முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்

ஆங்கில ஆக்கம்: மதுஷியா பிரபாகரன் மற்றும் சாம்பவி வேதானந்தன்

நோர்வேயில் மே 18

நோர்வே நாடு முழுவதும் வாழும் தமிழர்களால் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. ஒஸ்லோவில், Jernbanetorget இலிருந்து பாராளுமன்றம் நோக்கி ஒரு நினைவு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். நினைவு நாளில் அரசியல்வாதிகளின் உரைகள், பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை நிகழும். ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் நாளாகவும், தமிழீழம் வாழ் தமிழர்கர்களால் சொல்ல முடியாத பிரச்சினைகளை முன்னிறுத்துவதற்கு அவர்களுக்கான குரலாக பயன்படுத்தும் ஒரு நாளாகவும் இந்த நாள் பார்க்கப்படுகிறது.

வரைகலை: “விழ விழ எழுவோம்”. (BK, 02.05.2022)

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளாகும். ஈழத் தமிழர்களாலும், உலகத் தமிழர்களாலும் ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு இதே நாளில், தமிழீழத்தின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள முள்ளிவாய்க்கால் கிராமத்தில் ஈழப் போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் 146,679 பேர் இறந்ததாக உள்ளூர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் ஐ.நா மற்றும் உலக வங்கியின் ஆதாரங்களுடன் Truth and Justice Project (ITJP) அதிகபட்சமாக 169,796 ஆக இருக்கலாம் என்று கூறியுள்ளது. இங்கு பெரும்பாலானோர் “No Fire Zone” இல் கொல்லப்பட்டனர். இது ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையாகவே தமிழர்களால் கருதப்படுகிறது. இனப்படுகொலை என்பது மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றமாக பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட குழுவின் வெகுஜன அழிவு என வரையறுக்கப்படுகிறது.

தமிமீழம்

மே 18 ஆம் திகதியை வெற்றி தினமாக பிரகடனப்படுத்தி இராணுவ அணிவகுப்புகளுடன் அன்றைய தினம் இலங்கை அரசாங்கத்தால் கொண்டாடப்படுகிறது. யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் நாளாகவும் இந்த தினம் காணப்படுகின்றது. மறுபுறம், தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதில் அரசாங்கம் கட்டுப்படுகளை போடுகின்றது. ஒவ்வொரு வருடம் மே மாதத்தில் 18 ம் திகதி வரை, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பை கடுமையாக்குவதும், பொது நினைவுகூரலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதும் வழக்கம். அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படையினரும் தமிழர்களுக்கான ஒவ்வொரு நினைவு நாளையும் விடுதலைப் புலிகளின் நினைவாகவே கருதுகின்றனர், பொதுமக்களுக்கானதாக கருதவில்ல. இதனால், இறந்தவர்களை நினைவுகூர தாயகம் வாழ் தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான போர் நினைவுச்சின்னம்

2019 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்தனர். இது 2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாகும். 08. சனவரி 2021 அன்று அந்த நினைவுச்சின்னம் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், 23. ஏப்ரல் 2021 அன்று நினைவுச்சின்னம் மாற்றியமைக்கப்பட்டது. ஆயுதப் போரின் முடிவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இலங்கையின் கனரக பீரங்கி குண்டுத் தாக்குதலைத் தவிர்த்தவாறு அந்தப் புதிய நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.


இக்கட்டுரை Lokalhistoriewiki.no இல் உள்ள “பன்முகத்தன்மையான வரலாற்றுக் கதைகள் – நோர்வே-தமிழர்களின் வரலாறு” எனும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகாக 11.08.2021 அன்று உருவாக்கப்பட்டதின் தழுவல்.
The article is an adaptation of the article posted at Lokalhistoriewiki.no on 11.08.2021, as a part of the project «A diversity of stories – the history of the Norwegian-Tamils».


மேற்கோள்

Tamil Guardian. (2021). 12 years today – A massacre in Mullivaikkal. Retrieved from https://www.tamilguardian.com/content/12-years-today-massacre-mullivaikkal.
BBC News. (2022). How do you define genocide?. Retrieved from https://www.bbc.com/news/world-11108059.
Ontario. (2022). Ontario Helping Tamil Students Succeed. Retrieved from https://news.ontario.ca/en/release/1001501/ontario-helping-tamil-students-succeed.
Tamil Guardian. (2022). Ontario Government announces $50,000 of funding to tackle mental health and intergenerational trauma caused by the Tamil Genocide. Retrieved from https://www.tamilguardian.com/content/ontario-government-announces-50000-funding-tackle-mental-health-and-intergenerational-trauma.
TamilNet. (2021). Colombo destroys Mu’l’livaaykkaal memorial monument at Jaffna University. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39965.
Tamil Guardian. (2021). Replacement Mullivaikkal memorial unveiled at Jaffna University. Retrieved from https://www.tamilguardian.com/content/replacement-mullivaikkal-memorial-unveiled-jaffna-university


புதுப்பிப்பு│Update: 30.05.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: