அழைப்பு: முள்ளிவாய்க்கால் 2009 நினைவுப் பதிவுகளை பங்களியுங்கள்

நோர்வே வாழ் அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் சமூகத்தின் சுய ஆவணப்படுத்தலுக்காக நினைவகப் பதிவுகளை பங்களிப்பதன் மூலம் சமூகக்குழுச் சுவடிகள் உருவாக்கத்தில் பங்குபெறுங்கள். இதன் மூலம், நீங்கள் நோர்வே-தமிழர்களின் வரலாறு மறக்கப்படுவதைத் தடுக்க உதவலாம். நோர்வேயில் தமிழர் வரலாறு இழக்கப்படுவதைத் தடுக்கலாம். மாறாக, அது நோர்வே வரலாற்றின் ஒரு பகுதியாக பாதுகாக்கப்படுவதற்கு உதவலாம். உங்களது நினைவகத்தைப் பதிவு செய்து, அதை சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நினைவகச் சுவடிகளாக விட்டுச் செல்லுங்கள்.

முள்ளிவாய்க்கால் 2009

2024ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் தமது சொந்த மண்ணில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இனப்படுகொலையை அனுபவித்தார்கள். இது 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நடந்த மறக்கப்பட்ட இனப்படுகொலை ஆகும். நோர்வேயில் பெருகிவரும் புலம்பெயர் தமிழ் சமூகம், நோர்வேயில் சிறுபான்மை சமூகமாக அவர்களது வரலாறு கண்ணுக்கு தெரியாததாக மாற்றப்பட்டுள்ளது. காசாவில் நிகழும் அவலத்திற்கும் தமிழீழத்தில் நிகழ்ந்த அவலத்திற்கும் இடையிலான ஒத்த நிலையை ஏன் சமூகமும் ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை?

காணொளியாக ஒரு நினைவுப் பதிவு
முள்ளிவாய்க்கால் நிகழ்வை அனுபவித்த உங்களை அல்லது பாதிக்கப்பட்ட நபர், நண்பர் அல்லது தெரித்தவர்களை 30 வினாடிகள் தொடக்கம் 1 நிமிடம் வரை கொண்ட ஒரு சிறு காணொளியை சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்க விரும்புகிறோம். உங்களது நினைவகத்தில் இருக்கும் ஒரு அனுபவத்தை சிறுகதையாக பதிவு செய்யுங்கள். அன்றைய முள்ளிவாய்க்கால் எப்படி இருந்தது, அந்த  நிகழ்வு உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்திற்கு என்ன முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள உங்களது நினைவகப் பதிவு உதவும். காணொளிகள் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தின் இணையத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படும்.
 
எழுத்துருவாக ஒரு நினைவுப் பதிவு
நீங்கள் காணொளியாக உருவாக்க விரும்பவில்லை அல்லது அது மிகவும் தொழில்நுட்ப சவாலாக  இருக்கும் என்று நினைத்தால், எழுதப்பட்ட நினைவகப் பதிவை இருவாக்க ஊக்குவிக்கின்றோம். எழுதப்பட்ட நினைவகப் பதிவு 100 சொற்கள் (+/-25 சொற்கள்) நீளத்தைக் கொண்டிருக்கலாம்.
 
முள்ளிவாய்க்கால் 2009 பற்றிய எழுதப்பட்ட நினைவகப் பதிவு புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தின் இணையத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும், நோர்வே தேசிய நூலகத்தின் Lokalhistoriewiki.no என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.
 
முள்ளிவாய்க்கால் 2009 நினைவகப் பதிவுக்கான வழிகாட்டல் கேள்விகள்
1. மே 2009 இல் முள்ளிவாய்க்கால் நடந்தபோது உங்களது வயது என்ன?
2. இலங்கையில் இறுதிக்கட்டப் போரான முள்ளிவாய்க்கல் மே 2009ல் நிகழும் போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? அதை எப்படி அறிந்துகொண்டீர்கள்?
3. முள்ளிவாய்க்கால் 2009ல் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள்?
4. சனவரி முதல் மே 2009 வரையிலான காலப்பகுதி தொடர்பாக இன்று உங்களுக்கு என்ன உணர்வுகளும் எண்ணங்களும் உள்ளன?
5. முள்ளிவாய்க்கால் 2009 தமிழீழம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களை எவ்வாறு பாதித்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
6. முள்ளிவாய்க்கால் 15 வருடங்கள் கழித்த நிலையில்/ இன்று வரை ஏற்பட்ட விளைவுகளாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
 
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.

வரலாறு

முள்ளிவாய்க்கால் 2009

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் நினைவுகூறி வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு இந்த நாளில், தமிழீழத்தின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள முள்ளிவாய்க்கால் கிராமத்தில் போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் 146 679 பேர் இறந்ததாக உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் ஐ.நா மற்றும் உலக வங்கி ஆதாரங்களுடன் கூடிய அதிகபட்ச மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாக 169 796 பேர் இறந்திருக்கலாம் என்று International Truth and Justice Project (ITJP) கூறியுள்ளது.

No Fire Zones

முள்ளிவாய்க்கால் கிராமத்தில், இலங்கை அரசாங்கத்தால் “பாதுகாப்பு வலயம்” என்று அறிவித்திருந்த “No Fire Zones” இல் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டனர். எனவே இது ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையாகவே தமிழர்களால் பார்க்கப்படுகிறது. இனப்படுகொலை என்பது மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றமாக பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட இனக் குழு மீது வெகுசன அழிவு என வரையறுக்கப்படுகிறது.

Med vennlig hilsen │அன்புடன்│Kind regards
DiasporA Tamil Archives
புலம்பெயர் சுவடிகள் காப்பகங்கள்


நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
எமக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். நாங்கள் தொடர்பு கொள்கிறோம்.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning
Warning!




மேற்கோள்கள்:

“Minnedag for Mulliaikkal” (Lokalhistoriewiki, 11.08.2021): https://lokalhistoriewiki.no/wiki/Minnedag_for_Mullivaikkal
“Mullivaikkal Kanji” (Lokalhistoriewiki, 12.05.2023): https://lokalhistoriewiki.no/wiki/Mullivaikkal_Kanji
“15 years today – Thousands of British Tamils occupy Parliament Square as Sri Lanka shells No Fire Zone” (Tamil Guardian, 06.04.2024): https://www.instagram.com/p/C5a_MkkNU9Z/?igsh=MWhwa3ZzNHA3b3Yzcw%3D%3D&img_index=1

Tamil Guardian. (2021). 12 years today – A massacre in Mullivaikkal. Retrieved from https://www.tamilguardian.com/content/12-years-today-massacre-mullivaikkal.
BBC News. (2022). How do you define genocide?. Retrieved from https://www.bbc.com/news/world-11108059.
Ontario. (2022). Ontario Helping Tamil Students Succeed. Retrieved from https://news.ontario.ca/en/release/1001501/ontario-helping-tamil-students-succeed.
Tamil Guardian. (2022). Ontario Government announces $50,000 of funding to tackle mental health and intergenerational trauma caused by the Tamil Genocide. Retrieved from https://www.tamilguardian.com/content/ontario-government-announces-50000-funding-tackle-mental-health-and-intergenerational-trauma.
TamilNet. (2021). Colombo destroys Mu’l’livaaykkaal memorial monument at Jaffna University. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39965.
Tamil Guardian. (2021). Replacement Mullivaikkal memorial unveiled at Jaffna University. Retrieved from https://www.tamilguardian.com/content/replacement-mullivaikkal-memorial-unveiled-jaffna-university

புதுப்பிப்பு│Update: 20.05.2024

Leave a comment