நாடு தழுவிய ரீதியில் பொதுக்கூட்டம்

Norsk. Tamil.

வணக்கம்,

நாடு தழுவிய ரீதியிலான 70வது ஆண்டு நிறைவை அடையாளப்படுத்திக் கொண்டாடும்  மக்கள் நிகழ்வு
குறித்தும், ஒசுலோ நகரசபையில் ஒரு நிகழ்வு குறித்தும் முதலாவது நாடு தழுவிய ரீதியிலான பொதுக்கூட்டம்!

நோர்வேயில் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றின் 70 ஆண்டுகளை (1956-2026) நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடையாளப்படுத்திக் கொண்டாடுவோம், ஏனெனில் இது நோர்வேயின் வரலாற்றின் ஒரு பகுதியாகும்!

ஒசுலோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வெளியே உள்ள பங்கேற்பாளர்கள், இணையவழியாகப் பங்கேற்கலாம்.

கூட்டத்திற்கான இணைப்பைப் பெற, இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பவும்:  https://forms.gle/gsM5ppAGmYSWo2Ty7
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கான இறுதித் திகதி: 22.06.2026
உங்களால் பங்கேற்க முடியுமா அல்லது முடியாதா என்று பதிலளிக்கவும்.

TEAMS சந்திப்பு இணைப்பு:
70வது ஆண்டு நிறைவு பற்றிய நாடு தழுவிய ரீதியில் பொதுக்கூட்டம்
24 யூன் 2026
17:45 – 20:00 (நோர்வே நேரம்)
https://teams.live.com/meet/9390108842006?p=OLAovURftWeaJgynSa

கழகங்கள், சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்று வரும்போது, ​​நிர்வாகம் மட்டுமல்லாது, அனைவரும் உள்வாங்கப்படல் வேண்டும்! இந்த அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளகமாகப் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களை உள்வாங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

70வது ஆண்டு நிறைவு நிகழ்வு அனைவருக்கும் பொதுவானதாகும்! மேலும், அனைத்து நோர்வேயிய-தமிழர்களும் இதை உருவாக்க உதவியுள்ளனர்!

நோர்வே வாழ் அனைத்து தமிழருக்குமான அழைப்பு:

  • தமிழ் கழகங்கள், சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள்
  • தனிநபர்கள் மற்றும் ஆர்வலர்கள்
  • ஏனைய ஆர்வமுள்ளவர்கள்

🗓️ புதன்கிழமை 24.06.2026  
✏️ வருகைப் பதிவேடு: 17:45  
⏰ பொதுக்கூட்டம்: 18:00-20:00  
📍 Grorud auditorium
Grorud bydelshus
Kakkelovnskroken 3,  
0954 Oslo
(அருகிலுள்ள ரயில் நிலையம்:
Rødtvet)  

70-வது ஆண்டு நிறைவு ஒழுங்குகள் பற்றிய செய்திகளை தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துத் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில், இந்தப் பொதுக்கூட்டம் முதன்மையாகத் தமிழ் மொழியில் நடத்தப்படும்.

தொடர்புகளுக்கு:  

ஈஸ்வரன் (70 வது ஆண்டு நிறைவுக் குழு உறுப்பினர்)
+47 998 56 978

காயத்ரி (70 வது ஆண்டு நிறைவு நிகழ்வுக் குழு உறுப்பினர்)
+47 406 11 886


70வது ஆண்டு நிகழ்வுக் குழு மின்னஞ்சல்: arrangement@diasporatamil.no

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் மின்னஞ்சல்: post@diasporatamil.no

இணையதளம்: diasporatamil.no


70வது ஆண்டு நிறைவு பற்றிய மேலதிகத் தகவல்கள்

  • புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களின் படவரி மற்றும் முகநூலை பின்தொடரவும்.
  • நாடு தழுவிய மக்கள் கொண்டாட்டம் – நோர்வேயிய மொழியில்:
  • நாடு தழுவிய மக்கள் கொண்டாட்டம் – தமிழ் மொழியில்:
  • 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளில் நோர்வேயிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகள். இந்தப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது:

தோழமையுடன்,

கு. பகீரதி

70 வது ஆண்டு நிறைவு குழு மற்றும் 70 வது ஆண்டு நிறைவு குழு சார்பில்
DiasporA Tamil Archives
புலம்பெயர் சுவடிகள் காப்பகங்கள்
www.diasporatamil.no

Støtt vårt arbeid
VIPPS: 803114
Bank konto: 1506.84.96710

Org.nr.: 930095877


வெளியீ│launch: 13.06.2026
புதுப்பிப்பு│Update: 23.06.2026

Leave a comment