நினைவு மலர் என்று தமிழர்கள் அழைக்கும் நூலை funeral booklet or memorial booklet என்று ஆங்கிலத்தில் அழைப்பர். அவை commemorative publications (நினைவு வெளியீடுகள்) என்ற கூட்டுச் சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மேற்கத்திய பண்பாட்டில், இது இறுதிச் சடங்கிற்கான அச்சிடப்பட்ட அல்லது எண்ணிம வெளியீடாக தயாரிக்கப்படுகின்றது. இது இறுதிச் சடங்கின் முக்கிய நிகழ்வுகளின் தகவல்களைக் கொண்டிருக்கும். அதோடு இறந்தவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும்.
பல பண்பாடுகளில் நினைவு மலர்கள் வெளியிடும் நடைமுறை உள்ளது. உதாரணமாக, Festschrift என்பது யேர்மனிய பாரம்பரியத்தில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் சைவ மதம் மற்றும் கிரிஸ்தவ மதத்தைச் செர்ந்தவர்கள் மத்தியில் நினைவு மலர்கள் வெளியிடும் பண்பாடு காணப்படுகிறது. மேற்கத்திய பண்பாட்டிற்கு மாறாக, தமிழ் சமூகத்தில் இரண்டு வகையான நினைவு வெளியீடுகள் நடைமுறையில் காணப்படுகின்றன. அதில் ஒரு வகை இறுதிச் சடங்கில் அல்லது ஒரு மாத பூர்த்தியை நினைவுகூரும் சடங்கில் வெளியிடப்படுகின்றது. மற்றொன்று, 1வது, 5வது, 10வது ஆண்டு அல்லது ஆண்டு நினைவுகளில் வெளியிடப்படுகின்றது. இரண்டு வகையான நினைவு வெளியீடுகளிலும் இரங்கல் பா, வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புக்கள், நண்பர்கள் சக செயற்பாட்டாளர்களின் நினைவுகள், பொதுக் கட்டுரைகள், குடும்ப மரம் போன்றவற்றைக் கொண்டு இருக்கும்.
இருப்பினும், இறுதிச் சடங்கில் அல்லது 1வது மாத நினைவு நாளையொட்டி வெளியிடும் நினைவு மலர் பொதுவாக சில பக்கங்களில் குறைந்த அளவிலான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம். இது ஒரு துண்டுப் பிரசுரம், கையேடு அல்லது மலர் வடிவில் இருக்கலாம். மறுபுறம், ஆண்டு நினைவுகளையொட்டி வெளியீடு நினைவு மலர்கள் ஒரு நூல் அல்லது தொகுப்பாக இருக்கும். இது நினைவு மலர் தயாரிப்பிற்குக் கிடைக்கும் நேரம், இறந்தவரின் வயது மற்றும் அவரின் தனிப்பட்ட அல்லது சமூக செயல்பாடுகள் மற்றும் அடைவுகளைப் பொறுத்து அமையும்.
நடுகல் வழிபாடு
நினைவு மலர்கள் என்பது தமிழர்களின் ஆதிவழக்கமான நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சி ஆகும். அது ஆங்கிலத்தில் hero stone worship என்று அழைக்கப்படுகின்றது. தொல்காப்பியம் மற்றும் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களின் அடிப்படையில், மக்கள் ஒரு கல்லில் ஒரு வீரனின் பெயர், அவரது நிழல் உருவம் மற்றும் அவருடைய மகத்துவம் ஆகியவற்றைப் பொறித்தனர். அதை அவர்கள் பெரும்பாலும் ஒரு போர்வீரன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நட்டனர். கல்லில் பொறிக்கும் வழக்கம் கல்வெட்டு என்று அழைக்கப்பட்டது. கல்லில் பொறிக்கும் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியில் நினைவு மலர்களின் நடைமுறை உருவாகியது. அதனால் அவை “கல்வெட்டு நூல்” என்றும் அழைப்படுகின்றன. அத்துடன் “நினைவு மலர்” என்றும் பெயர் உண்டு.
Refeerences:
https://en.wikipedia.org/wiki/Festschrift
https://noolahamfoundation.org/blog/?p=919
https://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/348-2012-07-28-09-08-00

Read the article in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
புதுப்பிப்பு│Update: