
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கடத்தல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு இணைய வழி வள மையம் மற்றும் சமூக காப்பகமாகச் செயல்படுகின்றோம். மேலும் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் ஆகிய பணிகளையும் செய்கின்றோம்.
இந்த வருடம் 2 வருட பணியை கடந்துவிட்டோம். இதையொட்டி “ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” (Tamil-Norwegian women in a male-dominated world) என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டக் கண்காட்சியை ஏற்பாடு செய்து “நமது நாளை” கொண்டாட விரும்புகிறோம். இதனூடாக எங்களிடம் உள்ள ஆளுமைகிக்க பெண்களை சமூகத்தில் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம் – இதில் நீங்களும் ஒரு பங்கு வகிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
DTA இன் 2 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட எங்களுடன் இணையுங்கள்.
இடம்: Deichman Stovner, Oslo, Norway
திறப்பு: சனிக்கிழமை 23.04.2022
நேரம்: 15:00-16:30
வெள்ளிக்கிழமை 29.04.2022 வரை பார்வையிடலாம்
அன்புடன்,
வித்யா மற்றும் பூரணி
கண்காட்சிக்கான திட்ட மேலாளர்கள்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்

புதுப்பிப்பு│Update: 25.04.2022