கனடாவில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம் வெளியீடு

Photo: Wikipedia. Thanthai Chelva (Father Chelva). Father of Tamil nationalism.

ரொறன்ரோ ஸ்கார்புரோ பல்கலைக்கழகத்தின் (University of Toronto Scarborough – UTSC) நூலக ஆவணகத்தில் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) ஆவணகச் சேகரம் வெளியிடப்படுகின்றது. ஒரு மெய்நிகர் வெளியீடு வெள்ளிக்கிழமை 26 பெப்ரவரி 2021 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறவுள்ளது (Eastern Time – US & Canada).

«பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் ஆவணகச் சேகர வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமைகிறது. ஓர் அரசியற் தலைவராக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய செல்வநாயகத்தின் வாழ்வு 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக விளங்குகிறது. செல்வநாயகத்தின் ஆவணங்கள் பெருமளவிலான கடிதத் தொடர்புகளையும் சிறுவெளியீடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களையும் கொண்டுள்ளன. இவை செல்வநாயகத்தின் மகளான சுசிலி செல்வநாயகம் வில்சனால் மிகச் சீரிய முறையில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ் ஆவணகச் சேகரம் சுசிலி செல்வநாயகம் வில்சன் மற்றும் செல்வநாயகத்தின் பேத்தியான மல்லிகா வில்சன் ஆகியோரால் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.» (UTSC)


புதுப்பிப்பு│Update:

Leave a comment