பொன்னியின் செல்வன் – 1

பொன்னியின் செல்வன் என்பது இப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பு. பொன்னியின் செல்வன் – 1 (2022) தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 30 செப்டம்பர் 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. Kollywood Entertainment (கோலிவுட் என்டர்டெயின்மென்ட்)  ஸ்காண்டிநேவிய நாடுகள் ஆகிய நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புனைகதை திரைப்படத்தை விநியோகித்து திரையிட்டது. இதுவரை அறியப்பட்டபடி, பொன்னியின் செல்வன் ஐஸ்லாந்திய சினிமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும். ஒசுலோ, பேர்கன், ட்ரொன்ட்கய்ம், கிறிஸ்டியான்சான்ட் போன்ற இடங்கள் உட்பட நோர்வே முழுவதிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

பொன்னியின் செல்வன் -1 எனும் திரைப்படம் வரலாற்று நாவலாசிரியர் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி தமிழ் மொழியில் எழுதிய வரலாற்று புனைகதை நாவலை அடிப்படையாகக் கொண்டது. இவர் கல்கி (அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி) என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்டவர். அவரது கதை 1950 ஒக்டோபர் 29 முதல் 16 மே 1954 வரை கல்கி வாரத் தமிழ் இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1955 இல் 3 பகுதிகளைக் கொண்ட நாவலாக இக்கதை தொகுக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த நாவல் 5 பாகங்களாக வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் போது நடந்த அதிகாரப் போட்டியைப் பற்றியது. முக்கிய கதாபாத்திரங்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இடையிலான சதிகளும் அதிகாரத்திற்கான போராட்டமும் இந்த கதையின் அடிப்படையை உருவாக்குகின்றன.

“பொன்னி நதி” (2022).

பொன்னியின் செல்வன் என்றால் பொன்னி நதியின் மகன் என்று பொருள். இப்போது பொன்னி நதி காவேரி என அழைக்கப்படுகிறது. இப்பெயர் அருள்மொழி வர்மனுக்கு வழங்கப்பட்டது. இவரே பின்னர் இராஜ இராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். இவர் தென்னிந்தியா, இந்தியாவின் பிற பகுதிகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஈழத்தை (இன்று இலங்கை என்று அழைக்கப்படுகிறது) ஆண்ட மன்னர் ஆவார். தமிழ் வரலாற்றில் இவர் மிகவும் வல்லமைமிக்க தமிழ் மன்னராக திகழ்ந்தார். சோழர் கால கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்தியின் அடிப்படையில், இலங்கையைக் கைப்பற்றிய வெற்றிச் செய்தியை «ஈழ மணடலம்” என பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்மொழி வர்மன் சுந்தர சோழனின் மகனும், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் தம்பியும் ஆவார்.

…சோழ சிலைதான் இவளோ
செம்பா
சோல கருதாய் சிரிச்சா
செம்பா
ஈழ மின்னல் உன்னால
செம்பா
நானும் ரசிச்சிட ஆகாதா
அம்பா
கூடாதே…

பொன்னி நதி பாடல் வரிகளில் ஒரு பகுதி. பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்னன்.

காப்பகச் சுவடிகளின் (archives) கண்ணோட்டத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்தால், சோழ மன்னரிடம் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஒரு அரச கட்டளை இக்கதையைத் தூண்டுகிறது. சோழ இராச்சியத்தைச் சூழும் ஆபத்தை சுந்தரச் சோழனிடம் எச்சரிக்க அந்தச் செய்தி அனுப்படுகின்றது. சோழ வம்சத்தின் பட்டத்து இளவரசரான ஆதித்தக் கரிகாலன் தனது விசுவாசமான நண்பரான வானவராயன் வந்தியத்தேவனிடம் செய்தியைக் கொடுத்தனுப்புகிறார். அவர் பனை ஓலை ஆவணத்தைக் கொண்டு செல்லும் ஒரு விசுவாசமான அரச தூதராக மாறுகிறார். அதனூடாக அவர் பொன்னியின் செல்வன் கதையை நகர்த்திச் செல்லும் ஒரு கதாப்பாத்திரமாகவும் இருக்கிறார்.

புத்திசாலித்தனமான அரசியல் அறிவும், சோழ வம்சத்து மக்களுக்கு தீவிர விசுவாசமும் கொண்ட வலிமையான சோழப் பெண்ணான குந்தவையால் பிற அரச செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவர் ஒரு சதியை உணர்ந்தபோது சோழ இராச்சியத்தில் தனது சகோதரர்களைப் பாதுகாக்கவும் அரசியல் அமைதியை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்.

“சோழா சோழா” (2022)

மறுபுறம், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியான நந்தினியும் பழிவாங்கும் விதமாக ஒரு பொறியை உருவாக்க வேறு செய்திகளையும் அனுப்புகிறார். தனது அரச பதவி, அரசியல் அறிவு மற்றும் சூழ்ச்சித் திறமை ஆகியவற்றால், சோழர் ஆட்சியில் இருக்கும் ஆளுமைகளை வீழ்த்த ஒரு நம்பகத்தன்மையான (authentic) ஓலை ஆவணத்தை உருவாக்கத் தூண்டுகிறார்.

…மண்ணான மண் மேல் பித்தானேன்
ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்
ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்…

சோழா சோழா பாடல் வரிகளில் ஒரு பகுதி. பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்னன்.

நம்பகத்தன்மையான ஆவணங்கள் போலியற்றதாக இருக்கலாம், ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்பகத்தன்மையான ஆவணங்கள் துரதிர்ஷ்டவசமாக தீவிர விசுவாசமுள்ள மக்களைக் கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு ஆளாக்கிவிடலாம். இதனால் பெரும் இழப்பு, பின்னடைவுகள் மற்றும் பேரரசின் வீழ்ச்சி கூட ஏற்படலாம்.

பொன்னியின் செல்வன் (2022) திரைப்படம் நம்பகத்தன்மையான ஒலி ஒளி ஊடக வடிவிலான ஒரு ஆவணத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். முன்னர் குறிப்பிட்டபடி, சோழர் காலத்து கல்வெட்டுகள் இலங்கை அல்லது ஸ்ரீ லங்காவை “Īḻam» (ஈழம்), “īḻa nāṭu» (ஈழ நாடு) மற்றும் “īḻa maṇṭalam» (ஈழ மண்டலம்) என ஆவணப்படுத்தியுள்ளது. வரலாற்று நாவலாசிரியர் கல்கி தனது நாவல் முழுவதும் “īḻa nāṭu» (ஈழ நாடு) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், இத்திரைப்படத்தில் உள்ள தமிழ் உரை வசனங்கள் ஸ்ரீ லங்காவை இலங்கை என்று குறிப்பிடுகின்றது. இது தீவின் நவீன பெயராகும். மேலும் ஆங்கில வசனம் லங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழி பெயர்ப்பு இந்த நாட்டை சிங்கள நாடு என்று குறிப்பிடுகிறது.

…பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா…

சோழா சோழா பாடல் வரிகளில் ஒரு பகுதி. பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்னன்.

விவரிப்பு

தலைப்பு│Title: பொன்னியின் செல்வன் – 1
ஆங்கில தலைப்பு│ English title: Ponniyin Selvan – 1
இயக்குனர்│Director: Mani Ratnam
நடிகர்கள்│Cast: Vikram, Jayam Ravi, Karthi, Aishwarya Rai Bachchan, Trisha Krishnan, Aishwarya Lekshmi, Sarath Kumar, Vikram Prabhu, Sobhita Dhulipala, Jayaram, Prabhu, Parthiban Radhakrishnan, and Prakash Raj, Ashwin Kakumanu, Lal, Aswin Rao, Nizhalgal Ravi, Nassar, Mohan Raman, Rahman, Master Raghavan, Riyaz Khan, Sara Arjun, Jayachitra, Vijey Yesudas, Arjun Chidambaram, Babu Antony, Amzath Khan, Balaji Sakthivel, Makrand Deshpande, Kishore Kumar G, Vinay
கதை சொல்பவர்│Narrator: Kamal Haasan
ஒளிப்பதிவு│Cinematography: Ravi Varman
படத்தொகுப்பு│Editing: A. Sreekar Prasad
இசை│Music: A. R. Rahman
கலை இயக்கம் │Art Direction: Thotta Tharani
தயாரிப்பு│Production: Lyca Production
இடம்│Location: Tamil Nadu, India
ஆண்டு│Year: 2022
மொழி│Language: Tamil
ஏனைய மொழி│Other language: Hindi, Telugu, Kannada, and Malayalam
இலக்கியநடை│Genre: History, Fiction
பொருட்துறை│Subject: Ponniyin Selvan, Chola Dynasty, Chola Empire, Kalki, historical fiction
விளக்கம்│Description:
The feature film is based on a historical fiction novel under the same name, by Kalki Krishnamurthy. The story is set in 10th century and is about the power struggle during the Chozha rule.
வடிவமை│Format:
வகை│Type: Feature film
இனங்காட்டி│Identifier:
அணுக்கம்│Access:


அலைகடல் (2022)

…அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ…

அலைகடல் பாடல் வரிகளில் ஒரு பகுதி. பாடல் ஆசிரியர் சிவா ஆனந்த்.

மேற்கோள்

Selvaseelan, K. (2022) “Ponniyin Selvan 1: A mighty triumph”. Tamil Guardian. From https://www.tamilguardian.com/content/ponniyin-selvan-1-mighty-triumph

Tamil Guardian. (2022) “‘Eela not Sinhala’ – Ponniyin Selvan mired in controversy“. From https://www.tamilguardian.com/content/eela-not-sinhala-ponniyin-selvan-mired-controversy

சொற்பிறப்பியல்:
TamilNet. (2010). “Eezham / E’lu / He’la”. From
https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30919

புதுப்பிப்பு│Update: 05.10.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: