மேதகு என்பது கெளரவமான அல்லது மேன்மையான என்று பொருள்படும். மேதகு எனும் முழுநீள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காட்சிப்படுத்துகின்றது. இத்திரைப்படம் எவ்வாறு பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களின் தோல்வியுற்ற அகிம்சை மற்றும் அரசியல் போராட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டம் திணிக்கப்பட்டது என்ற வரலாற்றைக் கூறுகின்றது. இது ஒரு அரசியல் உணர்ச்சியார்வத் திரைப்படம் (political thriller). இது மேதகுவின் ஆரம்ப காலக் கதையைச் சொல்கிறது. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறப்பு (1954) முதல் 1975 வரையிலான காலக் கதையை உள்ளடக்குகின்றது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1972ம் ஆண்டு புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers – TNT) என்ற போராட்டக் குழுவை உருவாக்கினார். ஒரு கெரில்லா அமைப்பை (guerrilla organization) உருவாக்க விரும்பிய அவர் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam – LTTE) எனும் அமைப்பை 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் உருவாக்கினார். இது தமிழீழத்தில் தமிழர்களுக்கான ஒரு அரசியல்-இராணுவ நிலைத்தன்மையாக (politico-military sustainablity) உருவெடுத்தது. அதோடு அது 1990 களில் இருந்து மே 2009 வரை தமிழீழ (வட-கிழக்கு இலங்கை) நடைமுறை அரசை (de-facto state Tamil Eelam) ஆட்சி செய்தது. உலகத் தமிழர்களால் தமிழீழத் தேசியத் தலைவர் அல்லது தமிழ்த் தேசியத் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது தலைமை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான நியாயமான போராட்டத்தை முன்னெடுத்தது.
ஈழம்
ஈழம் என்பது முழுத் தீவின் பூர்வீக/ தொன்மையான பெயராகும். இது இன்று இலங்கை/ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படுகிறது.
தமிழீழம்
1976ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் அன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி (Tamil United Liberation Front) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தமிழீழம் என்பதை கோரியது. இதுவே அறியப்பட்டதின் அடிப்படையில் தமிழீழம் என்ற சொல் அரசியல் எழுத்து வடிவில் எழுதப்பட்ட முதல் சான்றாகும். தமிழீழம் எனும் சொல் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தைக் குறிக்கிறது. 1970களின் இறுதியில் தோன்றிய பல்வேறு தமிழ் போராட்டக் குழுக்கள் தமிழீழம் என்பதை தமது இலக்காகினர்.
“ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.”I know that a life has high value, but our rights, our independence, our honour have a higher value than life.
வேலுப்பிள்ளை பிரபாகரன்
(மொழிபெயர்ப்பு: PETER SCHALK மற்றும் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை)
மேதகு எனும் வாழ்க்கை வரலாறு உலகளாவிய தமிழர்களின் திரள் நிதி (crowdsourcing) கொண்டு தமிமீழம் திரைக்களம் தயாரித்தது. திரைப்படத்தை வெளியிடுவதற்கான சட்ட/அரசியல் சிக்கல்கள் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், 2021ம் ஆண்டு யூலை மாதம் 25ம் நாள் அன்று OTT இயங்குதளத்தில் BS Value இல் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. COVID-19 கட்டுப்பாடுகளின் போது சாத்தியமான இடங்களில் திரையரங்கு வெளியீடுகளும் காட்சிகளும் உலகம் முழுவதும் திரையிடப்பட்டன. நோர்வேயில் திரையரங்கு வெளியீடு மற்றும் காட்சிகள் யூலை மாதம் 2021ம் ஆண்டு நடைபெற்றது.
இந்தத் திரைப்படம் செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் நூல்கள் போன்ற வரலாற்றுத் தரவுகள் போன்ற சுவடிகள் காப்பகப் பொருட்களையும், அத்துடன் அக்கால விடுதலைப் போராட்டத்தில் வாழ்ந்த, பயணித்தவர்களுடனான உரையாடல்கள் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் கதை சொல்லும் முறை மூலம் கூத்துக் கலைஞர்கள் மேதாகுவின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) வாழ்க்கையை விவரிக்கின்றனர். இன்று (06. ஓகஸ்ட் 2022) இந்திய நேரப்படி மாலை 06.00 மணிக்கு மெதகு (2021) மெதகு திரைக்களம் வலையொளியில் (YouTube Channel) மீள் வெளியீடு செய்யப்பட்டது.
ஏப்ரல் 2022 இல் நிகழ்ந்த 13வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் “சிறந்த நடிகர் ஆண் – புலம்பெயர் தமிழர்” எனும் திரைப்பட விருது மெதகு (2021) திரைப்படம் வென்றது.
19. ஓகஸ்ட் 2022 அன்று, மேதகு பாகம் II உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் OTT இல் வெளியாகிறது. இப்போது மேதகு – II வெளிவருவதால், மேதகு எனும் திரைப்படம் மேதகு – I என அடையாளப்படுத்தப்படுகிறது.
முழு திரைப்படம் மற்றும் பிற காணிளிகளைப் பார்க்க மேதகு திரைக்களம் வலையொளித் தளத்தைப் பார்வையிடவும்.
தலைப்பு│Title: மேதகு – 1
ஆங்கில தலைப்பு│ English title: Methagu – 1
இயக்குனர்│Director: T. Kittu
இணை இயக்குனர்│Associate Director: Prabakaran
நடிகர்கள்│Cast: Kuttimani, Lizzie Antony, Eshwar Basha, Chandrasekar, Raja, Vinoth Sagar
தெருக்கூத்துக் கலைஞர்கள் │Koothu artists: Rajavel, Perumal
ஒளிப்பதிவு│Cinematography: Riaz
படத்தொகுப்பு│Editing: S. M. Ilangkovan
இசை│Music: A. Piraveen Kumar
தயாரிப்பு│Production: Tamil Eelam Thiraikkalam
இடம்│Location: Tamil Nadu, India
ஆண்டு│Year: 2021
மொழி│Language: Tamil
இலக்கியநடை│Genre: Biography, History
பொருட்துறை│Subject: Velupillai Prabakaran, Tamil Eelam, Tamil New Tigers, Liberation Tigers of Tamil Eelam, Tamils, Eelam Tamils, Liberation, Freedom struggle
விளக்கம்│Description:
The movie titled “Methagu” (His Excellency in English) is a biopic that portrays the early years of Mr Prabhakaran who gave the courageous leadership for the upsurge of the people of the Tamil nation who fought for their lost rights on the island, Sri Lanka. In this movie, the childhood and boyhood of Mr Prabhakaran are portrayed and depict the historical events that had an immense impact on him from the time, he was in infancy. This film pulls us all back into the life of the period from 1954 to 1975 in Ceylon (Sri Lanka). Conceptually speaking, this movie is about the history of the birth of a leader who gave birth to the upright history for his people.
The movie is based on the available source of evidence.
வடிவமை│Format: Youtube
வகை│Type: Feature biopic
இனங்காட்டி│Identifier: https://youtu.be/vBANM5anQts
அணுக்கம்│Access: 06. August 2022
பின்குறிப்பு மற்றும் மேற்கோள்கள்
பேராசிரியர் Peter Schalk (பீட்டர் ஷால்க்) அவர்கள் ஆல்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களுடன் இணைந்து ஒரு மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைவரின் சிந்தனைகள் எனும் தமிழ் மொழியில் வெளியான மூலப் பதிப்பை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். இப்பணியில் யேர்மன், ஆங்கிலம், ஸ்வீடிஷ் மற்றும் சிங்கள மொழிகளிலான மொழிபெயர்ப்புகளும் உள்ளடங்கும்.
Schalk, P. (2007a). talaivarin cintanaikai. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT04.pdf
Schalk, P. (2007b). Tamil Source in English Translation: Reflections of the Leader. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT06.pdf
Schalk, P. (2007c). Uppsala University Publications. Retrieved from http://uu.diva-portal.org/smash/record.jsf?amp;dswid=contents&pid=diva2%3A173420&dswid=5816
புதுப்பிப்பு│Update: