மே 18: முள்ளிவாய்க்கால் இனவழிப்புத் தினம்

ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார் (13), பிரணயா செல்வா (13), தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன்

ஈழத்தில் தமிழர்களுக்கும் சிங்கள அரசிற்கும் இடையிலான போர் தமிழர் மீதான தொடர் அடக்குமுறைகளும் இனவழிப்பிற்கும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் பல ஆண்டுகளாக உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடி வந்தனர். 18 மே 2009 அன்று, 1948 முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறை மற்றும் இனவழிப்பு; 1983 முதல் நிகழ்ந்த போரை ஒரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (structural genocide) மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இது தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக அமைந்தது. இதில் விடுதலைப் போராட்ட வீரர்கள்; தமிழீழ விடுதலைப் புலிகள், மற்றும் தமிழ் பொதுமக்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர். பல தமிழர்கள் தங்களது அன்புக்குரியவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா என்ற நிச்சயமற்ற நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அடங்குவார். 18 மே 2009, முள்ளிவாய்க்கால் இனவழிப்பு தினம், தமிழ் இனப்படுகொலையின் ஒரு முக்கியமான மற்றும் மறக்க முடியாத நினைவு தினமாக என்றும் நினைவுகூரப்படும். ஏனெனில் இது நமது வரலாற்றிலும் அடையாளத்திலும் ஒரு அங்கமாகும்.

26 ஆண்டுகளாக நீடித்த ஆயுதப் போராட்டம் அநீதி வழியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசு தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் இனவழிப்பையும் மேற்கொண்டது. அதன் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போர்க்குற்றங்களும் இனவழிப்பும் அமைந்தது. இது ஈழத் தமிழர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அரச ஆதரவுடன் (state-sponsored) மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கான குறியீட்டு நாளாக அமைகின்றது.

கொடூரமான போரில் நிகழ்ந்த அனைத்து விதமான அத்துமீறல்களும் இருந்தபோதிலும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு ஒரு பயங்கரமான கனவின் (nightmare) அத்தியாயமாக வெளிப்படுகிறது. முள்ளிவாய்க்கால் பற்றிய வேதனையான அறிக்கைகள் விவரிக்க முடியாத மிருகத்தனத்தையும் இரக்கமற்ற கொலைகளையும் வெளிப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கம் அப்பாவிப் பொது மக்களை முள்ளிவாய்க்காலில் ஒரு “no fire zone” என்ற எல்லைக்குள் தஞ்சமடையுமாறு கேட்டுக் கொண்டும், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்திற்கும் (safe zone) உறுதியளித்தது. அங்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படை வழங்கல் தடைசெய்யப்பட்டன. இத்தகைய ஓர் பாதுகாப்பற்ற வாழ்க்கையில், அந்த மக்களின் ஒரே ஒரு நம்பிக்கை உயிர்நாடியாக காஞ்சி (kanci/ congee)1 மட்டுமே இருந்தது. இந்த நிலையில் இலங்கை அரச படைகள் பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடனும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை முள்ளிவாய்க்காலில் சிக்க வைத்தது. “No fire zone” இல் குண்டுவீச்சு நடாத்தப்பட்டது என்பதே ஒரு போர்க்குற்றம் ஆகும். முள்ளிவாய்க்காலில் பல நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இறந்தனர். பல பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பலவற்றை கடந்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பல தமிழர்கள் இன்றும் இலங்கையின் வடகிழக்கில் சிங்கள அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். பலர் இன்றும் நிச்சயமற்ற மற்றும் பயம் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் சோகம், துக்கம் மற்றும் அடக்குமுறை அற்ற ஒரு அமைதியான சுதந்திரமான வாழ்க்கையை வாழ எதிர்பார்க்கின்றனர். இதனால்தான் மே 18 ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் ஒரு முக்கியமான, மறக்க முடியாத நாளாகும். இந்த நாள் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்.


பின்குறிப்பு

1கஞ்சி ஒரு தமிழ் சொல்லாகும். இதன் பொருள் “சோற்று-நீர், சோற்றை அவித்து ஊற்றப்படும் நீர், ஸ்டார்ச் (starch).” (T. Burrow, 1984). கஞ்சி எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் congee என்ற சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது.

மேற்கோள்

Congee of hope. (2021). Congee கஞ்சி just add hope. Retrieved from https://www.congeeofhope.org/
Slettholm, A. (14.11.2012). FN sviktet Sri Lankas sivile. Aftenposten. Retrieved from https://www.aftenposten.no/verden/i/y3Ea2/fn-sviktet-sri-lankas-sivile
T. Burrow, M. B. E. (1894). A Dravidian Etymological Dictionary(2 ed.). Retrieved from https://archive.org/details/DravidianEtymologicalDictionary_201811
Williams, R., Weaver, M. (18.05.2009). Timeline: Sri Lanka conflict. The Guardian. Retrieved from https://www.theguardian.com/world/2009/may/18/sri-lanka-conflict


புதுப்பிப்பு│Update: 10.05.2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: