ஆக்கம்: மதுசியா பிரபாகரன் மற்றும் சாம்பவி வேதநாதன்
செண்பகம், நோர்வேயிய மொழியில் orientsporegjøk (ஒரியெந்த்ஸ்பூரயோக்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் (greater coucal) அல்லது குறோ பீசன்ற் (crow pheasant) என்று அழைக்கப்படுகிறது. செண்பகம் மற்றும் அதன் கிளையினங்கள் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் வாழ்கின்றன. இவை காக்கைகளை விட சற்று பெரியதாகவும், நீண்ட வால் மற்றும் காவிநிற இறக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். இவை தமிழீழத்தில் தத்தித் தத்தி திரிவதைக் காணலாம். செண்பகத்தின் மெதுவான இருப்பிடம் பதிவான செடிகள் ஆகும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinesis) ஆகும்.

இப்பறவை பற்றிய தகவல்கள்
செண்பகம் நத்தைகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள் மற்றும் பல்லிகளை சாப்பிடும். அதே போல் மற்ற பறவைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளயும் உண்ணும். இவர்களின் வேட்டைக் காலம் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இது சுமார் 3 முதல் 4 முட்டைகளை இட்டு, அவற்றை அடைகாக்கும்.
தமிழீழம்
செண்பகம் தமிழீழத்தின் தேசியப் பறவை ஆகும். அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் தாயகத்திலே வாழும் முறையைக் கொண்ட காரணங்களால் இது தமிழீழத்தின் தேசிய பறவையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் பொதுவாக தங்கள் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்க இடம்பெயர்கின்றன. ஒரு சில பறவைகள் மட்டுமே தனது இயற்கையான வாழ்விடத்தில் வாழும். செண்பகம் அப்படிப்பட்ட ஒரு பறவை. இடம்பெயராமல் தான் இருக்கும் இடத்தில் தங்கிவிடும்.
மூலங்கள்:
Tamil Youth Organisation Norway Instagram
Wikipedia
சஞ்சிகை: “எரிமலை”. டிசம்பர் 2005. பிரான்சு: 38

Read the article at Lokalhistoriewiki.no at Norway National Library.
புதுப்பிப்பு│Update: 19.04.2023