ஆக்கம்: மதுசியா பிரபாகரன் மற்றும் சாம்பவி வேதநாதன்
Colvhivacaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த 12 இனங்களில் கார்த்திகைப் பூ / காந்தள் (Gloriosa lily) ஒன்றாகும். அது ஆஸ்திரேலியாவைத் தவிர தென்னாப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றன. இந்த மலர் “the flame lily” என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Liliacea Glory lily அல்லது Gloriosa superba ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளில் இந்த தாவரத்தின் பல்வேறு தயாரிப்புகள் அவர்களில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
தோற்றம்
கார்த்திகைப் பூ / காந்தள் தனது நிறங்களை மாற்றும். எனவே இது இரு வேறு தமிழ் பெயர்களால் அழைப்படுகிறது: வெண்காந்தள் (வெள்ளை) மற்றும் செங்காந்தள் (சிவப்பு). இந்தப் பூவில் இதழ் நுனி உள்நோக்கி வளைந்து இருக்கும். அதோடு அதன் விளிம்பு அலை அலையாக இருக்கும். முழு மலர்ச்சிக்குப் பிறகு, இப்பூ ஏழு நாட்களுக்கு வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறம் ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருந்து, பின்னர் வெள்ளை கலந்த மஞ்சள் தொடக்கம் மஞ்சளாக மாறும். பின்னர் சிவப்பு கலந்த மஞ்சள் தொடக்கம் கருஞ்சிவப்பு நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் மாறும். இந்த மலர் தனது தனித்துவமான நிறத்தால் கவனத்தை ஈர்க்கும். இதன் கிழங்கு பிளக்கும் போது, அதில் தளிர்கள் இருந்தால் அது ஆண் காந்தள் ஆகும். தளிர்கள் இல்லாவிடில் பெண் காந்தள் ஆகும்.
தமிமீழம்
கார்த்திகைப் பூ / காந்தள் தமிமீழத்தின் தேசிய மலர் ஆகும்.
கார்த்திகைப் பூ / காந்தள் தமிழீழயத் தேசியக் கொடியின் நிறங்களைக் கொண்டுள்ளதால் இந்த மலர் தமிமீழத்தின் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நாம் நினைவுகூரும் மாதமான கார்த்திகை மாதத்தில் இந்த மலர் எமது தாயகத்தில் மலரும். தமிழீழத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களை போற்றும் வகையில் கார்த்திகைப் பூ / காந்தள் பயன்படுத்தப்படுகிறது.
தமிழீழத்தின் நிர்வாக அதிகாரிகள் இந்த மலரை அனைத்து தேசிய நிகழ்வுகளிலும் பயன்படுத்த தமிழீழ மக்களை ஊக்குவித்தார்கள். தமிழீழத்தில் உள்ள தனியார் வீடுகள், பொது இடங்கள், பணியிடங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல இடங்களில் இந்தப் பூவை வளர்க்க அவர்கள் ஊக்குவித்தனர்.
ஏனைய குறியீடுகள்
கார்த்திகைப் பூ / காந்தள் ஜிம்பாப்வேயின் (Zimbabwe) தேசிய மலர் ஆகும். 1947ம் ஆண்டு தென் ரோடீசியாவின் (Southern Rhodesia -பின்னர் ஜிம்பாப்வே) அரசி இரண்டாம் எலிசபெத் நாட்டிற்கு வருகை தந்த போது கார்த்திகைப் பூ / காந்தள் போன்ற வடிவிலான வைர brooch வழங்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் மாநில மலரும் ஆகும்.
மூலங்கள்:
TYO Norway Instagram
Tamilnet
Wikipedia
சஞ்சிகை: “எரிமலை”. டிசம்பர் 2005. பிரான்சு: 36
இந்தக் கட்டுரை Lokalhistoriewiki.no இல் உள்ள “தமிழர் வரலாறு மற்றும் பண்பாடு” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
English │Norsk
புதுப்பிப்பு│Update: 14.11.2021