′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 3

21. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்?

பயணத்தின் போது கப்பலில் இருந்த புகைப்படக் கலைஞன் ஓலே ஃப்ரைல் பேக்கர் (Ole Friele Backer). (மூலத்தலைப்பு, திகதி 04.07.1944). புகைப்படக் கலைஞர் அறியப்படவில்லை, NTBs krigsarkiv, RA/PA-1209/U/Uk/0223.

• கல்வி நிறுவன கட்டமைப்புகள் – தமிழ் பள்ளிகள், கலைப்பாட நிறுவனங்கள், பாடநூல் மற்றும் தேர்வு வாரிய நிறுவனங்கள் போன்றவை.
• ஊடக நிறுவன கட்டமைப்புகள் – தொலைக்காட்சி, வானொலி, வலைத்தளம், செய்தித்தாள் போன்றவை.
• அரசியல் நிறுவன கட்டமைப்புகள் – ஒரு அரசியல் கோட்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு
• மனித உரிமைகள் / உதவி நிறுவன கட்டமைப்புகள்
• மத நிறுவன கட்டமைப்புகள்
• சமூகம்சார் நிறுவன கட்டமைப்புகள் – தமது தாயகத்தில் உள்ள ஓர் ஊரின் பெயரில் புலம்பெயர் நாட்டில் இயங்கும் சங்கம் / இணையம் / மன்றம் போன்றவை. அதோடு பொதுவான தமிழ் சங்கங்களும் உள்ளடங்கும்.
• (வேறு ஏதேனும் வகையில் தமிழ் நிறுவனக் கட்டமைப்பு இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்)


புதுப்பிப்பு│Update: 24.11.2021

Leave a comment