தேசியப் பறவை: செண்பகம்

செண்பகம், நோர்வேயிய மொழியில் orientsporegjøk (ஒரியெந்த்ஸ்பூரயோக்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் (greater coucal) அல்லது குறோ பீசன்ற் (crow pheasant) என்று அழைக்கப்படுகிறது. செண்பகம் மற்றும் அதன் கிளையினங்கள் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் வாழ்கின்றன. இவை காக்கைகளை விட சற்று பெரியதாகவும், நீண்ட வால் மற்றும் காவிநிற இறக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். இவை தமிழீழத்தில் தத்தித் தத்தி திரிவதைக் காணலாம். செண்பகத்தின் மெதுவான இருப்பிடம் பதிவான செடிகள் ஆகும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinesis) ஆகும்.

Wikipedia

இப்பறவை பற்றிய தகவல்கள்

செண்பகம் நத்தைகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள் மற்றும் பல்லிகளை சாப்பிடும். அதே போல் மற்ற பறவைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளயும் உண்ணும். இவர்களின் வேட்டைக் காலம் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இது சுமார் 3 முதல் 4 முட்டைகளை இட்டு, அவற்றை அடைகாக்கும்.

தமிழீழம்

செண்பகம் குறைந்த பறக்கும் திறன் கொண்ட பறவை. அவை இயற்கையாகவே வாழும் இடத்தில் இருக்கும் பறவைகளில் ஒன்றாகும். அதேசமயம், அதிக பறக்கும் திறன் கொண்ட பறவைகள் வானிலை மாற்றங்களில் உயிர் வாழ நீண்ட மற்றும் குறுகிய தூரங்களுக்கு இடம்பெயர்கின்றன. காடை (kāṭai – quail) மற்றும் கௌதிரி (kautāri – grey francolin) ஆகியவை இலங்கையில் குறைந்த பறக்கும் திறன் கொண்ட பிற பறவைகள் ஆகும். அவை உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இலங்கையில் தமிழ்ப் பகுதியில் தனித்துவம் வாய்ந்த மற்றும் தேசியப் பண்பு மிக்க குறைந்த பறக்கும் திறன் கொண்ட பறவை என்ற பின்னணியில், தமிழீழத்தின் (வட- கிழக்கு இலங்கை) தேசியப் பறவையாக செண்பகம் சுமார் 2005ம் ஆண்டு அளவில் பிரகடணப்படுத்தப்பட்டது. பல நாடுகளின் தேசியப் பறவை குறைந்த அளவு பறக்கும் திறன் கொண்டது. மயில் இந்தியாவின் தேசிய பறவை ஆகும். காட்டுக் கோழி இலங்கையின் தேசியப் பறவை ஆகும். நோர்வேயின் தேசியப் பறவை fossekall (எஃப்பொஸ்சகல்) ஆகும். அது dipper (டிப்பர்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு நீரில் மூழ்கிச் செல்லும் பறவை வகை ஆகும்.

தமிழீழத்தின் எனைய தேசியச் சின்னங்கள்

தேசிய மலர்: kāntaḷ (காந்தள்), kārttikaippū (கார்த்திகைப்பூ) – gloriosa lily
தேசிய மரம்: vākai (வாகை) – அல்பிசியா லெபெக்
தேசிய பறவை: ceṇpakam (செண்பகம்) – ஓரியண்டல் ஸ்பர் குக்கூ
தேசிய விலங்கு: ciṟuttai (சிறுத்தை) – சிறுத்தை

நோர்வேயிய மொழியில் சுவரொட்டி


மூலங்கள்:

மூல எழுத்துரு ஆக்கம்: மதுசியா பிரபாகரன் மற்றும் சாம்பவி வேதநாதன் (2021)



புதுப்பிப்பு│Update: 09.06.2023

Leave a comment