
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DTA) மற்றும் தமிழ் இன்சைட் (TI) இணைந்து, “முள்ளிவாய்க்கால்: ஒரு சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்” என்ற தலைப்பில் ஒழுங்குசெய்யப்படும் கண்காட்சிக்கு உங்களை அழைக்கிறோம். மறைக்கப்பட்ட இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் 2009 நினைவையும், நோர்வே வாழ் பல்லினப் பண்பாட்டுச் சமூகத்திற்கு தமிழர்களின் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையின் வரலாற்றை உணர்த்தவும் இக்கண்காட்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கண்காட்சி
ஒசுலோ, அகெர்சூஸ், பெர்கன் மற்றும் ஸ்டாவங்கர் ஆகிய நகரம்/ மாவட்டங்களில் கண்காட்சியும் நினைவுகூரலும்
Oslo:
02.05-31.05: Alna Bydelshus
02.05-31.05: Oslo Byarkiv
02.05-16.05: Deichman Holmlia
02.05-31.05: Deichman Lambertseter
02.05-31.05: Deichman Stovner
Bergen:
02.05-14.05: Fana bibliotek
02.05-31.05: Landås bibliotek
Stavanger:
02.05-15.05: Sølvberget bibliotek og kulturhus
Akershus:
06.06-12.06: Lillestrøm bibliotek

ஒரு நாள் கண்காட்சி
05.05.2024, 17:00 மணி: தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் இக்கண்காட்சி வைக்கப்படும்.
இடம்: தமிழர் வள ஆலோசனை மையம் மண்டபம்.
ஒருங்கிணைப்பு: நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
18.05.2024, 14:00 மணி: தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் இக்கண்காட்சி வைக்கப்படும். இடம்: Oslo S இல் அமைந்துள்ள Tigerplass.
ஒருங்கிணைப்பு: நோர்வேயில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் 18. மே ஒழுங்கமைப்பு செயல்குழு (18. mai komite)

நினைவு கூரலும் நிகழ்வுகள் – Deichman Stovner

நிகழ்வு
- 17:00 நுழைவு
- 17:30 அகவணக்கம்
- வரவேற்புரை
- கவிதை/spoken word – WETO (விதுரன் விஜயராஜ்)
- Kristian Stokke, Øivind Fuglerud மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.
- நிறைவு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி
சிவப்பு அரிசி, தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு உணவு – இதுவே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் (No Fire Zone) இருந்த தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு வாழ்வாதாரமாக இருந்தது.
நோர்வே-தமிழர்கள் நோர்வேயில் ஒரு ஒருங்கிணைந்த புலம்பெயர் சமூகவாக உள்ளார்கள். ஆனால் மறுபுறம் பல நோர்வேயியர்கள் அறியாத ஒரு மறக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சமூகமாக உள்ளார்கள். 18 மே 2024, ஈழத்தில் 160,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு ஒரு இனப்படுகொலையில் முடிவடைந்த யுத்தத்தின் 15 ஆவது ஆண்டைக் குறித்து நிற்கின்றது. 1833 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களின் ஒடுக்கப்பட்ட தேசிய இன வரலாறு தொடர்கிறது. இதைத்தான் இந்தக் கண்காட்சியில் நாங்கள் காண்பிக்கவுள்ளோம். அதோடு நோர்வேயில் உள்ள பன்முகப் பண்பாட்டுச் சமூகத்திற்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
எனவே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்டு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி மறக்கப்பட்ட வரலாற்றை மேலும் அறிய உங்களை அழைக்கின்றோம்.
உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DTA) மற்றும் தமிழ் இன்சைட் (TI)
DiasporA Tamil Archives மற்றும் Tamil Insight
நிகழ்வுகள் – Lillestrøm நூலகம்
06.06.2024, 18:00 மணி: புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DTA) மற்றும் தமிழ் இன்சைட் (TI) உடன் விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இடம்: Lillestrøm நூலகம்

கண்காட்சியின் கதை
‘சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம்’ என்ற தலைப்பில் காண்பிக்கப்படும் இந்தக் கண்காட்சி, காலனித்துவ காலம் முதல் இன்று வரை ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையின் நீண்ட வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதே கண்காட்சியின் நோக்கமாகும். இந்தக் கண்காட்சிக்கான கதை “Tamil Diaspora: fra Eelam-tamilsk kongerike til undertrykt Eelam-tamilsk nasjon“ என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.
கட்டுரை 14. மார்ச் 2024 அன்று இத்தளதில் வெளியிடப்பட்டது. எழுதும் செயல்பாடு 2021-2022 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இக்கட்டுரை நோர்வே தேசிய நூலகத்தின் நிர்வாக அலகிற்குள் இயங்கும் Lokalhistoriewiki.no இல் 16. மார்ச் 2024 அன்று வெளியிடப்பட்டது.
கட்டுரையின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் NOTAM 2024 பதிப்பில் வெளியிடப்படும்.
நன்றி
ஆதித்தன் ஜெயபாலன் (நோர்வேயியத் தமிழர்கள்/ ஈழத் தமிழர்கள்)
வரலாறு மற்றும் தொல்லியல் துறை தமிழ்ப் பேராசிரியர் (அநாமதேயமாக இருக்க விரும்புகிறார்)
எட்வின் ரொசாரியோ கேப்ரியல் (நோர்வேயியத் தமிழர்கள்/ ஈழத் தமிழர்கள்)
பேராசிரியர் பீட்டர் ஷால்க் (ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகம்)
Referanser:
“Minnedag for Mulliaikkal” (Lokalhistoriewiki, 11.08.2021): https://lokalhistoriewiki.no/wiki/Minnedag_for_Mullivaikkal
“Mullivaikkal Kanji” (Lokalhistoriewiki, 12.05.2023): https://lokalhistoriewiki.no/wiki/Mullivaikkal_Kanji
“15 years today – Thousands of British Tamils occupy Parliament Square as Sri Lanka shells No Fire Zone” (Tamil Guardian, 06.04.2024): https://www.instagram.com/p/C5a_MkkNU9Z/?igsh=MWhwa3ZzNHA3b3Yzcw%3D%3D&img_index=1
Tamil Guardian. (2021). 12 years today – A massacre in Mullivaikkal. Retrieved from https://www.tamilguardian.com/content/12-years-today-massacre-mullivaikkal.
BBC News. (2022). How do you define genocide?. Retrieved from https://www.bbc.com/news/world-11108059.
Ontario. (2022). Ontario Helping Tamil Students Succeed. Retrieved from https://news.ontario.ca/en/release/1001501/ontario-helping-tamil-students-succeed.
Tamil Guardian. (2022). Ontario Government announces $50,000 of funding to tackle mental health and intergenerational trauma caused by the Tamil Genocide. Retrieved from https://www.tamilguardian.com/content/ontario-government-announces-50000-funding-tackle-mental-health-and-intergenerational-trauma.
TamilNet. (2021). Colombo destroys Mu’l’livaaykkaal memorial monument at Jaffna University. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39965.
Tamil Guardian. (2021). Replacement Mullivaikkal memorial unveiled at Jaffna University. Retrieved from https://www.tamilguardian.com/content/replacement-mullivaikkal-memorial-unveiled-jaffna-university
புதுப்பிப்பு│Update: 14.05.2024



