English
Flora Maria Gabrial´s memory of Antony Rajendram
My sister, Flora Maria Gabrial (Flora Maria Flavian) (29th June 1941) was the eldest nephew of Antony Rajendram. She was 14 years old when Kutti uncle (Antony Rajendram) travelled abroad on his motorcycle. It was on 06th June 1955, the day when our youngest brother was born. Winceslaus Flavian (Ragu) was the 8th child of our parents. We were all together ten siblings. Our father, Flavian Emilius, was at the Jaffna hospital (யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை) on that day. Kutti uncle waited for his eldest brother to come to Jaffna Municipality, after childbirth. Flora Maria saw that Kutti uncle started his motorcycle journal from Jaffna Municipality (Subramaniam Park; சுப்பிரமணியம் பூங்கா) to Palazhi once her father came to give farewell to his youngest brother, Antony Rajendram.
In 2017, Flora Maria travelled from Sri Lanka to visit her brothers, sisters and her children in Bergen. Then in 2022, she revisited Bergen, where she became ill and was admitted at the Haukeland hospital for treatment. On 03rd July 2022, at the age of 81, she passed away at her daughter’s house in Bergen.
Flora Maria Gabrial´s memory of Antony Rajendram was passed down by her to her younger brother, Regimius Flavian, who shared the story with DiasporA Tamil Archives (DTA). DTA considered documenting her memory in person in the summer of 2022. Unfortunately, we lost her. We are thankful to Flora Maria Gabrial´s brother for sharing her memory. We also condolence to the late Flora Maria Gabrial and send our warm thoughts to her family.
Story told by
Regimius Flavian
13.11.2022
Bergen
Written down by
Baheerathy Kumarendiran
13.11.2022
தமிழ்
அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய புளோரா மரியா கேப்ரியலின் நினைவுப் பதிவு
என் மூத்த சகோதரியான புளோரா மரியா கேப்ரியல் (புளோரா மரியா ஃபிளாவியன்) (29 யூன் 1941) அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் மூத்த பெறாமகள் ஆவார். குட்டி அங்கிள் (அன்ரனி இராஜேந்திரம்) தனது மோட்டார் சைக்கிளில் வெளிநாடு சென்றபோது அவருக்கு 14 வயது. அது 06. யூன் 1955ம் ஆண்டு அன்று எங்கள் இளைய சகோதரர் பிறந்த நாள் ஆகும். வின்செஸ்லாஸ் ஃபிளாவியன் (ரகு) எங்கள் பெற்றோருக்கு 8வது குழந்தை. நாங்கள் அனைவரும் பத்து உடன்பிறப்புகள். அன்று எங்கள் தந்தையார் ஃபிளேவியன் எமிலியஸ் அவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்தார். குட்டி அங்கிள் தனது மூத்த சகோதரர் குழந்தை பிறந்ததும் யாழ்ப்பாணம் நகராட்சிக்கு வருவார் என்று காத்திருந்தார். தனது இளைய சகோதரரான அன்ரனி இராஜேந்திரம் அவர்களுக்கு ஃபிளேவியன் எமிலியஸ் பிரியாவிடை கொடுக்க வந்ததும், யாழ்ப்பாணம் நகராட்சியிலிருந்து (சுப்பிரமணியம் பூங்கா) பாலாலிக்கு குட்டி அங்கிள் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்ததை புளோரா மரியா பார்த்தார்.
2017ம் ஆண்டில் புளோரா மரியா இலங்கையிலிருந்து பேர்கனில் வசிக்கும் தனது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் அவரது பிள்ளைகளைப் பார்க்க வந்தார். பின்னர் 2022ம் ஆண்டு அவர் பேர்கனுக்கு மீண்டும் வருகை தந்தார். அங்கு அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக ஹாக்லேண்ட் மருத்துவமனையில் (Haukland hospital) அனுமதிக்கப்பட்டார். 03. யூலை 2022ம் ஆண்டு அன்று, தனது 81வது வயதில், பேர்கனில் உள்ள தனது மகளின் வீட்டில் காலமானார்.
அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய புளோரா மரியா கேப்ரியலின் நினைவுப் பதிவு அவரது இளைய சகோதரர் ரெஜிமியஸ் ஃப்ளேவியனுக்கு அவரால் சொல்லப்பட்டது. அவரது கதையை ரெஜிமியஸ் ஃப்ளேவியன் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களுடன் (DTA) பகிர்ந்து கொண்டார். 2022ம் ஆண்டு கோடை காலத்தில் புளோரா மரியா அவர்களை நேரில் சந்தித்து அவரது நினைவகத்தைப் பதிவு செய்ய DTA ஆலோசித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரை இழந்துவிட்டோம். புளோரா மரியா கேப்ரியலின் நினைவுப் பதிவை எம்முடன் பகிர்ந்து கொண்ட அவர்து சகோதரரிற்கு எமது நன்றிகள். மறைந்த புளோரா மரியா கேப்ரியலுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பான ஆறுதலை இத்துடன் அனுப்புகிறோம்.
கதை சொன்னவர்
ரெஜிமியஸ் ஃபிளாவியன்
13.11.2022
பேர்கன்
பதிவு செய்தவர்
பகீரதி குமரேந்திரன்
13.11.2022
Norsk
Flora Maria Gabrials minne om Antony Rajendram
Min søster, Flora Maria Gabrial (Flora Maria Flavian) (29. juni 1941) var den eldste nevøen til Antony Rajendram. Hun var 14 år gammel da Kutti-onkelen (Antony Rajendram) reiste utenlands med motorsykkelen sin. Det var den 6. juni 1955, dagen da vår yngste bror ble født. Winceslaus Flavian (Ragu) var det 8. barnet for våre foreldre. Vi var alle sammen ti søsken. Faren vår, Flavian Emilius, var på Jaffna-sykehuset (யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை) den dagen. Kutti-onkel ventet på at hans eldste bror skulle komme til Jaffna Municipality, etter fødselen. Flora Maria så at Kutti-onkelen startet sin motorsykkel reise fra Jaffna Municipality (Subramaniam Park; சுப்பிரமணியம் பூங்கா) til Palazhi, da faren hennes kom for ta farvel med sin yngste bror, Antony Rajendram.
I 2017 reiste Flora Maria fra Sri Lanka for å besøke sine brødre, søstre og hennes barn i Bergen. Så i 2022 reiste hun tilbake til Bergen, hvor hun ble syk og ble innlagt på Haukeland sykehus for behandling. Den 03. juli 2022, i alder av 81 år, døde hun hjemme hos datteren i Bergen.
Flora Maria Gabrials minne om Antony Rajendram ble videreført av henne til hennes yngre bror, Regimius Flavian, som delte historien med DiasporA Tamil Archives (DTA). DTA vurderte å dokumentere minnet hennes personlig i sommeren 2022. Men dessverre mistet vi henne. Vi er takknemlige til Flora Maria Gabriels bror for å ha delt hennes minne. Vi også kondolerer til avdøde Flora Maria Gabrial og sender våre varme tanker til familien hennes.
Historien fortalt av
Regimius Flavian
13.11.2022
Bergen
Nedtegnet av
Baheerathy Kumarendiran
13.11.2022

Read the memory narrative in Norwegian at Lokalhistoriewiki.no at Norway National Library.
Visited 13th November 2022.
புதுப்பிப்பு│Update: