தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்: பகுதி 1

தமிழ். English.

எண்ணிம ஓவியம்: «Lets educate ourselves» எனும் பயிற்சி நிரலிற்காக வரைந்த “கார்த்திகைப் பூ” (குளோரியோசா லில்லி, தமிழீழத் தேசிய மலர்). (2020). வடிவமைப்பு: Pavidesigns. வெளியீடு: தமிழ் இளையோர் அமைப்பு, ஐக்கிய இராச்சியம் (TYO). TYO UK படவரிலிருந்து (Instagram) எடுக்கப்பட்டது.

«கடந்த காலத்தை சரிபார்ப்பவர் (control) எதிர்காலத்தை நிர்வகிக்கின்றார். நிகழ்காலத்தை நிர்வகிப்பவர் கடந்த காலத்தை சரிபார்க்கின்றார் (control).» 

ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell)3.
வரைகலை: «கார்த்திகைப் பூ» (குளோரியோசா லில்லி, தமிழீழத் தேசிய மலர்). (2011). வெளியீடு: தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (TYO).

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன?

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகுகின்றன. இந்த ஆவணங்களில் ஒரு பகுதி தமிழர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனைய ஆவணங்கள் சட்டரீதியிலான தடைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பிற ஆவணங்கள் தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன் நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் தமிழ் மற்றும் ஈழத் தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒரு பகுதியாகப் பின்னிப்பிணைந்து உள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களுக்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  • ஒரு நாட்டில் அல்லது பிற நாடுகளில் உள்ள சட்ட ரீதியிலான தடைகளால் எமது வரலாற்றை நாமே ஆவணப்படுத்த முன்வராமல் எம்மை நாமே கட்டுப்படுத்துதல்.
  • ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கைக்கு மாறான பிற ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
  • ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கையில் உள்ள சரி பிழைகளை விமர்சிக்கும் அல்லது சுட்டிக்காட்டும் பிற ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
  • ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கை செயல்பாட்டில் நிகழ்ந்த நடவடிக்கைகளை அந்த தலைமை தம்மைத் தாமே மீள் பரிசீலனை செய்து வெளியிட்ட ஆவணங்களை அக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அல்லது பிறர் கட்டுப்படுத்துதல்.
  • ஒரு அரசியல் கொள்கையில் பணியாற்றியவர்கள் பிற்காலத்தில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டமையால் அல்லது விமர்சனங்களையும் சுட்டிக்காட்டல்களையும் வெளிப்படுத்தியமையால் அவர்கள் சார்ந்த ஆவணங்களை கட்டுப்படுத்துதல்.
  • ஒரு அமைப்பு வெளிட்ட ஆவணங்களில் உள்ள அதன் இலச்சினையை மறைத்து மீள்ப் பாவனை அல்லது மீள் வெளியீடு செய்பவர்கள் தமது இலச்சினையைப் பொறித்து வெளியிடுதல். அவர்கள் மூல இலச்சினையை மறைத்தோ அல்லது மூல இலச்சினையுடன் தமது சொந்த இலச்சினையையும் இணைத்தோ வெளியிடுதல். இதனால் ஆவணத்தின் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் சிதறடிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுதல்.
  • ஊடகங்கள், சமூக ஊடக வங்கிகள் மற்றும் இணையத்தளங்கள் தாக்கப்பட்டு முடக்கப்படுதல்.
  • ஏனைய

«இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.»

மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் 4

வரலாறு எப்போதும் நமக்கு வழிகாட்டும்! ஆனால் அந்த வரலாறு நமக்கு வழிகாட்ட, அது முழுமையானதாக இருக்க வேண்டும்! அதனால்தான் தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் வரலாற்றுப் பண்பாட்டு ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எவ்வாறு தமிழர் ஆவணங்களை புலத்தில் பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம் என்ற உங்கள் கருத்துகளை, சிந்தனைகளை, ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும் …


பின்குறிப்பு மற்றும் மேற்கோள்கள்


புதுப்பிப்பு│Update: 25.12.2024

Leave a comment