ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார், பிரணயா செல்வா, தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன்
1945ம் ஆண்டு முதல், ஐநா மற்றும் அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐநா ஒப்பந்தத்தை அடையாளப்படுத்தி வருகின்றனர்.இரண்டாம் உலகப் போரின் முடிவில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் (Joseph Stalin) பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) ஆகியோர் ஒரு புதிய உலகளாவிய அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்தனர். ஐநா அடைந்த இந்த அடைவை ஐநா நாள் குறிக்கிறது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம் (The Convention on the Rights of the Child) சிறுவர்களுக்கு சிறப்பான நிலையை வழங்கும் முதல் சர்வதேச மனித உரிமை ஒப்பந்தம் ஆகும். இது சிறுவர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. 18 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர்களும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ளடங்குவார்கள் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. 2003ம் ஆண்டு, சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம் நோர்வே சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தின் உதாரணங்களில் ஒன்று, அனைத்து சிறுவர்களும் சுதந்திரமாகவும் சம மதிப்புடனும் பிறக்கின்றனர். நோர்வேயில், அனைத்து சிறுவர்களும் சம உரிமை பெற்று சுதந்திரமாக பிறக்கின்றனர். பெற்றோருக்கு குறைந்த வருமானம் இருந்தால் அவர்களின் வதிவிட மாநிலத்திலிருந்து உதவி பெறுவார்கள். இலங்கையுடன் இதை ஒப்பிட்டால் ஏழை மாவட்டங்களில் பிறந்த சிறுவர்களை விட பணக்கார பெற்றோர்களிற்கு பிறக்கும் சிறுவர்களுக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கும். இது நோர்வேயில் இல்லாத மிகப்பெரிய வேறுபாடுகளை உருவாக்குகிறது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், அனைத்து சிறுவர்களுக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் உரிமை உண்டு. நோர்வேயில், அனைத்து சிறுவர்களுக்கும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களுக்கு தனியார் அல்லது பொதுக் கல்வி வேண்டுமா என்பதை பெற்றோர்கள் முடிவு செய்யலாம். இது வரி செலுத்துவதன் மூலம் மாநிலங்களால் சாத்தியப்படுத்தக்கூடியவாறு உள்ளது. மறுபுறம், இலங்கையில், அனைவரும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாது. சில பெண்களை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் பலர் தமது வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெறுவதில்லை.
இறுதியாக, ஐநா தினம் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாள் என்று நாம் கருதுகின்றோம். அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்ய ஐ.நா பணி புரிந்துள்ளது. இந்த நாள் இரண்டாம் உலகப் போரின் துன்பத்தின் முடிவை அடையாளப்படுத்தவும், பூமியில் அமைதியை உறுதிப்படுத்தவும் நமக்குத் தேவையாக உள்ளது.
புதுப்பிப்பு│Update: