தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வேயின் ஊக்குவிப்புக் கருத்தரங்கு: உலக வாழ் தமிழர்கள் ஆவண மேலாண்மை உயர் கல்வியைக் கற்க முன்வர வேண்டும்

22.10.2020 அன்று DsporA Tamil Archive முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

TYO நோர்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புக் கருத்தரங்கை 21 ஆம் திகதி அக்டோபர் மாதம் 2020 அன்று ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள ஆலோசனை மையத்தில் (Tamil Resource and Counseling Center/ Tamilsk Ressurs og Veiledning Senter – TRVS) ஒழுங்கு செய்தது. நோர்வேயிய உயர் கல்வியில் உள்ள கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் பழக்கப்படுத்தவும் ஒரு தளத்தை உருவாக்குவது இக்கருத்தரங்கின் நோக்கமாக அமைந்தது.

கருத்தரங்கில் பிரதிநிதித்துவப்படுத்திய கல்விகளைப் பார்து வியப்பாக இருந்தது. அங்கு புலம்பெயர் தமிழரின் பன்முகத்தன்மை, பரவலான, வளமான அறிவாளுமையைப் பிரதிபலித்தது.
அங்கு சமூகமளித்த கல்வித்துறைகள் பின்வருமாறு: மருத்துவம் (medicine / medisin), அறிவார்ந்த அமைப்புகள் / எண்ணிம விசாரணை (intelligent systems, digital investigation / intelligente systemer, digital etterforskning), தொழில்துறை பொறியியல் (industrial engineering / byggingeniør), ஆவண அறிவியல் (archive science / arkivvitenskap), சமூகவியல் / குழந்தைகள் நலன் (socionom/ child welfare (Sosionom/ Barnevernspedagog), ஊட்டச்சத்து நிபுணர் (nutritionist/ ernæringsfysiolog), தகவல்தொடர்பு (informatics/ informatikk), ஆசிரியர் (teacher/ lærer), தொழில்துறை பொருளாதாரம் (industrial economy /industriell økonomi), நர்சிங் (nursing/ sykepleier), நீதித்துறை (jurisprudence/ rettsvitenskap).

படம்: TYO நோர்வே (தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே) முகநூல் பதிவு (22.10.2020)


கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நோர்வே வாழ் புலம்பெயர் தமிழரைப் பிரதிபலிக்கும் ஆவணங்கள் 1980 களிலேயே உறைந்து போய் நிற்கின்றது. இவை அகதிகளாக இன்நாட்டிற்கு வந்த தமிழர்களின் கதையைச் சொல்கிறன. நோர்வே வாழ் புலம்பெயர் தமிழரின் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடப் பயணத்தை பிரதிபலிக்கும் ஆவணப்படுத்தல் நிகழ வேண்டிய அவசியம் உள்ளது. அந்த ஆவணங்களை பொது அணுகத்திர்குக் கிடைக்கச் செய்யவும் ஒரு பாரிய தேவை உள்ளது. இதில் உலகத் தமிழரும் உள்ளடங்கும்.

உலகளாவிய அளவில் தமிழ் மாணவர்கள் ஆவண மேலாண்மை உயர் கல்வியை மேற்கொள்ள முன்வர வேண்டும். ஆவண மேலாண்மை நிர்வாக கட்டுப்பாடு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பராமரிக்கும். உரிமைகளைப் பாதுகாக்கும். நாம் வாழும் தேசத்தின் பண்பாட்டு வரலாற்றின் ஆதாரங்களை பேணிப் பாதுகாக்கும். மேலும், ஆய்வுப் பணிகளுக்கான ஆவண மூலங்களைப் பேணிப் பாதுகாத்து அணுக்கத்திர்கு கிடைக்கச் செய்யும். இப்பணியில் புலம்பெயர் தமிழ் சமூகமும் உள்ளடங்கும்.

ஆவண அறிவியல்/ ஆவண மேலாண்மை உயர் கல்வி பற்றிய மேலதிகத் தகவல், மற்றும் இக்கல்வியை வழங்கும் நோர்வேயிய பல்கலைக்கழகங்களைப் பற்றிய தகவலுக்கு பின்வரும் இணையத்தளத்தை பார்வையிடவும். https://sok.samordnaopptak.no/#/admission/6/studies
இந்த இணையத்தளத்தில் «Arkiv» என்ற சொல்லைத் தேடவும்.

ஆவண அறிவியல்/ ஆவண மேலாண்மை என்ற உயர் உயர் கல்வியை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்கிய TYO நோர்வேக்கு நன்றி.

TYO Norge (Tamil Youth Organization Norway) Facebook post (22.10.2020)

அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி பயணத்தில் வெற்றி பெற சிறப்பான வாழ்த்துக்கள்.


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: