கண்காட்சி: ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DTA) ஆகிய நாம் தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கடத்தல் மற்றும் பரப்புதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு இணைய வழி வள மையம் மற்றும் சமூக காப்பகமாகச் செயல்படுகின்றோம். மேலும் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றை ஆவணப்படுத்துதல் மற்றும் பேணிப்பாதுகாத்தல் ஆகிய பணிகளையும் செய்கின்றோம்.

இந்த வருடம் 2 வருட பணியை கடந்துவிட்டோம். இதையொட்டி “ஆண்கள் மேலோங்கிய உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” (Tamil-Norwegian women in a male-dominated world) என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டக் கண்காட்சியை ஏற்பாடு செய்து “நமது நாளை” கொண்டாட விரும்புகிறோம். இதனூடாக எங்களிடம் உள்ள ஆளுமைகிக்க பெண்களை சமூகத்தில் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம் – இதில் நீங்களும் ஒரு பங்கு வகிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

DTA இன் 2 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட எங்களுடன் இணையுங்கள்.

இடம்: Deichman Stovner, Oslo, Norway
திறப்பு: சனிக்கிழமை 23.04.2022
நேரம்: 15:00-16:30
வெள்ளிக்கிழமை 29.04.2022 வரை பார்வையிடலாம்

அன்புடன்,
வித்யா மற்றும் பூரணி
கண்காட்சிக்கான திட்ட மேலாளர்கள்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்

Deichman Stovner

புதுப்பிப்பு│Update: 25.04.2022

Leave a comment