மலர் போன்ற வெளியிடப்பட்ட தயாரிப்பு ஒரு கலை நிகழ்வில் விநியோகிக்கப்படலாம். இருப்பினும், ஒரு ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் செயல்பாட்டிலும் கூட

திட்டமிடல் ஆவணங்களும் கூட்ட அறிக்கைகளும் உருவாக்கப்படலாம் அல்லது பயன்படுத்தப்படலாம். இவை ஒரு செயல்முறையின் பதிவுகளாக ஆகும். எனவே, இச்சந்தர்ப்பத்தில், செயல்முறை பதிவுகள் மற்றும் வெளியிடப்பட்ட தயாரிப்பு ஆகிய இரு வகை சுவடிகளும் உருவாக்கப்படும்.

வரைகலை: செயல்முறை பதிவுகள் மற்றும் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் ஆகிய இரு வகை சுவடிகளும் தமிழ் அமைப்பான இளங்கற்று வானொலியில் உருவாக்கப்படுகிறது. (DTA, 17.01.2022).

காப்பகச் சுவடிகளுக்கான அணுக்கம்

செயல்முறைப் பதிவுகள் மற்றும் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் ஆகிய இரு வகை பொருட்களும் காப்பகச் சுவடிகளுக்கான (archival document) மதிப்பைக் கொண்டிருக்கலாம். அவ்வாறு இருப்பின் அவை நிரந்தரமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இருப்பினும், செயல்முறைப் பதிவுகள் பொதுமக்களுக்குத் திறந்த அணுக்கத்துடன் கிடைக்காமல் இருக்காலாம். ஆனால் மறுபுறத்தில், இலக்கிய, கலைப் படைப்பு எனப்படும் வெளியிடப்பட்ட தயாரிப்புகள் பொதுவாக இலவசமாகவோ அல்லது விற்பனைக்கோ வெளிப்படையாகக் கிடைக்கும். வெளியிடப்பட்ட தயாரிப்புகள் பின்வரும் வகைகளாக இருக்கலாம்:

  • கலை வேலைப்பாடுகள். அதாவது இலக்கியம், இசை, நாடகம் (Works of art)
  • பத்திரிகைத் தயாரிப்புகள் (journalism)
  • பிற ஊடகத் தயாரிப்புகள் (media production)
  • வெளியிடப்பட்ட நிர்வாகப் பொருட்கள். அதாவது நிகழ்விற்கான நுழைவுச் சீட்டு, துண்டுப் பிரசுரம்/அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் ஆண்டு மலர்.

இந்த வகையான வெளியிடப்பட்ட தயாரிப்புகள் மரண அறிவிப்பு, நினைவு அஞ்சலி, தற்காப்புக் கலைகள், உயிரியல், மொழியியல், பண்பாடு மற்றும் வரலாறு போன்ற பல்வேறு துறைகளை எடுத்துச் செல்வதற்கான ஊடகங்களாகத் திகழ்கின்றன.

வெளியீடு மற்றும் உரிமம்

வெளியிடப்பட்ட தயாரிப்புகள் வெளிப்படையாகக் கிடைக்கும்போது, அந்த தயாரிப்புகளிற்கு ஒரு உரிமம் இருக்கும். அது ஒரு தயாரிப்பின் பபயன்பாடு மற்றும் மீள்ப்பயன்பாட்டுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கும். அந்த  உரிமத்தின் நோக்கம் வெளியிடப்பட்ட தயாரிப்பின் பொருளாதார நன்மை, தார்மீகம் மற்றும் பண்பாட்டு மதிப்புகளைப் பாதுகாத்தல் ஆகும். அத்துடன் இயற்பியல் (analogue) மற்றும் எண்ணிம (digital) தயாரிப்புகளின் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதும் ஆகும்.

உரிமங்களின் வகை பதிப்புரிமை (copyright) முதல் திறந்த அணுக்க உரிமங்கள் (open-access licences) வரை இருக்கலாம். இருப்பினும், திறந்த அணுக்க உரிமம் (open-access licence) என்பது பொதுக் களம் (public domain) போன்றது அல்ல. உரிமத்தின் வகை இலக்கிய, கலைப் படைப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக சேவையாற்ற வேண்டும். வெளியிடப்பட்ட தயாரிப்பைத் தயாரித்த தனிநபர் அல்லது நிறுவனம் அதன் உரிமப் பொறுப்பைப் பராமரிக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, தமிழ் சமூகத்தில் வெளியிடப்பட்ட தயாரிப்புகளின் பதிப்புரிமை அல்லது திறந்த அணுக்க உரிமங்கள் அல்லது பொதுக் களத்தை (public domain) நிர்வகிப்பது தொடர்பில் பொறுப்பின்மை அல்லது விழிப்புணர்வு இல்லாமை அல்லது தகவல்களில் குழப்பம் காணப்படுகின்றது. இந்த நிலையை குறிப்பாகத் தமிழீழத்தில் வெளியிடப்பட்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய தயாரிப்புகளில் காணலாம். அதுவும் அவற்றை உருவாக்கிய தனிநபரோ அல்லது அமைப்போ இல்லாத சூழலில் மேலும் தெளிவாகப் புலப்படுகிறது.

நாம் இக்கட்டுரையை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து ஈழத்தமிழ் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், புகைப்பட/ ஒளிப்பதிவுக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், பதிப்பகங்கள் என அனைவருக்கும் சமர்பிக்கிறோம்.

நாம் தமிழீழத் தேசிய மாவீரர்களின் மாதமான நவம்பர் மாதத்தையும் இத்துடன் நினைவுகூருகிறோம்.

அடுத்த பகுதி

பதிப்புரிமை – திறந்த அணுக்கம் –  பொதுக் களம்
Copyright vs. Open access vs. Public domain


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: