அப்பம்

அப்பம் பலருக்கும் பொருந்தக்கூடிய உணவாகும். இது சைவம், அசைவம் அல்லது மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் பால் மற்றும் முட்டை போன்ற பொருட்களை உணவில் சேர்க்காத (vegan) உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கும் ஏற்றது. அப்பம் ஈழம், தமிழகம் மற்றும் நோர்வே போன்ற தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் குடும்பங்கள் மற்றும் சமூகம் பரிமாறும் ஒரு பாரம்பரிய தமிழ் உணவாகும். அவர்கள் தங்கள் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், தமிழர் விழாக்களிலும் இதனை தயாரித்து பரிமாறி வருகின்றனர்.

அப்பம் என்பது புளித்த அரிசி மாவில் செய்யப்படும் ஒருவகை உணவு அகும். இது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பிரதேசங்களிலும் பரவலாக தயாரிக்கப்பட்டு உண்ணப்படும் உணவு ஆகும். ஆங்கிலத்தில் “hopper” என்று அழைக்கப்படும் அப்பம் காலை மற்றும் இரவு உணவிற்கு உண்ணப்படுகிறது. அப்பம் மாக் கலவை மற்றும் அவை எவ்வாறு பரிமாறப்படுகின்றன என்பது ஒரு புவியியல் வேறுபாட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பால் அப்பம். கேரளாவில் வெள்ளை அப்பத்தின் மீது ஊற்றுவதற்கு தனியாக தேங்காய்ப் பால் கொடுக்கப்படுகிறது. ஆனால், இலங்கையில் ​​ஒரு அப்பம் அப்பச் சட்டியில் இருக்கும் போதே பாலை அப்பத்தின் மேல் ஊற்றி அவித்தபின் பரிமாறப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கடைகளில் தயாரிக்கப்பட்ட அப்பம் மா பரவலாக கிடைக்கிறது. அப்பம் பொதுவாக ஒரு எரிவாயு அடுப்பு (gas cooker) அல்லது விறகடுப்பில் ஒரு அப்பச் சட்டியை வைத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் பல புலம்பெயர் நாடுகளில், எரிவாயு அடுப்பு பொதுவான பாவனைக்கு இல்லை. உதாரணமாக, hotplate அடுப்பு அல்லது induction அடுப்பு நோர்வேயில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு தமிழ் குடும்பங்களில் செய்யப்படும் இரண்டு வகை அப்பம் மாக் கலவைகள் உள்ளன.

அப்பம் மாக் கலவை 1

  • 1 கிண்ணம் (250ml) பச்சை அரிசி
    6 மணி நேரம் ஊற வைக்கவும்
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
    6 மணி நேரம் ஊற வைக்கவும்
  • ¾ கிண்ணம் தேங்காய் பூ
  • ¼ கிண்ணம் அவித்த சோறு
    (விரும்பினால் மேலும் அவித்த சோறு சேர்க்கலாம்)
  • ½ தேக்கரண்டி நுரைமம் (yeast)
  • 1 மேசைக்கரண்டி சீனி
  • உப்பு

அரிசி, வெந்தயம், தேங்காய்ப் பூ மற்றும் அவித்த சோற்றை ஒரு மிக்ஸியில் போடவும். சிறிதளவு உடல் வெப்பநிலையில் உள்ள வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். வெதுவெதுப்பான நீர் மாவைப் பொங்க வைக்க உதவும். வெந்தயம் மாவுக்கு ஒரு நறுமணத்தையும் பழுப்பு நிறத்தையும் கொடுக்கும். கலவையை நீர் நிலைத்தன்மையில் தயாரிக்கவும். சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு அரிசி வகையைப் பொறுத்து மாறுபடும்.

ஒரு பாத்திரத்தில் நுரைமம் (yeast), சீனி மற்றும் சிறிதளவு உப்பு போடவும். மிக்ஸியில் உள்ள கலவையை இப்பாத்திரத்தில் ஊற்றவும். அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். மாவை 3-4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வெவ்வேறு நாடுகளின் தட்பவெப்பநிலையின் அடிப்படையில் புளிக்க வைக்கும் நேரம் அதிகமாகலாம்.

அப்பம் மாக் கலவை 2

  • 1 கிண்ணம் (250ml) பச்சை அரிசி
    2 மணி நேரம் ஊற வைக்கவும்
  • ½ கிண்ணம் அவித்த கோதுமை
  • 2 துண்டு வெள்ளை வெதுப்பி அல்லது வாட்டிய வெதுப்பி
  • போதுமான அளவு இளநீரில் ஊற வைக்கவும்
  • தேங்காய்ப்பால்
  • ½ தேக்கரண்டி அப்பச்சோடா உப்பு

அரிசியை ஒரு மிக்ஸியில் போடவும். அரிசியை மூடும் அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். ஊறவைத்த வெதுப்பி மற்றும் இளநீரை ஒன்றாக கலக்கவும். இந்தக் கலவையை அரிசிக் கலவையுடன் சேர்க்கவும். ஈழத்தில் உள்ள கிராமங்களில், வெதுப்பிக்கு பதிலாக கள்ளை நுரைமமாகப் (yeast) பயன்படுத்தப்படுகிறது.
இதில் ½ கிண்ணம் அவித்த கோதுமை மாவை சேர்க்கவும். பின்னர் ½ கிண்ணம் உலர் கோதுமை மாவை சேர்க்கவும்.

மாவை 12 மணி நேரம் புளிக்க வைக்கவும். வெவ்வேறு நாடுகளின் தட்பவெப்பநிலையின் அடிப்படையில் புளிக்க வைக்கும் நேரம் அதிகமாகலாம்.

புளித்த பின்னர், தேங்காய்ப் பாலின் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். இது மெல்லிய நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும். ½ தேக்கரண்டி, அப்பச்சோடா மற்றும் உப்பு சேர்க்கவும். கலவையை நீர் நிலைத்தன்மையில் தயாரிக்கவும்.

1 கிண்ணம் தேங்காய்ப் பாலின் முதல் பாலை எடுத்துக் கொள்ளவும். இது தடிமனான நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும். இனிப்புக்கு தேவையான அளவு சீனி சேர்க்கவும். இது பால் அப்பம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது (அப்பம் செயல்முறையைப் பார்க்கவும்).

அப்பம் செயல்முறை

ஒரு எரிவாயு அடுப்பு அல்லது விறகடுப்பில் அப்பச்சட்டியை வைத்து அப்பத்தைச் சுடவும். குறைந்த மிதமான தீயில் அடுப்பை வைத்திருக்கவும்.
அடுப்பில் இருந்து அப்பச் சட்டியை எடுக்கவும். ஒரு கரண்டி அப்ப மாவை அப்பச் சட்டியில் ஊற்றவும். பின்னர் அப்பச் சட்டியை சுழற்றி அப்பச் சட்டி மீது மாவை பரப்பவும். குறைந்த மிதமான வெப்பம் அப்பச் சட்டில் உள்ள மாச் சுழற்சியை எளிதாக்கும். இல்லையெனில், மா விரைவாக சட்டியில் ஒட்டிக்கொள்ளும். அப்பத்தில் சீனி போட்டுக் கலந்த தேங்காய்ப்பாலில் 3 மேசைக் கரண்டி ஊற்றி மூடி அவிக்கவும். அப்பத்தை 2 நிமிடம் அவிக்கவும். அப்பத்தின் ஓரங்கள் மொறுமொறுப்பானதும் அப்பம் தயாராகிவிடும். இதுவே பால் அப்பம் ஆகும். மாற்றாக, அப்பத்தில் 3 மேசைக் கரண்டி கெட்டியான இனிப்பு சேர்க்காத தேங்காய்ப் பாலை ஊற்றி மூடி வைக்கவும். அப்பத்தை 2 நிமிடம் வேக வைக்கவும். இந்த வகையை சக்கரைக் பொடி தூவி பரிமாறலாம்.

பொதுவாக தயாரிக்கப்படும் அப்பம் வகைகள்:

  • வெள்ளை அப்பம்
  • பால் அப்பம்
  • முட்டை அப்பம்

ஆக்கப்பூர்வமான அப்பம் வகைகள்

Delicious Food P&D ஆகிய நிறுவனத்தால் நோர்வேயில் தயாரிக்கப்படும் பிற ஆக்கப்பூர்வமான அப்பம் வகைகள் இங்கே உள்ளன. அவை பாரம்பரிய அப்பம் மற்றும் ஆக்கப்பூர்வமான இணைவு (fusion) வகைகளை காட்சிப்படுத்துகின்றன.

Delicious Food P&D என்பது ஒசுலோவை தளமாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனமாகும். இது டிசம்பர் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சமயல் மற்றும் நேரடி உணவு நிலையத்தை வழங்குகிறது. இது சமூக ஊடகங்களில் உணவு பற்றிய இடுகைகளையும் செய்கிறது (Food blogging).

Hotplate இல் இனிப்பு அப்பம்

இங்கே hotplate அடுப்பில் தயாரிக்கப்பட்ட இனிப்பான அப்பம் உள்ளது. இது hotplate அடுப்பில் சாதாரன பொரியல் சட்டியில் தயாரிக்கப்பட்ட பால் அப்பத்தில் சக்கரை தூவி உள்ளது.


Read the article in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 09th September 2022.


பொறுப்புத் துறப்பு │DISCLAIMER

தமிழ்ச் சமூகத்தில் சுவடிகளின் (ஆவணம்) பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட சுவடிகள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட சுவடிகள் உள்ளன. இதனால் எண்ணிமப் பெயர்ப்பட்டியல் வலைப்பதிவில் (catablog) வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய சுவடிகளைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளன.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை தொகுப்பது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

Due to the lack of or fragmented archives or limited access to archives in Tamil society, it has been challenging to access available sources that can support the digital catablog.
In this situation, compiling the history of the Tamil diaspora will be a dynamic process that may change its shape and be updated over time. Thus, we welcome the public to provide feedback with verifiable sources in the case of need for correction in the factual information on this website.

புதுப்பிப்பு│Update: 11.09.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: