தமிழ் புலம்பெயர்ந்தோர் வட அமெரிக்கா│Tamil Diaspora North America

தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் விபரப் பட்டியல்
இது தமிழ் சமூக மற்றும் பங்கேற்பு காப்பக செயல்பாடுகளின் (community and participatory archives) ஒரு பட்டியல். உலகளாவிய ரீதியில் நீங்கள் அறிந்த ஏனைய தமிழர் சுவடிகள் சேகரித்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் தகவல்களை எமக்கு அறியத்தாருங்கள்.

TAMILS DOCUMENTATION AND ARCHIVING ACTIVITIES CATALOGUE
This is a catalogue of community and participatory archives activities of Tamils. Please let us know other Tamil documentation and preservation activities around the world to include in this catalogue.

இலங்கைத் தமிழ்ச் சங்கம் │Ilankai Tamil Sangam

இலங்கைத் தமிழ் சங்கம் என்பது இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களின் சங்கமாகும். இச்சங்கம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது அமெரிக்கா வாழ் இந்த தமிழர்களின் பழமையான சங்கமாகும்.

மூல வலைத்தளம் 18. டிசம்பர் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்கா.

Ilankai Tamil Sangam is an association of Tamils from the island of Sri Lanka (formerly Ceylon). The Sangam was formed in 1977 and is the oldest association of these Tamils in the United States of America.



Tamil Archive Project (TAP) ஒரு தன்னார்வ கூட்டு முன்முயற்சியாகும். இது 2016ம் ஆண்டு ஸ்கார்பரோவில் (Scarborough) அரம்பிக்கப்பட்டு செயல்படுகிறது. பரந்த அளவிலான தலைப்புகளில் கவனம் மற்றும் முக்கிய விவாதங்களை மையமாகக் கொண்ட சிறு நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் TAP கனடா வாழ் சமூகத்துடன் ஈடுபட்டு வருகிறது.

வரலாற்றில் இடம்பெறாத பதிவுகளை ஆக்கபூர்வ காப்பகப்படுத்தல் (creative archiving) முறைகளைப் பயன்படுத்தி சமூகத்தின் கடந்த காலத்தை ஆவணப்படுத்துகிறது. அவை தனிப்பட்ட முறையில், சமூக நிகழ்வுகள், கலை அமைப்புகளுடன் பணிபுரதல், வெளியீடுகள் போன்ற வழிமுறைகள் மூலம் செயல்பட்டு வருகின்றது.
கனடா.

Tamil Archive Project (TAP) is a volunteer collective started in Scarborough and is active since 2016. TAP engages with the community in Canada through holding small events that centre care and critical discussions on a wide range of topics.

TAP document the past of the community using creative archiving methods; such as in-person, community events, working with arts organisations, publications, when there are no histories on record. 
Canada.


TamilCulture.com எனும் ஒரு இணையச் சமூகத் தளத்தில் தமிழ் படைப்புகள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்க, பகிர, இணைக்க மற்றும் விற்பனை செய்யலாம்.

TamilCulture.com இன் ஐந்து முக்கிய செயல்பாடுகளில் ஒன்று “கதைகள்” («stories») என்னும் பிரிவு ஆகும். அதில் புலம்பெயர் கதைகள் மற்றும் உலகளாவிய தமிழ் கதைகள் சொல்லப்பட்டு, பதிவு செய்யப்பட்டு மற்றும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்பக்கம் பங்கேற்புக் காப்பகத்தின் (participatory archive) அம்சங்களைக் கொண்டுள்ளது.

TamilCulture.com சிவானு தியாகராஜா மற்றும் அரவிந்தன் ஏகாம்பரம் ஆகியோரால் 2009 ஆம் ஆண்டு டொராண்டோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தளம் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு இணையத்தில் ஒரு நேர்மறையான இடத்தை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது. அதில் உலகெங்கிலும் வாளும் பல்வேறு தமிழர்களின் வெற்றிகளைக் கொண்டாடவும், நம்மை தனித்துவமாக்கும் தமிழர் வரலாற்றைப் பாதுகாக்கவும், சமூகத்தை முன்னேற்றுவதற்கு உதவும் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள, அர்த்தமுள்ள உரையாடலுக்கான மன்றத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
கனடா.

TamilCulture.com is an online community platform where one can create, share, connect and sell Tamil content and initiatives.

The section of «stories» is one of the five main functions of TamilCulture.com. It is a site to tell, document and share migration stories as well as global Tamil stories. This webpage has features of the participatory archive.

TamilCulture.com was started in Toronto in 2009 by Shivanu Thiyagarajah and Aravinthan Ehamparam. The purpose of the platform is to create a positive online space for the global Tamil community to celebrate the successes of various Tamils around the world. As well as to provide a forum to preserve Tamil history that makes us unique through, while giving opportunity for productive, meaningful conversation around various topics to help progress the community forward.
Canada.


The Tamil Creator ஒரு வலையொலி (podcast) ஆகும். இது 2021 ஆம் ஆண்டு ரொறன்ரோவில் அரவிந்தன் ஏகாம்பரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது உலகத் தமிழ் படைப்பாளிகளின் திறமைகளைக் கொண்டாடவும், வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும், அறியவும் உருவாக்கப்பட்டது.

இந்த வலையொலிப் பதிவுகளின் பேணிப்பாதுகாப்பு (preservation) மற்றும் அணுக்கத்தை (access) எளிதாக்குவதற்கு பதிவின் விவரிப்பு (descriptions) மற்றும் நேரப் பதிவுகள் (time logs) உள்ளன. இது வாய்மொழி வரலாற்றைப் போன்றது. ஆனால் இந்த வலையொலிப் பதிவுகள் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தயாரிப்பின் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. வலையொலிப் பதிவுகள் TamilCulture.com இல் மீள் பதிவு செய்யப்படுகின்றன.
கனடா.

The Tamil Creator is a podcast. It was stated by Aravinthan Ehamparam in 2021 in Toronto to celebrate, spotlight and learn about the brilliance among global Tamil creators.

The podcasts have descriptions and time logs to facilitate preservation and access. This is similar to the Oral history, but the podcasts are created with the purpose of entertainment and media production. The podcasts are republished at TamilCulture.com.
Canada.


கனடியத் தமிழர் பேரவை
கனடா.

Canadian Tamil Congress
Canada.


உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 31.05.2022