தமிழ் புலம்பெயர்ந்தோர் ஐரோப்பா│Tamil Diaspora Europe

தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் விபரப் பட்டியல்
இது தமிழ் சமூக மற்றும் பங்கேற்பு காப்பக செயல்பாடுகளின் (community and participatory archives) ஒரு பட்டியல். உலகளாவிய ரீதியில் நீங்கள் அறிந்த ஏனைய தமிழர் சுவடிகள் சேகரித்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் தகவல்களை எமக்கு அறியத்தாருங்கள்.
TAMILS DOCUMENTATION AND ARCHIVING ACTIVITIES CATALOGUE
This is a catalogue of community and participatory archives activities of Tamils. Please let us know other Tamil documentation and preservation activities around the world to include in this catalogue.

ஆவணகம்Avanagam



தமிழ் மரபு அறக்கட்டளை│Tamil Heritage Foundation International (THFi)


தமிழர் களறி │Tamils Kalary

Verein Saivanerikoodam is A non-profit, charitable saivam religious organisation formed in 1994.
This organisation started “Tamils kalary” (தமிழர் களறி), in 2019. It is a Tamils history library and archive.

In a meeting with The Dalai Llama, Sivarusi. Sasikumar Tharmalingam, who works at the Verein Saivanerikoodam, told him that the Tamils, like his own people, were aimlessly around this globe in search of refuge. The Nobel peace prize-winning man asked: but Tamils didn’t come to Sri Lanka before they were sent to pick tea there by the British right? I corrected him saying that we are the native people of the country. The fact that such a renowned diplomat like the Dalai Llama knew so little of our ancient people, made and impact, and which led to the birth of the Tamils Kalary with contributions from many hard working volunteers.
Switzerland.


ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும் │European Tamil Documentation
and Research Centre – ETDRC


 தமிழ் அருங்காட்சியகம் 01.11.2019 அன்று பிரித்தானிய அரசின் தனியார் மற்றும் சமூக  அமைப்புக்களைப்  பதிவு செய்யும் நிறுவனத்தில் (company house) பதிவு செய்யப்பட்டது. தமிழ் மொழியின் தொன்மை , மரபு, பண்பாடு, வாழ்வியல், வரலாறு மற்றும் அரசியல் தகவல்களை சேகரித்து பரப்புவதை நோக்காகக் கொண்டுள்ளது.
பிரித்தானியா.

The Tamil Museum was registered on 01.11.2019 at the British Government Company house. The Tamil Museum aims to collect and disseminate information on the antiquity of the Tamil language, heritage, culture, life, history and politics.
Britain.


இந்த இணையத்தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்கள் மற்றும் செவ்விகள் ஆகிய ஆவணங்களின் எண்ணிமப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளம் 14.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியம்.

This website contains digital dissemination of the archival works and interviews of “Voice of the Nation” Anton Balasingham. This site was started on 14th December 2020.
United Kingdom.


யனவரி 2012 இல், லண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாய்மொழி வரலாறுகளை சேகரிக்க Race on the Agenda (ROTA) இற்கு Heritage Lottery Fund நிதியத்தால் நிதி உதவி வழங்கப்பட்டது. முதன்மையாக ஹவுன்ஸ்லோ அல்லது அதனைச் சுற்றி உள்ள இடத்தில் வசிப்பவர்கள் மற்றும் மேற்கு லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரின் நினைவுகளில் இருக்கும் வரலாறு மற்றும் அனுபவங்கள் பதிவு செய்தனர்.
ஐக்கிய இராச்சியம்.

In January 2012, Race on the Agenda (ROTA) was awarded a grant by the Heritage Lottery Fund to collect oral histories of Sri Lankan Tamils in London. The history and experiences held in the memories of Sri Lankan
Tamils living in London, primarily those living in or with links to the Hounslow
area and west London.
The United Kingdom.


National Museum of Eelam ஜெயவிஷ்னி பிரான்சிஸ் ஜெயரத்தினம் (Jeyavishni Francis Jeyaratnam) மற்றும் சைமன்-பியர் காஃப்டியர் (Simon-Pierre Coftier) ஆல் யனவரி 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொருட்கள் (artefacts), காப்பக ஆவணங்கள் மற்றும் ஒலியும் ஒளியும் ஆவணங்களின் தனித்துவமான தொகுப்பு மூலம், தேசிய அருங்காட்சியகம் ஈழம் (National Museum of Eelam), புலம்பெயர் தமிழரின் வரலாறு, அடையாளம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்துகிறது.
பிரான்சு.





இவர் நோர்வே வாழ் தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர். தனது ஆய்வு மற்றும் எழுத்துப் பயணத்தில் பெற்ற ஆயிரக்கணக்கான நூல்களை, ஆவணங்களையும், காகித வடிவிலும் எண்ணிம வடிவிலும் சேகரித்து வருகிறார். 1992ம் ஆண்டு எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் தனது பயணத்தைத் ஆரம்பித்த இவர் 2012ம் ஆண்டு “நமது மலையகம்” எனும் இணையத்தளத்தை ஆரம்பித்தார்.
நோர்வே.

He is a Norway based writer and researcher. He has been collecting thousands of books and documents received in his journey as a researcher and writer. They are both in paper and digital formats. He started his journey as a writer and researcher in 1992 and launched the website, namathumalayagam.com, in 2012.
Norway.





உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 19.04.2023