தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பாகம் 3: தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாத்தல்

ஒரு மாவீரனின் கடிதம்

படம்: Wikipedia. கார்த்திகைப் பூ, தமிழீழத் தேசியப் பூ.

«தமிழீழ விடுதலைப் போராட்டம்». 1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலான காலப்பகுதியை ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றுக் காலமாகக் கணிக்கலாம். இந்தக் காலப்பகுதியில், ஈழத் தமிழர்கள் சம உரிமை, சம வாய்ப்பு, சுய நிர்ணய உரிமை, பேச்சுச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், தமது தாயகம், மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் இறையாண்மையை பேணிப் பாதுகாக்கும் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இந்த விடுதலைப் போராட்டம் அகிம்சை வழிப் போராட்டம், அரசியல் வழிப் போராட்டம், ஆயுத வழிப் போராட்டம் மற்றும் தமிழ் இனவழிப்பிற்கு எதிரான போராட்டம் என்று பல கட்டப் போராட்டங்களாக இன்று வரைத் தொடர்கின்றது. ஒவ்வொரு கட்டப் போராட்டத்திலும், தமிழீழத்தை இலக்காகக் கொண்ட வெவ்வேறு அரசியல் அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் போராடி வந்துள்ளனர். இருப்பினும், “ஈழத் தமிழ் தேசியத்தை மையப்படுத்திய கடந்த நூற்றாண்டின் இரண்டு முக்கிய அமைப்புகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி (Federal Party) மற்றும் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆகிய இரண்டு அமைப்புகளும் தமது செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளில் தமிழ் பேசும் பிராந்தியங்களின் பொருளாதார மற்றும் வளங்களின் வளர்ச்சியை முக்கிய கூறுகளாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.” (Tamil Guardian, 2012. தமிழாக்கம்). இதனால் «தமிழீழ விடுதலைப் போராட்டம்» என்ற பதத்தை அறிந்தோ அறியாமலோ இந்த இரண்டு அமைப்புகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு ஒரு பரந்த அளவைக் கொண்டது. அது ஈழம், புலம்பெயர் தமிழர் மற்றும் தமிழ்நாடு ஆகியத் தளங்களைக் கொண்ட ஓர் வரலாறு ஆகும். அது பல அரசியல் மற்றும் விடுதலை அமைப்புகளைக் கொண்ட அகிம்சை, அரசியல், ஆயுத வழி மற்றும் இனவழிப்பு என்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள் (21.11.2020)

தொழில்நுட்ப அழிவு
ஒரு மாவீரனின் கடிதம்
முகநூல் இடுகையின் படம் (22.11.2020).
“மக்கள் முன்னணி பின்லாந்து இளைஞர்அணி” இன் முகநூல் இடுகை (22.11.2020).

«…தமிழீழம் பற்றிய தனது கனவை எம் தலைவர் அவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றான்.

அன்பின் அண்ணா,
எங்கள் உயிர்மீது வெடிகுண்டு ஏந்தி வெடிக்கும் போது, நாங்கள் உங்களை நம்பியே வெடிக்கிறோம். நீங்கள் தமிழீழ தேசம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதில் எங்கள் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள் என்று நம்பியே வெடிக்கின்றோம்.

அன்பின் அண்ணா, எங்கள் மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அவர்கள் துண்பங்களை சுமந்து களைத்துப் போனவர்கள். அவர்களுக்கான சுதந்திரம் என்ன விலை கொடுத்தேனும் பெறப்பட வேண்டும். அதை நீங்கள் பெற்றுக் கொடுப்பீர்கள் என்று முற்றும்முழுதான நம்பிக்கையுடன் வெடிக்கிறேன். அமையப் போகும் தமிழீழம் முற்றும்முழுதாக தன்னிறைவான பொருளாதாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமெனில் அதற்குரிய அடிக்கற்கள் இப்போதே நாட்டப்பட வேண்டும்…

மேலும் அவன் சொல்கிறான்.

…எமது நாட்டில் ஒரு பிச்சைக்காரரும் இருக்கக்கூடாது. அது வயது வந்தவர்களானாலும் சரி, சிறுவர்களானாலும் சரி. அப்படியானவர்களை எமது அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல் தமிழீழத்தில் அனைத்துப் பிரஜைகளும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். அதையும் எமது அரசே கவனம் எடுக்க வேண்டும். அதேபோல் உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக்களும் எம் தேசத்தில் பயிற்றப்பட்டு, அனைத்து விளையாட்டுக்களிலும் எமது வீரர்கள் முன்னிலையானவர்களாக இருக்க வேண்டும்.
ஏழைப் பணக்காரர்கள் என்ற வேறுபாடு, சாதி சமய ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு சமூகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான சீதனக் கொடுமைகள் முற்றும்முழுதாக இல்லாது ஒழிக்க வேண்டும். அதில் எமது அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

என அவனது கடிதம் தொடர்ந்து செல்கிறது. இது அன்புமணி என்ற ஒரு மாவீரனின் கடிதம்தான்.»

தொலைநோக்கு


பின்குறிப்பு

1 https://www.britishlegion.org.uk/get-involved/remembrance/about-remembrance/the-poppy

மேற்கோள்கள்

Tamil Guardian. (2012). Stamp of defiance and aspiration. Retrieved from https://www.tamilguardian.com/content/stamp-defiance-and-aspiration


புதுப்பிப்பு│Update: 28.11.2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: