Norsk | Tamil | Tamil-Norwegian Archives.

22.06.2024 சனிக்கிழமை மற்றும் 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (நோர்வே) ஒழுங்கமைப்பில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா நடைபெற்றது. கொரோனாத் தொற்றுக் காரணமாக சமூகச் செயற்பாடுகள் முடக்கப்பட்ட காலப்பகுதியிலும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஒரு இடைநிறுத்தம் தவிர்த்து 1990 களின் நடுப்பகுதியில் இருந்து இந்த விளையாட்டு விழா சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான வருடாந்திர விளையாட்டு விழாவாக இருந்து வருகிறது.
பல தமிழ் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் தனிநபர்கள் தடகள விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றிக்கோப்பைக்காக போட்டியிடுவார்கள். இந்நிகழ்வில் விளையாட்டுச் சுடர் ஏற்றுதல் மற்றும் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கிய வண்ணம் சிறுவர்களின் அணிவகுப்பும் இடம்பெறும். நோர்வே வாழ் தமிழ் சமூகத்தின் மூன்று தலைமுறைகளை இணைக்கும் சுவையான தமிழ் உணவுகளால் இவ்விரு நாட்களும் நிறைவாக இருக்கும். விளையாட்டு விழாவை சிறப்பிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டு உரை வழங்கப்படும்.
சமகால புலம்பெயர் தமிழ்ச் சமூகத் தேவையை மையமாகக் கொண்ட இவ்வருட உரையை இங்கே வெளியிடுகிறோம். இந்த உரை நோர்வே வாழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளையும், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழர்களையும் சுய ஆவணப்படுத்தலில் ஈடுபட ஊக்குவிக்கிறது.
இதுவரை அறியப்பட்டபடி, 1977 இல் பெர்கனில் நிறுவப்பட்ட “Tamilnes Forening i Bergen og Hordaland”, நோர்வேயின் முதல் பதிவு செய்யப்பட்ட தமிழ் அமைப்பு ஆகும்[i]. பின்னர் ஒசுலோவில் “நோர்வே தமிழ்ச் சங்கம்” 1979 இல் நிறுவப்பட்டது[ii]. இவை தமிழ் சமூக அமைப்புகள் அகும். “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” (TCC) 1983 ஆம் ஆண்டு ஒசுலோவில் ஒரு தமிழ் சமூக அரசியல் அமைப்பாக நிறுவப்பட்டது. நோர்வேயில் உள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புகளிற்கு தமிழ்ச் சங்கம் அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அதன் வரலாற்று வேர்களாகவோ அல்லது வரலாற்று உத்வேகமாகவோ இருப்பதைக் காணலாம்.
இந்த இடுகையின் மூலம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே கிளையினரால் தமிழர் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட அனைவரையும், அத்துடன் அவர்களின் உரையையும் பட்டியலிட விரும்புகிறோம். அதற்கான தகவலைப் பங்களித்து இந்த பட்டியலைப் புதுப்பிக்க உதவுங்கள்.
| ஆண்டு/År | பெயர்/ Navn | துறை/ Fagfelt | கருப்பொருள்/tema | உரை/tale |
| 2024 | பகீரதி குமரேந்திரன் Baheerathy Kumarendiran | சுவடிகள் காப்பக நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர் Arkivar og designer | புலம்பெயர் தமிழரை சுய ஆவணப்படுத்தலுக்கு ஊக்குவிப்பு En oppfordring til det tamilske diasporaet om selv-dokumentering | Original (norsk og tamil) Tamil Norsk |
| 2023 | சாரா யோகலிங்கம் கபரியேல் Sara Yogalingam Gabriel | தலைமை மருத்துவர் (மனநல மருத்துவத்தில் நிபுணர்) Overlege (spesialist i psykiatri) | ||
| 2019 | ஆதித்தன் ஜெயபாலன் Athithan Jeyapalan | PhD stipendiat, UiO | ||
| 2018 | தர்சிகா சிவபாலன் Tharshika Sivapalan | கட்டடப் பொறியியலாளர் Sivilingeniør | ||
| 2017 | மதுசன் சந்துரகுமார் Mathusan Chandrakumar | விளையாட்டு வீரர் மற்றும் நோர்வே தேசிய அணியில் கால்பந்த வீரர் Sportsutøver og fotball spiller i norsk landslag |
நோர்வே வாழ் தமிழ் சமூகத்தை மேல் காணும் 14 கேள்விகள் கொண்ட மின்-படிவத்தை நிரப்பி, தனிநபர்கள் மற்றும்/அல்லது அமைப்புகளால் நோர்வேயில் உருவாக்கப்பட்ட பிற அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்களுக்கு அறியத்தருமாறு ஊக்குவிக்கிறோம். மேலோட்டத்தை catablog ஆக (மின்னணு அட்டவணை) வெளியிடுவோம்.
இதன் முதல் புலம்பெயர் தமிழ் வரலாற்றைக் கைப்பற்றவும் (capture), பாதுகாக்கவும் (protect) மற்றும் பேணிப் பாதுகாக்கவும் (preserve) உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.
இப்படிவம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி 1: Your contact information│உங்கள் தொடர்பு (3 கேள்விகள்)
பகுதி 2: “Tamilenes liv og historie i Norge (1956-2016)”│”நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்” (2 கேள்விகள்)
பகுதி 3: Details of the initiative│முன்முயற்சியின் விவரங்கள் (9 கேள்விகள்)
நன்றி!
மேற்கோள்:
[i] 01.08.1977: Tamilnes Forening i Bergen og Hordaland (பெர்கன், 1977) (Brreg.no). (12. நவம்பர் 1977 ஆரம்பத் திகதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.)
[ii]14.01.1979: Norway Tamil Sangam (Oslo, 1979) (Brreg.no) (06.12.2009 Brønnøysund பதிவேடுகளில் நிறுவப்பட்ட திகதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது நோர்வேயில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக மாறியதற்கான திகதியாகும்).

இக்கட்டுரை நோர்வே தேசிய நூலகத்தின் Lokalhistoriewiki.no இல்.
The article at Lokalhistoriewiki.no at Norway National Library.
புதுப்பிப்பு│Update: 10.07.2024

