
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில்1 இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் (“No Fire Zone”) இல் கஞ்சி2 மட்டுமே கிடைக்கப்பெற்றது. அன்று இருந்த மருத்துவ, உணவு மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளில், கிடைத்தால், சிறிதளவு உப்புப் போட்டு அவித்த சோறுடன் சோற்றுத் தண்ணீர் மட்டுமே பட்டினியால் வாடிய மக்களுக்கு உயிர்நாடியாக இருந்தது.
உலக ஊடகங்கள் தனது கண்களையும் வாயையும் மூடிக்கொண்ட நிலையிலும், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் முள்ளிவாய்க்காலில் இருந்த தமிழர்களை கைவிட்ட நிலையிலும், பீரங்கி எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல் சூழப்பட்ட பாதுகாப்பு வலயம் (“No Fire Zone”) இல் சிக்கிய மக்களுக்கு கஞ்சி மட்டுமே ஒரு நம்பிக்கை ஒளியாக இருந்தது. மே 2009க்குப் பின்னர், கஞ்சி எனும் உணவுப் பண்பாடு முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பில் உயிர் பிழைப்புக்கான அடையாள உணவாக மாறியுள்ளது – முள்ளிவாய்க்கால் கஞ்சி.
உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து, உயிர் பிழைத்தவர்களுக்கு ஆறுதலாவோம்.
முள்ளிவாய்க்கால் வாரம் மே 12 முதல் 18 வரை.
(1) முள்ளிவாய்க்கால் வன்னிப் பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஈழத்தின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள நந்திக்கடல் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 2009 மே மாதம் தமிழ் இனவழிப்பு நடந்தது. மே 2009க்குப் பின்னர், தமிழ் இனவழிப்புக்கான அடையாளப் பெயராக இக்கிராமப் பெயர் மாறிவிட்டது.
(2) கஞ்சி என்பது ஒரு வகை அரிசிக் கூழ் ஆகும். கஞ்சி எனும் தமிழ் சொல்லின் பொருள் “அரிசி நீர், அரிசி ஊற்றப்பட்ட தண்ணீர், மாவுச்சத்து”. (T. Burrow, 1984). கஞ்சி எனும் தமிழ் சொல்லின் வழித்தோன்றல் congee எனும் ஆங்கில சொல்.
கஞ்சி என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் congee என்ற பயன்பாட்டில் உள்ளது.
Reference
Congee of hope. (2021). Congee கஞ்சி just add hope. Retrieved from https://www.congeeofhope.org/
T. Burrow, M. B. E. (1894). A Dravidian Etymological Dictionary(2 ed.). Retrieved from https://archive.org/details/DravidianEtymologicalDictionary_201811
புதுப்பிப்பு│Update: 13.05.2022