

இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு “பதிவேட்டு மேலாளரை” நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் நடைமுறைகளையும் பண்பாட்டையும் நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கின்றது. இன்றைய எமது செயல்பாடுகளின் நிர்வாகப் பதிவுகள் ஒரு சமூகத்தின் மற்றும் ஒரு தேசத்தின் எதிர்கால வரலாற்று ஆவணங்கள் ஆகும். இது உங்கள் காப்பக ஆவணங்களால்
மட்டுமே சாத்தியமாகும்.
dspora, 2020
பெப்ரவரி 2021 இல் புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணக்காப்பு காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் குறித்து முதலாவது பொது மெய்நிகர் சந்திப்பை ஒழுங்கு செய்தது. இந்த சந்திப்பு நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகளுக்காக நோர்வேயிய மொழியில் நடாத்தப்பட்டது. நோர்வேயில் உள்ள ஆறு நோர்வேயிய காப்பக நிறுவனங்கள் பங்கேற்றனர். அவர்கள் நோர்வேயில் உள்ள காப்பக மற்றும் பேணிப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி தெரிவிக்க நான்கு உரைகளை வழங்கின.
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச ஆவணக்காப்புத் தினத்தை முன்னிட்டு இரண்டாவது பொது மெய்நிகர் ஆவணக்காப்பு விழிப்புணர்வு மற்றும் தகவல் நிகழ்வை இன்று தாழ்மையுடன் அறிவிக்கின்றோம். இந்த இரு நாள் நிகழ்வு சனிக்கிழமை யூன் 12ம் நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை யூன் 13ம் நாள் ஐரோப்பிய நேரப்படி மாலை 06:00 – 08:00 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வு தமிழ் மொழியில் நடைபெறும். தமிழர்களின் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் காட்சிக் கூடத்துடன் பார்வையாளர்களின் நுழைவு மாலை 05:50 மணிக்கு திறக்கப்படும்.
நிகழ்வு ஒளிப்பதிவு செய்யப்படும்.
Zoom
சனிக்கிழமை 12.06.2021 மாலை 05:50 – 08:00
நுழைவு: மூடப்பட்டுள்ளதுஞாயிற்றுக்கிழமை 13.06.2021 மாலை 05:50 – 08:00
நுழைவு: மூடப்பட்டுள்ளது
இந்த மெய்நிகர் நிகழ்வை ஒழுங்கு செய்ய உதவிய அனைத்து பங்களிப்பாளர்களுக்கும், வளம் செர்த்தவர்களுக்கும் எங்கள் தாழ்மையான நன்றியை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். இந்த இரு நாள் நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (TYO நோர்வே) தொழில்நுட்ப உதவியை அளித்து வளம் சேர்க்கின்றனர். இரண்டு புலம்பெயர் தமிழ் நபர்கள் மற்றும் நான்கு புலம்பெயர் தமிழ் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பக அமைப்புகள் பங்களிக்கின்றனர். அவர்கள் குறித்த விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு தலைப்புகளில் உரைகளை வழங்கவிருக்கின்றனர். இவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் பங்களிக்கும் இன்னுமொரு அமைப்பை இணைத்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ் சமூகத்தில் ஆவணக்காப்பகம், நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தின் பங்கு, அறிவு மற்றும் உரிமைகளுக்கான தமிழ் காப்பக ஆவணங்களின் அணுக்கம், ஒரு தமிழ் தொட்டறியக்கூடிய ஆவணக்காப்பகத்தின் பயணம், பதிப்புரிமை மற்றும் மூல விமர்சனம் (copyright and source criticism), புலம்பெயர் தமிழ் குடும்பங்களின் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் பேணிப் பாதுகாத்தல், மற்றும் தமிழர்களுக்கான மெய்நிகர் களஞ்சியங்களின் தேவை ஆகியவை உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் ஆகும். இரண்டு நாட்களின் முடிவிலும் ஒரு கேள்வி நேரம் அமைக்கப்பட்டுள்ளது.


உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
புதுப்பிப்பு│Update: 14.06.2021