தமிழ் புலம்பெயர்ந்தோர் ஆசியா │Tamil Diaspora Asia

தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் விபரப் பட்டியல்
இது தமிழ் சமூக மற்றும் பங்கேற்பு காப்பக செயல்பாடுகளின் (community and participatory archives) ஒரு பட்டியல். உலகளாவிய ரீதியில் நீங்கள் அறிந்த ஏனைய தமிழர் சுவடிகள் சேகரித்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாடுகளின் தகவல்களை எமக்கு அறியத்தாருங்கள்.

TAMILS DOCUMENTATION AND ARCHIVING ACTIVITIES CATALOGUE
This is a catalogue of community and participatory archives activities of Tamils. Please let us know other Tamil documentation and preservation activities around the world to include in this catalogue.

கடல் தாண்டிய கதைகள்│Tamizh Tales

கடல் தாண்டிய கதைகள் யூன் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு படவரி பக்கம் மட்டுமல்ல, இது ஒரு சமூகம் ஆகும். தமிழர்கள் தமது கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அடையாளம் காணவும் ஒரு இடம் இருக்க வேண்டும் என்று தொடங்கப்பட்டது. இது நமது சொந்த வரலாறு, பண்பாடு, இலக்கியம், நடைமுறைகள் மற்றும் பலவற்றைப் பற்றி மேலும் அறிய ஒரு இடமாகவும் செயல்படுகிறது. இது பாரபட்சம் இல்லாத ஒரு இடம். இது இணைக்க மற்றும் இணைக்கப்பட்டதாக உணர ஒரு இடம்.
சிங்கப்பூர்.

Tamizh tales was started in June 2020. It is not just an Instagram page, it’s a community. It was started so that Tamils could have a place to share their stories and identify with each other. It also serves as a space to learn more about our own history, culture, literature, practices and more. It’s a place free of judgement, a place to connect and feel connected.
Singapore.


உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 07.02.2022