19. யூலை 2020 அன்று, வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.
நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலான வெளியீடுகளையும் தமிழிலும், பிற மொழிகளிலும் தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்களின் பாரிய பற்றாக்குறை உள்ளது. நாம் நோர்வே-தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை மட்டும் சேகரித்து வழங்கினாலேயே, நோர்வேயியப் பொது நூலகங்களில் உள்ள தமிழ் பிரிவு நிரப்பப்பட்டுவிடும்.
நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) மற்றும் அதன் செயல்முறை பற்றி மேலதிக தகவல்.
புதுப்பிப்பு│Update: